நாளை 31.3.2011 தமிழகத்திற்குச் செல்கிறேன். உடன் நண்பர் சிவா. செல்லும் முக்கிய நோக்கம் இயக்குநர்களைச் சந்திப்பது என இப்போதைக்கு முடிவு செய்துள்ளோம். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் எழுத்தாளர்களையும் சந்திப்பதாகத் திட்டம். சுவாரசியத்தில் திட்டம் அப்படியே தலைகீழ் ஆகிவிடுமோ என அச்சமாக உள்ளது. 4.4.2011 திரும்பிவிடுவோம். அநேகமா நான் தனியனாய் திரும்பலாம். சிவா அங்கேயே தங்கிவிட இரண்டு விடயங்கள் காரணங்க இருக்கலாம் .
1. உறுதியாக திரைப்படத்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைப்பது.
2. இணைந்து வாழ பெண் கிடைப்பது
எப்படி இருந்தாலும் பயணம் தரப்போகும் அனுபவங்கள் சுவாரசியமானவை. அவை எதற்கு உதவாவிட்டாலும் ஒரு சில கட்டுரைகள் உருவாக வகைச்செய்யலாம். “சென்று வந்தவுடன் பயணக்கட்டுரை எழுதி எங்களைக் கொல்வீர்களே” என்றார் பாலமுருகன். அதை நினைத்தால்தான் எனக்கும் கிலியாக உள்ளது என்றேன்.
ஒன்றை மட்டும் திரும்ப திரும்ப மனதில் சொல்லிக்கொள்கிறேன். திரும்பி வந்தப்பின் எந்த ஆளுமைக்கும் மலேசியாவில் ரசிகர் மன்றம் மட்டும் வைத்துவிடக்கூடாது.
பயணம் நல்லபடியாக அமையட்டும் நவீன். கிடைக்கும் நான்கு நாட்களில் எல்லாரையும் பார்த்து நேரத்தை வீணடிக்காமல் முக்கியமானவர்களைச் சந்தியுங்கள். சிவாவை அங்கேயே விட்டுவிடாதீர்கள். திட்டமிட்டுக்கூட பிறகு மீண்டும் செல்லலாம்.
நீங்கள் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பும் அந்தப் பயணக் கட்டுரைகள் குறித்த பயமும் ஒன்றுசேர எனக்குள். வாழ்த்துகள் நண்பர்களே.(என்னைத் தனியா விட்டுட்டு இந்தியா போறிங்களே….)