இன்றெழுதும் இக்கவிதை
ஓர் இறப்புக்கு
முன்பானதல்ல…
பிரிவின் துயரங்களைக்
கடத்தும் தோணியுமல்ல…
காதலின் உச்ச வன்மத்தை
தடுக்கும் சுவருமல்ல…
மௌனங்களை களைக்க முயலும்
கற்பனையல்ல…
நீ இல்லாததை நிரப்ப உருவாகும்
இன்னொரு நீ யல்ல…
கண்ணீருக்கான மாற்றுமல்ல…
இயலாமை விட்டுச்சென்ற
கோபமல்ல…
பெரும் தனிமைக்குப் பின்
உருவாகும் முதல் வார்த்தை
பெரும் அழுகைக்குப் பின்
உருவாகும் முதல் சிரிப்பு
பெரும் புணர்ச்சிக்குப் பின்
உருவாகும் முதல் வெட்கம்
தரும்
ஒரு சிறிய தடுமாற்றம்.
12.3.2011
2.30
(Visited 74 times, 1 visits today)