நாளை எழுத்தாளர் ஜெயமோகன் அறுபது வயதை நிறைவடைகிறார். வயது என்பது கூடுதலாக ஒரு வருடம். எல்லோருக்குமே அப்படி ஒரு வயது வரக்கூடியதுதான். ஆனால் ஆளுமைகளை நாம் தொகுத்துப் பார்க்கவும் அவர்களை இன்னொரு தலைமுறைக்கு மேலும் தீவிரமாகக் கடத்திச்செல்லவும் அது ஒரு சந்தர்ப்பம். ஜெயமோகன் போன்ற மாபெரும் ஆளுமையைக் கொண்டாட அப்படியான சந்தர்ப்பங்களைத் தவறவிடுதல் கூடாது. அவருக்கான ஒரு களஞ்சியத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆவலை முதலில் சொன்னது சு. வேணுகோபாலிடம். அவருக்கே அப்படி ஒரு திட்டம் இருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.
Continue readingஜெயமோகன்
கலையும் கடமாவும்: ஊட்டி முகாம் அனுபவம்
‘வல்லினம் விமர்சனப் போட்டி’ நடத்த வேண்டும் எனத் தோன்றியபோது வெற்றியாளர்களை ஊட்டி முகாமில் பங்கெடுக்கச் செய்வதே தகுந்த பரிசாக இருக்கும் என முடிவெடுத்தேன். ஊட்டி முகாம் வாசிப்பு முறையை நெறிப்படுத்தக்கூடியது. ஒரு படைப்பை அணுகும் விதத்தை போதிக்கக்கூடியது. ஒரு படைப்பாளிக்கு அதுவே சரியான பரிசாக இருக்க முடியும். அண்ணன் அரங்கசாமியிடம் கேட்டபோது உடனடியாகச் சம்மதித்தார். நிகழ்ச்சி முடிந்து வெற்றியாளர்கள் கூடுதலாக இரு நாட்கள் தங்கினாலும் விஷ்ணுபுரம் குழு அப்பொறுப்பை ஏற்கும்படி திட்டமிடலாம் என்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரளத்தில் இருந்தபடியே போட்டிக்கான வரையறைகளை நண்பர்களுடன் தீர்மானித்தேன்.