Author: வல்லினம்

வல்லினம் & GTLF இணைவில் மாபெரும் இலக்கிய விழா

இம்மாத இதழ், வல்லினம் மற்றும் ஜார்ச் டவுன் இலக்கிய விழா குழுமத்தின் இணைவில் நடைபெற உள்ள மாபெரும் இலக்கிய விழாவின் சிறப்பிதழாக மலர்கிறது. இலக்கிய விழா தகவல்களோடு அதில் பங்கெடுக்கும் இலக்கிய ஆளுமைகள் குறித்த விரிவான கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. உலகில் தலைசிறந்த இலக்கிய விழாக்களில் ஒன்றான ஜார்ச் டவுன் இலக்கிய விழாவில் வல்லினமும் ஒரு…

யுவன் சந்திரசேகர் வருகை – ஒரு பதிவு

ஜூன் 10 – 11 ஆகிய இரு நாட்கள் வல்லினம் ஏற்பாட்டில் நவீன கவிதை முகாம் நடைபெற்றது. இந்தப் பட்டறையை வழிநடத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பு வருகை புரிந்தார்.  ஜூன் 10 காலை 9 மணிக்குப் பட்டறை தொடங்கியது. காலை உணவுக்குப்பின் பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டனர். மொத்தம் 25 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.  இந்தப்…

யுவன் கவிதை முகாமில் கலந்துகொண்டவர்களின் பதிவு

அமானுஷ்ய எழுத்து ஒரு சினிமா அல்லது இசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தால் வந்த மறுநொடி அந்த நிகழ்வைப் பற்றிய நமது அபிப்பிராயங்களை அல்லது அங்கு நாம் சிலாகித்த சில விஷயங்களை உடனே நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பகிர்ந்து மகிழ்வோம். காரணம் அவை காட்சிகளோடு ஒலி ஒளி வடிவில் நமக்குள் புகுந்து நம்மை ரசிக்க…

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் நிகழ்ச்சி பதிவு (காணொளி)

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தலைமை உரை அரவின் குமார் உரை – குள்ளச்சித்திரன் அ, பாண்டியன் உரை – மணற்கேணி ம.நவீன் உரை – யுவன் சிறுகதைகளில் மூன்று கூறுகள் யுவன் சந்திரசேகர் உரை

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

·  அறிவியல் சிறுகதை போட்டி ஏற்பாட்டு குழுவினரும் அவர்தம் குடும்பத்தாரும்  இந்தப் போட்டியில் பங்கெடுக்க முடியாது.   ·  மற்றபடி போட்டியில் மலேசியப் பிரஜைகள், வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம். ·  போட்டியில் பங்கு பெறும் கதைகள் பக்க வரையறைக்கோ சொற்களுக்கோ கட்டுப்பட்டதல்ல. ·    ஒருவர் எத்தனை சிறுகதை வேண்டுமானாலும் அனுப்பலாம். ·  அறிவியல் கூறுகள் இருந்தால்…

யாழ் சிறுகதை போட்டி

அ. யாழ் நிறுவனத்தின்  இச்சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் உள்ள அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் அல்லது உயர்நிலைப் பள்ளிகளில்  இவ்வாண்டு படிவம் 4,5,6 -ல் (17 வயது முதல் 20 வயது வரை)  பயிலும் மாணவர்கள் பங்கெடுக்கலாம். ஆ. யாழ் நிறுவனம் வழிநடத்திய பட்டறையில் பங்கெடுத்து பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தப் போட்டில் பங்குபெற முடியும்.  இ. இந்தப்போட்டி…

“நான் ஒரு திரிபுவாதி” – அக்கினி சுகுமார்

மலேசிய இலக்கியச் சூழலில் அக்கினியின் எழுத்துகள் தனித்துவமானவை. மலேசியப் புதுக்கவிதை வரலாற்றின் தொடக்கக் காலத்தில் அதன் போக்கை தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக இயங்கியவர் பின்னாட்களில் அறிவியல் கட்டுரையாளராக வெகுமக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டார். நகைச்சுவையான பாணியில் சிக்கலான தகவல்களையும் எளிய மக்களிடம் சேர்க்கும் வல்லமை உள்ள எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இவர். கவிதை, நாவல் என இவர்…

வல்லினம் நாவல் முகாம்: இரு வாசகர்களின் பகிர்வுகள்

வல்லினம் குழுவினரால் நாவல் முகாம் 26 முதல் 27 வரை பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாள்கள் தைப்பிங் ‘கிரேண்ட் பெரொன்’ தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி பல தடைகளைத் தாண்டி, பாதுகாப்பு அம்சங்களுடன் இவ்வாண்டு குறிப்பிட்ட திகதிலும் நேரத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாவல் முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே ஐந்து நாவல்களைப் படித்து வர…

நாவல் முகாம்: புதிய பங்கேற்பாளர்களின் அனுபவம்

கடந்த 26/2/2022-ஆம் திகதி தொடங்கி 27/2/2022-ஆம் திகதி வரை வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட நாவல் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இதுவே நான் பங்கேற்கும் முதல் நாவல் முகாமாகும். அதிகம் சிறுகதைகள், கவிதைகளைச் சார்ந்த பட்டறைகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்த எனக்கு, நாவலைக் குறித்து நடத்தப்பட்ட இந்த முகாம் முற்றிலும் பல புதிய அனுபவத்தையே தந்தது. ‘நாவல்…

மா.ஜானகிராமன் அவர்களுக்கு வல்லினம் விருது

‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும் 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2022க்கான வல்லினம் விருதை எழுத்தாளர் மா.ஜானகிராமன் அவர்களுக்கு வழங்க வல்லினம் குழு முடிவெடுத்துள்ளது. மா.ஜானகிராமன் கள…

“பசியென்பது இனம், மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று” – மா.ஜானகிராமன்

2021ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருதும் வரலாற்றுத் தொகுப்பாளரான ஜானகிராமன் மாணிக்கம் அவர்களுக்கு வழங்குவதில் வல்லினம் பெருமைகொள்கிறது. மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணப்படுத்தலில் திரு ஜானகிராமன் பங்களிப்பு முதன்மையானது. தோட்டப் பின்னணியில் வறுமைச் சூழலில் வளர்ந்த இவர், மலேசிய இந்தியர்களின் வரலாற்றை ஒட்டிப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். மலேசியாவில் இந்தியர்களின் வரலாறு ரீதியான மாற்றங்களை ‘மலேசிய…

5 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’ எனும் சிறுகதை, தமிழிலும் ஆங்கிலம், ஜப்பானிய, மலாய், சீனம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. மலேசியா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து,…

“முதன்முதல்ல எழுதுறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கைதான்”

கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும்…