
மலேசியத் தமிழர்களின் வாழ்வை மலேசியப் புனைவிலக்கியம் காட்டும் சித்திரிப்புகளிலிருந்து நான்கு காலக்கட்டங்களாக வகைப்படுத்தலாம். முதலாவதாக, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சம், பசி காரணமாகவும் வாழ்வாதாரத்தைத் தேடியும் ரப்பர் தோட்டங்களில் சஞ்சிக்கூலிகளாகப் பணியாற்ற புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையின் சித்தரிப்பவையாகும். அதற்கடுத்த காலக்கட்டத்தில், தோட்டங்களில் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலக்கட்டம்,…