Author: ம.நவீன்

பப்பிகள்

puppy

நாய் வளர்ப்பது பற்றி எங்கள் குடும்பத்தினர் யோசித்தது முதன் முதலாக செட்டிக்கம்பத்துக்கு வீடு மாற்றலாகி போனப்போதுதான். ஏற்கனவே இருந்த கம்பத்துவீடு பக்கத்து வீடுகளோடு ஒட்டி இருக்கும். உலக நடப்புகள் அனைத்தையுமே அவரவர் வீட்டில் இருந்தபடி கொஞ்சம் வேகமாகக் கத்தி பேசியே பகிர்ந்துகொள்ள வசதி இருந்தது. திட்டுவதென்றாலும் அப்படித்தான். நேரிடையாகச் சென்று வரிந்துகட்டி வருவதெல்லாம் அப்பகுதியில் குறைவுதான்.…

மலேசியாவில் முதல் வீதி நாடகம் ‘பவுன் குஞ்சு’ : ஒரு பார்வை

pathivu2g

மை ஸ்கீல் அறவாரியம் குறித்தும் அவ்வரவாறியம் மூலம் நடத்தப்படும் பிரிமூஸ் கல்லூரி குறித்தும் புதிதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. இன்று மலேசியாவில் தமிழ்ச்சமுதாயத்துக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் உருப்படியானதாகவும் உயர்வானதாகவும் பலதரப்பினராலும் போற்றப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் பசுபதி மற்றும் மருத்துவர் சண்முகசிவா போன்றோர் முன்னெடுப்பில் இயங்கும் இக்கல்லூரி மாணவர்கள் பலரும் பள்ளியில் பாதியிலேயே தங்கள் கல்வியை நிறுத்தியவர்கள்.…

50ஆம் ஆண்டு பொன்விழா காணும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணம்: ஓர் ஆய்வுக்கு முன்பான ஆயத்தங்கள்!

malaysia.tamil.writers.association.logo

கட்டுரைக்குச் செல்லும் முன் வல்லினம் இணையதளத்தில் எழுத்தாளர் சங்கம் தொடர்பாக வெளிவந்த சில எழுத்தாளர்களின் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளதை வாசியுங்கள். பணம், புகழ், சொத்து, சுகம் அனைத்திலும் உயர்ந்து நிர்க்கும் வைரமுத்து அவர்களின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நூலை இங்கே அறிமுகம் செய்துவைத்து இலட்சக் கணக்கில் பணம் திரட்டிக் கொடுத்தது அவசியம்தானா? – இலக்கியக்குரிசில்  மா.இராமையா மலேசிய தமிழ்…

இழப்பு

ilappu

படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர்  உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை மூடி கண்ணாடியில் பார்த்தேன்.  அம்மாவின் வயிறும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் அப்போதெல்லாம் என்னைப்போல சுறுசுறுப்பாக இல்லை. அவசரத்துக்கு எழ மாட்டாள். தரையில்…

தீவிரமான ஒரு வாசிப்பு தளத்தை நோக்கி சக வாசகர்களை நகர்த்தும் முயற்சியே என் கட்டுரைகள்

navin

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய மற்றும் தமிழக நாவல்கள் தொடர்பான மனப்பதிவுகளை முன்வைத்து ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் ம. நவீன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார். கேள்வி…

விருந்தாளிகளின் வாழ்வு

navin.book.cover

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும்  ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் கட்டுரை தொகுப்பின் முன்னுரை உன்ன‌த‌மான‌ ஒரு நிக‌ழ்வு என்ற‌ த‌த்துவ‌த்தோடெல்லாம் வாசிப்பு என‌க்கு அறிமுக‌மாக‌வில்லை. மொழியின் சுவையே நான் புத்த‌க‌ங்க‌ளைத் தேடிப்போக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அதிர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌ என‌க்கு லுனாஸில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டையிலேயே வேலை கிடைக்க‌ சாண்டில்ய‌ன், க‌ல்கி, அகில‌ன், நா.பார்த்த‌சார‌தி, மு.வ‌ர‌த‌ராச‌ன்,…

ஒரு மசாலா அறிக்கைக்கு பதில்

reply

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டு சிறுகதை தேர்வு நிறுத்தப்படுகிறது என்ற எழுத்தாளர் சங்க செயலாளர் குணநாதனின் அறிக்கையைப் படிக்க நேர்ந்தது. சுரண்டலுக்குப் பின்பான எல்லாவித பாதுகாப்பு அம்சங்களைவிடவும் கழிவிரக்கத்தைத் தேடிக்கொள்வது பொதுவாகவே நடப்பில் உள்ள தப்பிக்கும் சூழல்தான். எழுத்தாளர் சங்கம், குணநாதன் மூலம் அதை மீண்டும் நிரூபித்துள்ளது. நான் ஆசிரியராக இருந்து வழிநடத்தும் வல்லினம்.கோம்…

ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!

07

12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில்  ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது…