ஒரு படைப்பாளியின் உலகம் தனியானது. சராசரி மனிதர்கள் சமூக நிகழ்வுகளைப் பார்வைக் கொள்வதற்கும் ஒரு படைப்பாளி தனக்கான உளப்பாங்கோடும் தனித்தபார்வையோடும் அவற்றை அணுகுவதற்கும் வேறுபாடுகளுண்டு. சமூக நிகழ்வு அல்லது சமூக நிலை பற்றிய படைப்பாளியின் மனம் சார்ந்த விளைவுகளையும் தாக்கங்களையும் மற்றவர் பார்வைக்கு முன்வைக்கின்ற ஓர் உந்துதல் ஒரு படைப்பு உருவாகக் காரணமாகயிருக்கிறது. படைப்பாக்கச் செயற்பாடென்பது…
Tag: லதா
லதா: சிங்கையின் தனித்துவ படைப்பாளி
லதாவை முதலில் அறிந்தது ‘சீனலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பின் வழியாகத்தான். தமிழ் இலக்கிய விமர்சகர்களின் பார்வையில் அந்தத் தொகுப்பே இதுவரை வந்த அவரது நூல்களில் பிரதானமானது என அறிந்தபோது அவரை அணுகிச் செல்ல அது எனக்கான நல்ல தொடக்கம் என்றே தோன்றியது. லதா என சுருக்கமாக அறியப்படும் கனகலதா என்பவர் சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர்,…
“விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா
கனகலதா (லதா) ‘தீவெளி’ (2003), ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ (2004), யாருக்கும் இல்லாத பாலை (2016) ஆகிய மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது. அவரின் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Goddess in the Living…
மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதவந்த லதா கவிதைகளில் கால்பதித்தார். தொடர்ந்து கதைகளும் எழுதத் தொடங்கினார். தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உறவுகளும், ஈழத்துத் தமிழர்களுக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உள்ளன. சிங்கப்பூர் தமிழ் வாழ்க்கையும் அவ்விதமே. என்றாலும் தமிழர்களின் பொதுப் பண்பாடு நம் வாழ்க்கையில் வலுவாகவே இதுவரை இருந்து வருகிறது.
நகர்ந்து கொண்டேயிருக்கும் உயிருள்ள கோள்
லதாவின் ‘யாருக்கும் இல்லாத பாலை’ யின் கவிதைகளை ‘பொருள் மயக்கின் அழகியல் (Aesthetics of ambiguity)’ என்று அடையாளப்படுத்துகிறார் எம்.ஏ.நுஃமான். கூடவே, ‘நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதைகள்’ எனச் சொல்லும் அவர், இதைக் கண்டடைந்ததற்கான வழித்தடங்களையும் இந்தத் தொகுதிக்கான பின்னுரையில் குறிப்பிடுகிறார். லதாவின் உணர்தல் தீவிர நிலை, சாதாரண நிலை, அதி தீவிர நிலை…