மலேசிய சிறுகதைகள்

மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்

01pic-269x300மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில் எழுந்த குரல் சண்முகசிவாவினுடையது.

Continue reading

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம்

1மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கக் கட்ட நகர்ச்சிக்காகத் திட்டமிட்டுச் செயல்பட்டதையே காட்டுகிறது. ஆனால், ரெ.கார்த்திகேசு முன்னின்று உருவாக்கிய இவ்விதழ்கள் குறித்து ரெ.கார்த்திகேசு உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் எளிய வாக்கியங்களோடு கடந்துபோவதுதான் ஆச்சரியம். ‘மணிமன்றம்’ அல்லது ‘முத்தமிழ் படிப்பகம்’ போன்ற பிரமாண்டமான தொடர் முயற்சிகளில் மொழி சார்ந்த அக்கறைகளுக்கும் ‘கதை வகுப்பு’, ‘ரசனை வகுப்பு’ போன்ற சிறுகதை புனைவுக்கான அடிப்படை முன்னெடுப்புகளுக்கும் வரலாற்றில் இடமுண்டு என்றாலும் இவற்றிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டு பரிச்சார்த்தமான முயற்சிகளுக்கு என்றே தொடங்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ சிறு குழுவில் உள்ளவர்களின் எளிய முயற்சிதான் எனினும் அதுவே நவீன இலக்கியத்தின் பாணி என யாரும் உணர்ந்ததாய் தெரியவில்லை.

Continue reading

அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்

jeevaரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை மட்டுமே சொல்ல முடிவதைப் பார்க்கிறேன். தொடக்கத்தில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர்களால் மொழிவழியாகக் கற்பனைசெய்ய முடியவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவர்களால் சொற்களில் இருந்து ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான பயிற்சியும் இல்லை. சொற்கள் வழியாக ஒன்றைத் தெரிந்துகொள்ள மட்டுமே செய்தனர். தெரிந்துகொண்டதைத் தகவல்களாகச் சேமித்து ஓரிரு வாக்கியங்களில் கூறினர். அதையே விமர்சனமாகவும் நம்பினர். கடைசிவரை அவர்களால் ஒரு சிறுகதையினுள் நுழைந்து அதன் நுட்பத்தை தரிசிக்கவே முடியாது.

Continue reading