மதியழகன் என்ற கோழை தன்னிடம் விவாதம் செய்ய வல்லினம் குழுவுக்கு தைரியம் இல்லை என்று கொக்கரித்துக் கொண்டிருந்தான். வல்லினத்தில் ஆகக் கடைசியாக இணைந்த நான் “சரி வா. நேரடியா விவாதிக்கலாம்” என்று மூன்று முறை அவனை அழைத்துவிட்டேன். வரமாட்டேன் என ஓடி ஒழிகிறான். அவனிடம் விவாதிக்க நான் பண்பாடு கற்க வேண்டுமாம். ஒரு கோழை, முட்டாள் சத்தமிட்டுதான் பேசுவான் என இன்று அறிந்துகொள்ள முடிந்தது. நான் ஓர்மையில் யாரையும் அழைப்பதில்லை. ஆனால், கருத்து விவாதத்தைமீறி தனிமனித அவதூறு செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்க அவசியமில்லை. தனிமனிதனான என்னிடமே விவாதத்துக்கு வர தயங்கும் அவன், வல்லினம் குழுவை விவாதத்துக்கு அழைப்பதெல்லாம் இவ்வருடத்தின் சிறந்த நகைச்சுவை. எனவே, இத்துடன் முடித்துக் கொள்கிறேன். கோழைகளை நோக்கி வாளை சுழற்ற முடியாது அல்லவா.
(Visited 126 times, 1 visits today)