எதிர்வினை 3: நட்பு நீக்கம் – அ.பாண்டியன்

imagesமதியழகன் நான் உங்களை என் முகநூல் நட்பில் இருந்து நீக்குகிறேன்.

இப்படி அறிவிப்பை எழுதிய பிறகு உங்களை நீக்குவதே சரியாக இருக்கும். அதன்வழி, பயந்தவன், நேர்மையற்றவன், கோழை என்ற வசைகளை நீங்கள் விரையமாக்காமல் இருக்கலாம் அல்லவா.

அதற்கு முன்…

நான் உசிப்பிவிடப்படுவதாக எழுதுவதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு என் எதிர்காலம் பற்றி பரிவுகொள்வதும், உங்கள் இலவச ஆலோசனைகளும் என்னைப் பற்றிய உங்கள் மதிப்பீட்டை தெளிவாக காட்டுகின்றன. நீங்கள் எனக்கு நண்பனாக இருக்க தகுதியற்றவர் என்பதற்கு அந்த மதிப்பீடு ஒன்றே போதுமானது. அதோடு அவற்றை ஒரு மிரட்டலாகவே நான் பார்கிறேன். ஆனால், யாரிடமும் நான் என் சொந்த புத்தியை நிரூபித்துக் கொண்டிருக்கும் நிலையில் இல்லை.

உரையாடலுக்கான எல்லா கதவுகளையும் நீங்கள் அடைத்து விட்டீர்கள். அல்லது உரையாடும் நோக்கமே உங்களுக்கு இல்லை.

இது இலக்கியத்துக்கு அப்பால் வெகுதூரம் சென்று விட்ட வம்படி. இதற்காக ஒரு சொல் எழுதுவதும் இனி வீண். இதுவே கடைசி பதிவு.

உங்கள் முதன்மையான சந்தேகம் ‘வண்டி சிறுகதை தலித்திய சிறுகதையா என்பதாகவே இருந்தது, சு. வேணுகோபால் அப்படி கூறியது உங்களுக்கு உவப்பானதாக இல்லை. முகநூலில் உங்கள் வினா மிகுந்த பாவனையோடு இருந்தாலும் அது இலக்கியம் தொடர்பில் வைக்கப்பட்ட வினா என்பதால் வல்லினத்தில் அதற்கான பதிலை நவீன் கொடுத்தார். அதுவும் உங்களுக்கு போதுமானதாக இல்லை. அதை முட்டாள்தனம் என மறுத்தீர்கள்,

‘உங்கள் யாரையும் விட நான் தலித்திய இலக்கியம் அதிகம் படித்துள்ளேன்’ என்று பிறகு நீங்களே சொல்லிக் கொள்வதால் நீங்கள் அத்துறையில் ஜாம்பவானாகத்தான் இருக்கவேண்டும். ஆகவே ஆரோக்கியமான இலக்கிய விவாதமாக அதை வளர்த்திருக்கவேண்டும் .

ஆனால், நவீனின் வல்லினம் நேர்காணலுக்கு நீங்கள் முகநூலில் எழுதிய எதிர்விணையை முடிந்தால் மீண்டும் வாசித்து பாருங்கள். அதில் நீங்கள் ‘வல்லினம் செட்’ என்று குறிப்பிட்டு எழுதிய பதிவுகளின் நோக்கம் என்னவென்று அதை வாசிப்பவர்கள் எல்லாருக்கும் தெரியும்.

நவீன் எழுதிய ஒரு சிறுகதையை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வல்லினம் குழுவினர் என்று குறிப்பிட்டு கோழைகள், நேர்மையற்றவர்கள், என்றெல்லாம் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. நான் வல்லினத்தில் இயங்குகிறேன். நீங்கள் ‘வல்லினம் செட்’ என்று குறிப்பிட்டு சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என்னையும் உட்படுத்தியதே என்பதை நீங்கள் அறிந்தே எழுதினீர்கள். காரணம் உங்கள் தேவை வல்லினம் குழுவினரை provoke செய்வது. உங்கள் சீண்டலால் சீற்றம் அடைந்த யாராவது எதிர்விணை செய்தால் அதை பிடிமானமாக பிடித்துக் கொண்டு மேலும் முன்னேறி தெருச்சண்டையாக்கலாம் என்பது உங்கள் திட்டம். அதன்படியே நடந்தது.

உங்கள் முகநூல் பதிவின் கடைசி பகுதியைக் கடுமையாக கருதியதால், அதில் அவதூறு இருந்ததால், அந்த சாடல்களில் என்னையும் உட்படுத்தியே நீங்கள் எழுதியிருப்பதை நான் அறிந்ததால், இலக்கிய சர்சை என்ற பாவணையில் நீங்கள் செய்ய நினைக்கும் தீமையை உணர்ந்ததால், அதை குறிப்பிட்டு நான் உங்களுக்கு கடுமையாகவே எதிர்விணை எழுதினேன். அதன் ஒவ்வொரு சொல்லும் இப்போதும் உண்மையாகவே இருக்கிறது. ஆனால் அது உங்களுக்கு உங்கள் தவற்றை உணர்த்தவில்லை. அதை வம்பை வளர்க்கும் மூலதனமாக நீங்கள் ஆக்கிக் கொண்டது உங்கள் குணத்தை காட்டுகிறது. தொடர்ந்து களத்தில் இறங்கி கும்மாலம் போட்டீர்கள். ஒப்பீடுகளுடன் எனக்கு இலவச புத்திமதிகளைச் சொல்லத் தொடங்கினீர்கள்.

நீங்கள் இதைத்தான் விரும்பினீர்கள். இலக்கிய உரையாடலை அல்ல. அவதூறுகளை அள்ளிவீசும் தெருச்சண்டையத்தான் நீங்கள் இலக்கிய விவாதம் என்று புரிந்துகொண்டவர் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. உங்கள் அவதூறுகளையும் வம்புகளையும் இனி தடையின்றி தொடரலாம். பாதுகாத்து வைத்து மீண்டும் வேறு சூழலை உருவாக்கி வம்பை வளர்க்கலாம். ஆனால் அதை பார்க்கவோ கேட்கவோ எனக்கு ஆர்வம் இல்லை. தனிப்பட்ட முறையில் இதற்கெல்லாம் நேரமோ அவகாசமோ எனக்கு இல்லை.

தாங்காக் மா.ராமையா யார் என்றே அறியாதவர் மலேசிய இலக்கிய போக்கை பற்றி விவாதிப்பதும் அதை நேரம் செலவிட்டு நாம் வாசிப்பதும் கொடுமைதான்

‘வண்டி ஏன் தலித்திய சிறுகதை அல்ல’ அல்லது ‘மலேசியாவில் தலித்திய இலக்கியம் என்று கூறுவது எதனால் ஏற்புடையதாகாது’ என்ற தலைப்பில் உங்களால் முடிந்தால் ஒரு நல்ல ‘தரமான’ இலக்கிய கட்டுரை எழுதி எங்காவது பதிவிட முடிந்தால் அதை முதலில் செய்யுங்கள். ஒரு நூலாக எழுத முடிந்தால் அது மேலும் சிறப்பு. யாருக்காவது பயன்படும். தலித்திய இலக்கியத்தை அறிந்த ஒரு ஜாம்பவானின் எழுத்து என்ற மரியாதையுடன் அதை நானே நேரம் ஒதுக்கி வாசித்துக் கொள்கிறேன்.

மற்றபடி, உங்கள் வெட்டிப் பேச்சுகளையும் வீண் சவடால்களையும், இலவச புத்திமதிகளையும், சுவாதீனமற்ற ஹாஹா சிரிப்புகளையும், இமோஜிக்ளையும் பார்த்துக் கொண்டிருப்பதற்காக நான் முகநூலில் இல்லை.

உங்கள் நட்பு தேவை இல்லை என்று பொதுவில் கூறிவிட்டே போகிறேன். ஆகவே என் பெயரை பயன்படுத்தி இனி முகநூலில் பதிவுகள் எழுதுவதை நிறுத்தில் கொள்ளவும்.

அ.பாண்டியன்

(Visited 46 times, 1 visits today)