எதிர்வினை 4: அறிவிலார் தீங்கு – விஜயலட்சுமி

indexமதியழகன் – நவீன் விவாதத்தை வாசித்தேன்.  கடைசியாக நேற்று அவர் என்னைப் பற்றி செய்த அவதூறையும் நண்பர்கள் அனுப்பினர். அனுப்பியிருக்க வேண்டாம். முட்டாள்களின் புலம்பலை, நேரடி வாதத்திற்கு வரத்தயங்கும் கோழைகளின் முகநூல் பதிவை வாசிப்பது வீண்.

நான் கராத்தே சண்டைப் போட்டிகளைப் பார்ப்பதுண்டு. அதில் படுபயங்கரமாக அடிப்பட்டு கோதாவில் இருந்து வெளியே விழும் ஒருவர் வெளியே நின்றபடி ஒற்றை விரலைக் காட்டி, கொச்சை மொழி பேசி, கத்தி, திட்டி என்ன செய்தாலும் அது பத்திரிகை செய்திதான். அது சுற்றி உள்ளவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. ஆனால் அவன் எப்போதுமே வீரனாகிவிட முடியாது. அது தோற்று அவமானம் அடைந்தவர்களின் கூச்சல். அந்தக்கூச்சலுக்குக் கைத்தட்ட ஆள் இருக்கும். குரங்கு குட்டிக்கரணம் அடிக்கும் போது கைத்தட்டுவதில்லையா.

முகநூல் உரையாடலை யாரிடம் வளர்க்கிறோம் என்பது முக்கியம். குடும்பங்களில் ஆண்களுக்கிடையில் சண்டை வரும்போது எதிராளி வீட்டு பெண்களை, குழந்தைகளை யார் தாக்க முனைகிறார்களோ, தாக்குவதன் வழி எதிராளியை பலவீனம் அடைய செய்கிறார்களோ அவர்களின் கோழைத்தனத்தை ஊர் அறியும். அதைதான் மதியழகன் செய்துள்ளார். தனது கோழைத்தனத்தை நிரூபிக்க நவீனிடம் பேச முடியாமல் அவதூறு செய்ய முயன்றுள்ளார். இதுதான் தெருச்சண்டைக்காரர்களின் உத்தி. அவர்கள் விரும்புவது கோதாவில் நிபுணத்துவ மோதல் அல்ல. இந்தக்கூச்சலை. இதில் நான் ஈடுபடுவதில்லை. வல்லினம் நண்பர்களும் ஈடுபட வேண்டாம் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளிக்கு சாதகமாகப் பேசுவதாலேயே அதில் ஒருவர் பெண்ணாக இன்னொருவர் ஆணாக இருக்கும் பட்சத்தில் அதை நாசுக்காக கொச்சைப்படுத்த விளையும் ஒருவரிடம் பேச ஒன்றுமே இல்லை. முகநூல் முட்டாள்கள் அவரை தங்கள் ஆளாக அனைத்துக்கொள்ளட்டும்.

குறள்: இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை

பொருள்: வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

(Visited 83 times, 1 visits today)