வணக்கம் வல்லினம் வாசகர்களே! கொஞ்ச காலம் முன்பு சை.பீருக்கு நமது வல்லினம் வெளியிட்ட சிறப்பிதழில் அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டு மழையை மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது அதே மாதிரியான ஒரு பாராட்டு மழையை சித்தியவான் முனியாண்டி சிறப்பிதழில் அவருக்கு வழங்க வல்லினம் முனைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது! சை.பீர் சாமிவேலுவை வைத்து நடத்திய புத்தக வியாபாரத்தை அத்தனை சிறப்பாகப் பாராட்டியிருந்த வல்லினம் – இப்போது சாமிவேலு + ரத்தினவள்ளி அம்மையார் கூட்டணியில் முனியாண்டி நடத்தியுள்ள ராமனின் நிறங்கள் புத்தக வெளியீட்டை சும்மா விடுவார்களா என்ன? குறைந்தது ‘are u so cheap mr muni?’ என்றாவது பாராட்ட தவற மாட்டார்கள் அல்லவா? தங்களை நேர்மையான பாராபட்சம் அற்ற விமர்சகர்களாக நிரூபிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போமே. நன்றி. ஆகஸ்டு மீண்டும் சந்திப்போமா?
அன்புடன் வல்லினம் வாசகர் வட்டம்
மேற்கண்டவாறு ஒரு அன்பர் கொஞ்ச காலமாகவே 0107700210 என்ற எண்ணிலிருந்து குறுந்தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார். யாரென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்… ‘அட அவனா நீ’ என சிரிப்பு வந்தது. இவ்வளவு கேவலமான நக்கலை அவரால் மட்டும்தான் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மெய்ப்பிக்கப்பட்டது. தனது அடையாளத்தைக் காட்ட தைரியமில்லாத அந்தக் கோழைக்கும் சேர்த்து சில தகவல்களை இங்குச் சொல்லியாக வேண்டியுள்ளது.
முதலில் செப்டம்பர் 2009 வல்லினம் இதழில் சை.பீருக்கு எதிரான கட்டுரைகள் பிரசுரித்ததில் இன்றளவும் எனக்கு மாற்று கருத்து இல்லை. திடீர் ஞானமெல்லாம் பிறந்து நான் வருந்தவும் இல்லை. சமூகத்தில் தன்னை ஓர் எழுத்துப் போராளியாக பாவனை காட்டுபவர்கள் அதிகாரத்தின் முன் கூனி குறுகி நிர்க்கும் நிஜத் தோற்றம் மட்டும் அது. அவ்வாறான சூழலுக்குத் தள்ளப்படுபவர் யார் என்பதும் இன்னொரு முக்கியமான விடயம்.
இன்று மலேசியாவில் குறைந்தது மாதம் ஒரு முறையாவது நூல் வெளியீடுகள் நடக்கின்றன. பலரும் அதில் அரசியல்வாதிகளையே நம்பி வெளியிடுகின்றனர். அவர்களுக்கு எதிராக மாதம் தோறும் எதிர்வினைகளை வல்லினம் முன்வைத்ததில்லை. ஆனால் சை.பீரின் நிலை அதுவல்ல. எப்படிப் பார்த்தாலும் மலேசிய இலக்கியத்தில் அவர் பங்களிப்பு கணிசமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. பலராலும் அறியப்பட்டவரும் கூட. வாசகர் பரப்பும் உள்ளவர். இதையெல்லாம் விட தனது நூலின் முன்னுரையில் பெரியார் ,சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் தனக்கு முன்னோடிகள் எனச் சொல்லியிருந்தார். ஆனால் அம்மேடையில் அவர் பேசியதும், அவர் சாமிவேலுவின் கொள்கைப் பரப்புச் செயலாளரோ என சிந்திக்க வைத்தது. எழுத்தாளனின் நேர்மை மீதான எதிர்வினையாக அவ்விதழில் இடம் பெற்ற கட்டுரைகள் இருந்தன. அவ்வளவுதான். மற்றபடி சை.பீருக்கும் வல்லினத்துக்கும் தனிப்பட்ட விரோதங்கள் இல்லை. நாளையே சை.பீர் மலேசிய இலக்கிய வளர்ச்சிக்கு தனது பங்களிப்பாக ஏதேனும் செய்தால் அதை பாராட்டவும் எந்தத் தடையும் இல்லை.
இங்கு தலைவர்களை அழைப்பது குறித்தும் என் கருத்தைச் சொல்லிவிடலாம் என நினைக்கிறேன். இது குறித்து ஏற்கனவே சிவத்துக்கு எழுதிய எதிர்வினையில் குறிப்பிட்டுள்ளேன். அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாகச் சொல்பவர்கள், கலை இலக்கிய வளர்ச்சிக்காகத் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும். மலேசியாவில் மலாய்க்காரர்களுக்கு அவர்களின் மொழி , இலக்கியத்தை வளர்க்க ‘டேவான் பாஹாசா ‘ உள்ளது. அரசாங்க ஆதரவுடன் அவர்கள் நூல்களைப் பதிப்பிக்கிறார்கள். மொழி மாற்றம் செய்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு கௌரவிப்பும் வழங்குகிறார்கள். இதன் மூலம் ஒரு மலாய் எழுத்தாளன், புத்தக விநியோகம் குறித்த கவலை இல்லாமல் எழுதுவதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறான். ஆனால் நம் நிலை வேறு. எழுத்தாளன் எழுதி அதை அச்சுக்குக் கொண்டு சென்று வெளியீட்டு விழா நடத்தி, அதில் நட்டம் அடையாமல் இருக்க தலைவர்களுக்கு காக்கா பிடித்து, கடைசியில் விற்கும் 100 புத்தகம் போக மீதம் 900 தங்கியிருக்கும். அதை சுமந்து கொண்டு ஊர் ஊராக செல்லவேண்டும்.
மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கு இது போன்ற முயற்சிகளில் அக்கறையில்ல. அவர்களுக்கு கருணாநிதியும் வைரமுத்துவும்தான் முக்கியம். ஒரு வகையில் இதில் வெவ்வேறு அரசியல் காரணங்கள் ஒளிந்துள்ளது. மிக முக்கியமாக அரசியல்வாதிகளும் இது போன்ற நூல் வெளியீடுகளுக்குத் தலைமை வகிப்பதை விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு தரப்படும் பிரச்சார மேடை. அதை தங்கள் ‘சமூக அக்கறை’ குறித்து பேச பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்னும் இதை ஆழ்ந்து நோக்கினால்…’இதோ பார் சமூகத்துக்கு புத்தி சொல்வதாக…வாழ்வை காட்டுவதாக சொல்லும் எழுத்தாளன் என் முன்னே கூனி நிர்க்கிறான் பார்… நான் கொடுக்கும் பணத்தால்தான் …என் ஆதரவாளர்களால்தான் இங்கு இலக்கியம் வளர்கிறது பார்’ என பத்திரிகைகளுக்கு அவர்கள் தரும் செய்தி அது.
இதற்கு வழி அமைத்துக்கொடுப்பவர்கள் எழுத்தாளர்கள். அரசாங்கத்தில் நம்மைப் பிரதிநிதிப்பவர்களாகச் சொல்பவர்கள் அரசிடம் இருந்து இந்தியர்களுக்கான கலை இலக்கிய வளர்ச்சிக்குப் பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது கடமை. அல்லது முறையான நிர்வாகிகளைக் கொண்டு கலை இலக்கிய வளர்ச்சிக்கான அறவாரியம் ஏற்படுத்தி , தரமான நூல்களின் அச்சு செலவுகளை ஏற்கலாம். குறைந்த பட்சம் ஒரு நூல் அச்சானவுடன் அது நாட்டில் தமிழ் போதிக்கப்படுகின்ற கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றில் எளிதாகச் சென்று சேரும்படியாவது வழி செய்து கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் எழுத்தாளனின் சிரமங்கள் குறைந்து , படைப்புக்கான மனதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு செய்வது ம.இ.கா போன்ற கட்சிகளுக்கும் எளிதான விடயம்தான். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்தால் நட்டம் அவர்களுக்குத்தான்.
ஏதோ கொடை நெஞ்சர்கள் போல அவர்கள் காட்டும் படம் அதற்கு பின் ஒளிபரப்பாகாது. எழுத்தாளனின் நன்றி விசுவாசம் அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். மிக முக்கியமாக தங்கள் அரசியல் பிரச்சார மேடைகளை அவர்கள் இழக்க நேரலாம். இதை கருத்தில் கொண்டே அரசியல்வாதிகள் தொடர்ந்து எழுத்தாளர்கள் தங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என தொடர்ந்து விரும்புகிறார்கள்.
சுயசிந்தனை கொண்ட எந்த எழுத்தாளனும் அரசாங்கத்தில் அல்லது ம.இ.காவில் நம்மை பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகள் நமது கலை இலக்கிய வளர்ச்சிக்காகப் பங்காற்ற வேண்டியது அவர்கள் கடமை என உணர்ந்து அவர்கள் கடமையைச் செய்ய தூண்டுவான். அவ்வாறு செய்யாமல் போகும் பட்சத்தில் அதை மக்கள் முன் கொண்டு வருவான். தன் உரிமைக்காகப் போராடுவான். மாறாக விலை போக மாட்டான். கடமையை சேவை போல காட்ட ஒரு போதும் அனுமதிக்க மாட்டான். கடமையைச் செய்யும் அரசியல் வாதிக்கு இலக்கிய மேடை தரவும் மாட்டான். இங்கு நான் குறிப்பிடுவது இலக்கிய மேடைகள் குறித்துதான். இலக்கியத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாதவர்கள் மேடையில் அது குறித்து கருத்து சொல்வதோ, இலக்கியத்தரம் குறித்து பேசுவதோ நூலையே வாசிக்காமல் அது குறித்து பேசுவதோ, அல்லது தங்கள் சுயபுராணம் பாடுவதோ குறித்துதான். மற்றபடி சமூக முன்னெடுப்புகளுக்கு, அறிவார்ந்த விவாதங்களுக்கு முன்வரும் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளின் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
இப்போது கோ.முனியாண்டி பிரச்சனைக்கு வருவோம். கோ.முனியாண்டியில் சில சிறுகதைகள் என்னைக் கவர்ந்தவை. வல்லினத்தில் அவை ‘எடிட்’ செய்யப்பட்ட பின்னரே ஒவ்வொரு முறையும் பிரசுரம் கண்டது. தொடர்ந்து அவரது சிறுகதைகள் செரிவு செய்யப்பட்டால் நல்ல சிறுகதை தொகுப்பாகலாம் என்பது என் விருப்பம். மொழி ரீதியான சிக்கல் அவருக்கு இருந்தாலும் , சொல்வதற்கு ஒரு காலக்கட்டத்தின் வாழ்வு இருக்கிறது. அது தொகுக்கப்படும் போது தோட்டப்புற சிறுகதைகளுக்கான புதிய அடையாளம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் அவர் நாவல் என்ற பெயரில் வெளியிட்டது அவ்வாறானது அல்ல.
இன்னும் சொல்லப்போனால், அந்நாவல் வல்லினம் பதிப்பில் வெளியிட முதலில் முடிவானது. அந்நாவலை செரிவு செய்யும் பொறுப்பை யுவராஜன் ஏற்றார். நானும் வாசித்தேன். நான் வாசித்த தரமற்ற நாவல்களின் ஒன்றாகவே அது இருந்தது. யுவராஜனின் ‘எடிட்டிங்’ வேலை கோ.முனியாண்டிக்கு மனவருத்தம் கொடுத்திருக்க வேண்டும். வல்லினத்தில் பதிப்பிப்பதை அவர் விரும்பவில்லை. எடிட்டிங் இல்லாமல் அந்நாவலை நானும் பதிப்பிக்க முடியாது என்று கூறிவிட்டேன். பின்னர் அது இப்போது ‘ராமனின் நிறங்கள்’ என நாவல் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. நான் நூலாக்கம் கண்ட பிறகு இன்னும் வாசிக்காததால் அது குறித்து கருத்து கூற முடியாது. ஆனால் நூலாவதற்கு முன் அதை ஓர் இலக்கியப் பிரதியாக நான் கருதவில்லை. பிற்போக்குத் தனமான ஓர் எழுத்துக்குவியல் மட்டுமே அது.
ஓர் இலக்கியப் பிரதி இல்லாததை, இலக்கியவாதி அல்லாதவர்கள் வெளியிடுவதும் கொண்டாடுவதும் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
Allow me to express my frustration on this issue.Malaysia Nanban played an effective role during the deceased Chief Editors arena.There were lot of writers and writings were imported during that period and was officiated by the than MICs deputy President Mr.Subra who was the arch rival of Mr.Samy and a close friend of the editor than.It was Tamil Osai+ Malaysia Nanban versus Tamil Nesan.
Leave the writers a side,I pity them!Look at the elected representatives, they abused the local writers and glorified the imported ones,Mr.Vairamuthu was heavily promoted during that period.
A normal Tamil reader enjoys the short stories and poems that appears in Sunday publications;but what the editors did than?The writings were downplayed,the writers were identified according the papers they write.The poor writer left with no choice but to choose one. Kathal and Vallinam were infants than.
Rewards and recognition is not something new to a writer and a poet.Kindly visit the Sanga Kalam see how the poets were treated.Have a word with Cheran Chenguttavan,or Pandiya Mannan or Athiyaman, the writers and poets were given red carpets! Kambar enjoyed it, Avvai pratiyar praised it…
During MGRs rule he appointed Kavi Arasu Kannathasan as his official poet- Asana Kavinjar!
Traditionally the writers/poets had an good relationship with the rulers/palace.
We could see the tradition till this days, no doubt there are opportunist and crooks in every set up just like Saguni mama in Mahabaratham or Judas in Bible.We cant run away from the present day Brutus as well.
The politicians should be avoided at all coast for any launching even for cultural shows.The politicians are the obstacles who divides the writers and the writings!
First and foremost Tamil writers in Malaysia are not full time writers. They write in their spare time.This is even worse for female writers who who go to work and and do house-hold work.
most of these writers write to see their work in print. As there is no proper criticism on these works by qualified critics, they go on writing in the same old style wihout much improvement.
There was a time when writers were satisfied to see their writings in the papers and journals. But recently a trend has arisen where writers want to print their own books.As there is no proper avenue to do this, they do it themselves. But where is the market to sell these books? There are no publishers who could distribute these books throught the country.
Writers tried to sell their books through book-launching functions. With the help of local friends and relatves they look forward to a prominent politicians to buy the first book for a big sum.
Most of the time these politicians are not literary figures.They have to to be honoured in the right political manner. As they are accompanied by party members the literary event becomes a political meeting.
Writers soon learnt that inviting prominent politicians was a profitable business because they could even receive thousands of Ringgit for the first book.They are not bothered as to who reads the book, but in how much they could collect during the book-launching function.
Nowadays sub-standard books are being launched because of this sort of patronage by some prominent figures who are willing to donate huge amounts for their own name and fame.
Hence Malaysian Tamil writers have no other alternative than to woo these self styled philanthropists.In the bargain they are losing their self-respect.Even prominent writers are no exception in this regard.
Writing should be for the development and propagation of literature and not mooted for making easy money.
Books should be made available for the reading population and not only for a handful at the book-launching cermony.
As far as Syed Peer and Ko.Muniandy are concerned they are well established writers in this country.If their writings are considered as not literature then where else one can turn for true literature?
The reading population is meagre in numbers among the Tamil population.If writers do not encourage one another literature would suffer. It is high time writers stand united and find ways and means to publish books through proper outlets so that writers need not go begging as they are doing now…Dr.G.Johnson.
அன்புமிக்க டாக்டர். முதலில் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. அதில் பெரும்பான்மையானவற்றோடு நான் உடன் படுகிறேன். அல்லது நான் சொன்னதை வேறு பாணியில் நீங்கள் சொல்லியுள்ளதாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இதில் உங்களின் ஒரு கேள்விக்கான பதிலை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.
இன்று வாசிப்பு என்பதும் எழுத்து என்பதும் உலகமயமானதாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலோ அல்லது உலகின் எந்த மூலையிலும் இயக்கியத்தில் இயங்கும் ஒருவருடையா ஆக்கத்தையோ எளிதில் வாசித்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு வாசகன் அல்லது இலக்கிய விமர்சகன் தனது வாசிப்பில் பெற்ற ஒரு மொத்தமான அனுபவத்தின் வழியே பிரதியின் தரத்தைக் கணிக்கிறான். இது ஒருவகையில் அந்தரங்கமானது. ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். விவாதிப்பவரின் வாசிப்பு மற்றும் இலக்கிய அறிமுகங்களைப் பொருத்தது அது.
நான் பொதுவாக மலேசியப் பிரதிகளைத் தமிழகப் பிரதிகளோடு ஒப்பிட்டு பேசுவதில்லை. ஆனால் என் வாசிப்பில் நான் நல்ல பிரதிகளாக நம்பும் சில மலேசிய இலக்கியத்தின் அடைவை அவை அடையவில்லை என உறுதியாகச் சொல்ல முடியும். அது மேலோட்டமான உணர்ச்சிகளையும் வர்ணனைகளை மட்டுமே நம்பியது. முன்பே நான் குறிப்பிட்டது போல அவர் சிறுகதைகளில் எனக்கு நம்பிக்கை உண்டு.
கோ.முனியாண்டி நாவல் குறித்து நான் விரிவாகவே எழுதுகிறேன். விரைவில்…