நேற்றைக்கு நேற்று
கடலில் ரொட்டி துண்டுகள் போட்டவுடன்
குவிந்த கூட்டம் பார்த்து
மாயா தானும்
மீன் வளர்க்க வேண்டுமென்றாள்.
நேற்று
ஒரு மீன் வளர்க்க
தொட்டி வாங்கினேன்…
மீன் என்றால்
கடல் மீன்
அதற்கு செதில் இருக்கும்
வால் இருக்கும்
செவுள் இருக்கும்
மிரண்ட கண்கள்
அசராத உடல்
அழகான நிறம்
மீன் தொட்டியில்
சில கற்களைக் குவித்தேன்.
வெள்ளை, சாம்பல், கருப்பு
தொட்டியின் பின்புறம்
கடல்புற காட்சியை ஒட்டினேன்
உள்ளே கடல் செடிகளை நட்டேன்
மீன் முட்டையிட
பதுங்கிகொள்ள
உணவுண்ண
பிராண குழாயை உள்ளே விட்டதும்
நீர் பலூன் விட்டது
மீன் தொட்டி தயாரானப்பின்தான்
மாயா உதடு பிதுக்கினாள்
உள்ளே ரொட்டி துண்டுகள் போட்டாள்
தொட்டியின் பின்புறம் துளை செய்தாள்
தொட்டிக்கும் கடலுக்குமான ஒரு மாயப்பாலம் உருவாக்கினாள்
என்றாவது ஒருநாள் கடல் மீன்கள்
தொட்டிக்குள் நுழைந்து
ரொட்டி தின்னும் என்றாள்.
12.3.2011
1.45 a.m
விண்ணிலே மீன்,
கண்ணிலே மீன்
சாயா தெரியாததால்…
மாயாவின்
மாயமீன்.