முகநூலில் வல்லினத்துக்கு எதிராகப் பிதற்றிக் கொண்டிருக்கும் மதியழகன் எனும் நபர், வல்லினத்தின் தோற்றுனரான நவீனையும் வல்லினக் குழுவினரையும் குறிவைத்து பித்துப் பிடித்தவர் போல் எழுதிக் கொண்டு வருவதை இன்று பொறுமையாக வாசித்தேன். பைத்தியங்கள் இப்படித்தான் எழுதுமா? என்று கேட்கும் அளவுக்கு அவருடை முகநூல் எழுத்து எல்லையை மீறி, அவரையே அவர் முட்டாள் எனக்காட்டிக்கொண்டு ஆடும் அளவுக்குச் சென்றுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவருக்கு லைக்கிடும் நண்பர்கள் அவரது குரங்கு சேஷ்டைகள் தொடர வேண்டும் என விரும்பியே உசுப்பேத்துகின்றனர். அவர்களும் பொழுது போக வேண்டும் இல்லையா? ஆனால் குரங்குகளுக்கு தான் ஒரு கேலிப்பொருள் என எப்போதும் தெரிவதில்லை. சிலசமையம் அது குறியைக் காட்டி பொதுவில் மூத்திரம் அடிக்கும். அனைவரும் ரசித்துச் சிரிப்பர். மதியழகன் அதைதான் செய்கிறார். விவாதம் என்ன சுச்சா பெய்கிறார். அதை லைக்கிட்டு ரசிக்கின்றனர்.
மலேசிய நவீன இலக்கியச் சூழலில் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் வல்லினத்தின் மீது மதியழகன் வெறியோடு இருப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் ஒன்றுதான்.
உழைப்பவர்களைக் கண்டு சோம்பித்திரியும் குணத்திற்கு ஏற்படும் காழ்ப்புணர்ச்சிதான். மதியழகனின் மதிகெட்ட எழுத்துக்களைக் சட்டை செய்யாமல் இருக்கும் வல்லினத்தைக் கோழை என்று அவர் கூறி வருவது, தெருவாய் சண்டைக்கு இழுக்கும் பாணியாகப் பார்க்கிறேன்.
பொதுவில் இயங்கும் ஒரு பெண்ணை ஓர் ஆணுடன் இணைத்து வைத்து அவதூறு செய்வது அறிவு போதாமையின் ஆற்றாமை என்றே நான் கருதுகிறேன். ஆம். அவரது திட்டமே வீதி சண்டைக்கு வல்லினம் குழுவை இழுப்பதுதான். அதற்கும் ஒரு காரணம் உண்டு.
வரலாற்றுச்சுருக்கம்:
கடந்த தேர்தலின் போது மதியழகன் முகநூல் ஹீரோ ஆனார். பல தளங்களை வாசித்து தேர்தல் கணிப்பு செய்தார். அதை பலரும் ஆர்வமுடன் வாசிக்க தன்னை பெரிய எழுத்தாளராக நினைத்துக்கொண்டார். விளைவு, தேர்தல் முடிந்தபோது என்ன எழுதுவது என தெரியவில்லை. பல மலாய், ஆங்கில புளோக் எழுத்தாளர்கள் அவரவர் வேலையை பார்க்க போய்விட்டனர். எனவே தன்னை இன்னமும் எழுத்தாளனாக நம்பும் அடிவருடிகளை குஷிப்படுத்த உளரத்தொடங்கினார். அதற்கு முன்பும் அவர் செய்தவை ஆதாரமற்ற உளரல்கள்தான். ஆனால் இம்முறை வாசிப்பு பற்றி பேசப்போக விஜயலட்சுமி அதன் ஆதாரமற்ற தன்மையைச் சுட்டிக்காட்டினார். அதற்கு மதியழகன் விஜயலட்சுமியை கிண்டலாகப் புரக்கணிக்க நவீன் ‘போலி அறிவுவாதப் புற்று’ எனும் கட்டுரை எழுதி மதியழகன் ஒரு கோச டப்பா என நிரூபித்தார். தான் கோச டப்பா என்பதை ஊரார் அறிந்துகொண்டதை அறிந்த மதியழகன் மீண்டும் மீண்டும் வல்லினத்தை சீண்ட ஆரம்பித்து இப்போது அவர் அறிவுக்கு எட்டாத தலித் இலக்கியம் பற்றி உளரிக்கொண்டிருக்கிறார்.
சரி,
விஜயலெட்சுமி மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ஒருவர் மேல் அத்துமீறி பேசப்படும் பேச்சுக்கு எதிர்வினையாற்றுவது மனிதத் தன்மை. இதற்கு முன் வல்லினம் நண்பர்கள் மேல் அவதூறு, மலேசிய இலக்கியச் சூழல், மணிமன்ற நடவடிக்கை, என அனைத்திற்குமே நவீனுடைய எதிர்வினை முதன்மையாக இருப்பதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். முட்டாள்களின், கீழ்மையானவர்களின் குரல் உயரும்போது அது எளியவர்களை மக்களின் நன்மையை பாதிக்கும் போது அதற்கு எதிராகக் குரல் கொடுப்பது படைப்பாளியின் கடமை. அந்த மனிதத் தன்மையைக் கொச்சைப்படுத்திப் பேசி எக்காளமாய் சிரிக்கும் மதியழகன் போன்ற ஆண் வர்க்கங்கள் பெண்களைக் கேவலப்படுத்திப் பேசியே ஜீரணமடைபவர்கள்.
கருத்தின் அடிப்படையில் பேச வக்கற்று தனிநபர் சாடலை முன்வைக்கும் அளவிற்கு மதியழகனின் மனப்பிறழ்வுத்தன்மை ஒரு கடும் நோயாக மாறிக் கொண்டு வருவதை அவருடைய முகநூல் எழுத்தில் தெரிகிறது.
தனக்கு பேசும் போது திக்கும் என பல கட்டுரைகளில் நவீனே எழுதியுள்ளார். மதியழகன் அதையும் கிண்டல் அடித்துள்ளார். இதுதான் கீழ்மை. பிறப்பில் உள்ள குறைபாட்டை கேலி செய்வது. திக்கிப் பேசாமல் பேசுபவர்களைக் காட்டிலும் தன்னுடைய சிந்தனை ஆற்றலால் காரியங்களை சாதித்து வரும் நவீனின் செயலூக்கம் பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளதால் எதையும் சாதிக்காமல் பயாஸ்கோப் படத்தை முகநூல் மூலம் காட்டி அதன் மூலம் பொது கவனத்தை ஈர்த்துவிடலாம் என்று எண்ணி புதிய புதிய திரைக்கதைகளை எழுதித் தள்ளும் மதியழகன் அவருடைய படத் துறையில் இந்த ஆர்வத்தையும் உழைப்பையும் காட்டி இருந்தால் ஒவ்வொரு பொங்கலுக்குள் ஒரு குறும்படத்தையாவது இயக்கி இருப்பார் .
மலேசிய இலக்கியவாதிகளின் ஆளுமைகளைப் பதிவு செய்து குறுந்தட்டாக வெளியீடு செய்துவரும் வல்லினத்தினரிடமிருந்து கற்றுக் கொள்ள கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தாலும் நல்ல குறும்படத்தையாவது இயக்கி காணொளியில் பரவவிட்டிருக்கலாம். எதையுமே செய்யாமல் முகநூலில் அமர்ந்து கொண்டு, செயல்படுபவர்களை நோண்டுவது
மனப்பிறழ்வின் செயல்பாடாகத்தான் பார்க்கிறேன்.
மதியழகன் ஒரு பொய்க்காரன் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்லலாம். முதலாவது, தன்னை திரைக்கதை எழுத்தாளர் & திரைப்பட இயக்குநர் என்றும் மலேசியத் திரைப்பட துறையில் இயங்குவதாகவும் முகநூலில் எழுதியுள்ளார். மதியழகன் இயக்கிய அல்லது அவர் திரைக்கதையில் உதயமான ஒரு படத்தை சொன்னால் நாமெல்லாம் பார்த்து மகிழலலாம். ஆனால் அந்தத் துறையில் சோபிக்க முடியாத அவர் தன்னை அவ்வாறு கூறிக்கொண்டு திரைப்பட பட்டறை வேறு நடத்துகிறார். என்ன ஒரு முரண். அவர் பெயரே முரண்தான். மதி இல்லாதவர் மதி அழகானவர் என பெயர் வைத்துள்ளது போல உள்ளது.
அடுத்து முகநூலில் ஒரு கூற்றை மொழிந்துள்ளார். நவீன் சிறுகதைகளை 20 பேர் கூட வாசிப்பதில்லையாம். அப்படியா என அவரது தளம் (vallinam.com.my/navin) சென்றேன். அதில் அதிகம் வாசிக்கப்பட்டவை எனும் ஒரு பகுதி உண்டு. அதில் ஆக அதிகம் வாசிக்கப்பட்டதாக மேலே போயாக் எனும் சிறுகதை இருந்தது. வாசித்தவர்கள் எண்ணிக்கை 2114. யார் வேண்டுமானாலும் இதை பார்த்து உறுதி செய்யலாம். இது கணினி காட்டும் கணக்கு. மதியழகன் போல பொய்க்கணக்கு போடுவது அதில் சாத்தியம் இல்லை. இதேபோல வண்டி சிறுகதை – 534. ஜமால் – 546. (வல்லினம் அகப்பக்கத்தில் பிரசுரமாகி ஒரு மாதம் கடந்து புளோக்கில் மீள்பதிவிட்டப்பட்ட கதைகளேகூட 70 க்கும் மேற்பட்ட வாசகர்களைக் கொண்டுள்ளது)
அடுத்து யாவரும் பதிப்பில் வந்த ‘போயாக்’ சிறுகதை தொகுப்பு இரண்டாம் பதிப்புக்குச் செல்கிறது. அவரது முதல் தொகுப்பான ‘மண்டை ஓடி’ விற்றுத்தீர்ந்துவிட்டது.
நவீனை பாராட்ட வேண்டும் மதியழகனை தூற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல.
மதியழகன் ஒரு பொய்யன். பொய்யன் ஆதாரமில்லாமல் பொய்யை உமிழ்வான். எனவே அதை சீர்த்தூக்கி பார்ப்பது வாசகர்கள் கடமை. உண்மை தன்மையை தேடுவது அறுவுள்ளவர்களின் கடமை.
மதியழகன் ஒரு முட்டாள். அவரால் எப்போதும் கருத்துக்கான விவாதம் செய்ய முடியாது. எனவே வல்லினம் நண்பர்கள் அவரிடம் கருத்துரையாட வேண்டியதில்லை. விஜி, நவீன் போன்றவர்கள் அவரை புளோக் செய்தது சரி. மற்றவர்களும் அதை தொடர்ந்தால் நல்லது.
மதியழகன் ஒரு கையாளாகாதவர். அவர் இதுவரை தனது அடையாளமாகக் காட்டும் திரைத்துறையில் எதையும் சாதிக்கவில்லை. ஆனால் பட்டறை நடத்தி பணம் பறிக்கிறார். அல்லது பிறரை நடத்த வைத்து தன்னை இயக்குனராக அடையாளப்படுத்துகிறார்.
உண்மையில் நாம் மதியழகனை நினைத்து பரிதாபப்பட வேண்டும் என வல்லினம் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர் மனம் எவ்வாறு பிறழ்ந்துள்ளது என எதிர்வினையில் அவர் எழுதிய ஒரு வரி காட்டியது.
‘மதியழகன் என்பது புனைப்பெயர்’ என நவீன் எழுதியுள்ளதின் அர்த்தம் அவருக்கு அந்தப்பெயரின் அர்த்தம் பொருந்ததாது எனக் கிண்டல் அடிக்கிறார் நவீன் எனக்கூட தெரியாமல் தன்னை நவீன் ‘ஃபேக் ஐடி’ எனக்கூறியுள்ளதாக புலம்பியிருந்தார். முதலில் சிரித்து பின்னர் அமைதி காத்தேன். இவரிடமெல்லாம் வல்லினம் குழுவினர் பதில் சொல்ல வேண்டுமா? பாவம். மனநோயாளி. எங்காவது யாரையாவது கடித்து வைக்கப் போகிறார்.
இரா. சரவண தீர்த்தா
(Visited 76 times, 1 visits today)