பேய்ச்சி

பேய்ச்சி: பெண்மையெல்லாம் பேய்ச்சி

81706602_3185996891429631_2453305157929140224_oமுதலில் ‘பேய்ச்சி’யை பேச்சி என்று தான் நினைத்தேன். ஆனால் பேய்ச்சி என திட்டமிட்டு பெயரிடப்படிருக்கிறது என படிக்கப் படிக்கதான் தெரிந்தது. பேய்ச்சி நாவலின் நிலப்பரப்பு எனக்கு கொஞ்சம் பரிச்சியமானதுதான். நானும் கெடாகாரி. லூனாஸும் டப்ளினும் ரொம்பவும் தூரமில்லையே. அதனாலேயே நாவலில் இன்னுமும் ஆழ்ந்து விட்டேன்.

Continue reading

பேய்ச்சி: நூதன செயல்பாட்டின் அச்சுறுத்தும் அசலம்.

79692721_2667540759959162_1004000063443173376_nபேய்ச்சியின் அவதரிப்பு ஓர் உச்சக்கட்ட ஆச்சரியம்.

மனிதனுக்குள் புதைந்து கிடக்கின்ற மர்மங்களைப் பற்றி விஞ்ஞானம் புரிந்து கொண்டிருப்பது மேலெலுந்தவாரியாக இழையோடும் ஒரு விளிம்பு நிலைத்தான். அந்த விளிம்பைத் தாண்டி விஞ்ஞானத்துக்குப் புரிபடாத வியப்பூட்டுகிற மர்மங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதை அள்ளித் தெளித்து கொண்டே எழுத்தாளர் ம. நவீன் மனித சிந்தையின் நிசப்தத்தை நடப்புக்குக் கொண்டு வந்திருப்பது ஒரு விந்தை.

Continue reading

பேய்ச்சி – சுனில் கிருஷ்ணன்

sunil-2நாவலைப் பற்றிய சில பொதுவான எதிர்பார்ப்புகள் உண்டு. நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு. ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும். ஒரு வரலாற்று பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும். கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும் போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது. ம.நவீனின் முதல் நாவல் ‘பேய்ச்சி’ அவ்வகையில், மேற்கூறிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தமிழ் புனைவு வெளியில்,  மிக முக்கியமான புதுவரவு என சொல்லலாம்.

Continue reading

வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’

pechiஅக்காலத்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குலசேகரத் தம்புரான் என்ற சிற்றரசர் இருந்தார். அரசராக அவர் இருந்தபோதிலும் உண்மையான அதிகாரம் ஏழு நாயர் தரவாட்டு குடும்பங்களிடம் இருந்தது. இவர் ஒருமுறை சமஸ்தானத்தை விட்டு வெளியில் சென்றபோது ரேணுகா என்ற தெலுங்குப் பெண்ணிடம் காதல் கொண்டார். அவளை மணமுடித்து இங்கு அழைத்து வந்தார். தெலுங்கு பெண்ணென்பதால் அவளை வடுகச்சி என்றழைத்து ஏற்க மறுத்தன அந்நாயர் குடும்பங்கள்.தம்புரான் அவளை அரசியாக்க முயலக்கூடும் என்ற நிலை வந்தபோது அவளைக் கைவிடுமாறு மிரட்டினர். குலசேகர தம்புரான் மறுக்கவே அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தனர். உடனே அவர் ரேணுகாவை அழைத்துக் கொண்டு நெல்லைக்கு அருகே உள்ள திருக்கணங்குடிக்குச் சென்று வாழ்ந்து வந்தார். அவள் கருவுற்றபோது குலதெய்வ பூசைக்காக அவளையும் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் வந்தார். இதை ஒற்றறிந்த நாயர் குடும்பத்தினர் சேர்ந்து அவரை வஞ்சகமாக கொன்றனர். நிறைமாத கர்ப்பிணி ஆனதால் அவளைக் கொல்லவில்லை. கணவனைக் கண்ணெதிரில் பறிகொடுத்ததால் அவள் வஞ்சம் உரைத்து அவருடன் சிதையில் எரிந்தாள்.

Continue reading