அறிவிப்பு

மஹாத்மன் மீண்டார்

மஹாத்மனின் இன்றைய நிலை – காணொலி

கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுத்தாளர் மஹாத்மனுக்கு வல்லினம் மூலம் நன்கொடை திரட்டத் தொடங்கினோம். மூளையில் ஏற்பட்ட வாதத்தால் மஹாத்மன் சுய நினைவு இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் அவரைப் பராமரித்த அவர் மனைவிக்கும் உதவும் நோக்கில் இந்த நன்கொடை திரட்டப்பட்டது.

Continue reading

எழுத்தாளர் மஹாத்மன் நிதி RM 10598.56 சேர்ந்தது

ஜூன் 25, மஹாத்மனுக்கு நிதி உதவி தேவை என குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். இந்த நிதி சேகரிப்புத் திட்டத்தை வல்லினம் மூலம் ஒரு மாதம் தொடர திட்டமிட்டோம். எழுத்தாளர் மஹாத்மனுக்காக இந்நிதி திட்டத்தை முன்னெடுக்க சில காரணங்கள் இருந்தன.

Continue reading

மஹாத்மனுக்கான நன்கொடை

முந்தையை பதிவு

மஹாத்மனின் உடல் நலம் முன்னிலும் மெல்ல தேறி வருகிறது. பேசுவது புரிகிறது. கண்களைத் திறக்கிறார். ஆனால் முகங்களை அடையாளம் காணமுடிகிறதா என்பது தெரியவில்லை. சுவாசிக்க அவ்வப்போது இயந்திர உதவி தேவைப்படுகிறது.

Continue reading

நிதி உதவி தேவை

கடந்த சில வாரங்களாகவே எழுத்தாளர் மஹாத்மன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதை அறிவேன். சில ஆண்டுகளாகவே அவரை வெவ்வாறு நோய்கள் தாக்கியபடி இருந்தன. அப்படி ஈராண்டுகளுக்கு முன் அவரை சுங்கை பூலோ மருத்துவமனையில் ஶ்ரீதருடன் சென்று சந்தித்தேன். மூளையில் உருவாகியுள்ள கட்டியால் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்தார். நேர்பார்வை மட்டுமே இருந்தது. பக்கத்துக் காட்சிகள் அனைத்துமே இருள். உடன் அவர் மனைவி இருந்தார். அவர் திருமணம் செய்திருப்பதை அப்போதுதான் அறிந்தேன். ஶ்ரீதரும் அப்போதுதான் அறிந்திருந்தார். கண்களை குறுக்கி வாசித்துக்கொண்டிருந்தார். தன்னால் இன்னமும் வாசிக்க முடிவதை எண்ணி உற்சாகமாகப் பேசினார்.

Continue reading

தமிழாசியா

நவம்பர் 17 வழக்கறிஞர் சி.பசுபதி அவர்களின் பிறந்தநாள். கடந்த ஆண்டு அவருக்கு நெருக்கமான இருபது பேர் அடங்கிய நண்பர்களுடன் சிறிய அளவிலான பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் அதில் ஒருவனாகக் கலந்துகொண்டேன்.

Continue reading

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விருது!

Jaya mohan,writer in his home at Nagarkovil,Tamilnaduநவம்பர் 2010இல் வல்லினம் இலக்கியக் குழு மற்றும் நவீன இலக்கிய களம் இணைந்து தைப்பிங் நகரில் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தோம். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களை ஒரு தீவிர இலக்கிய வாசகராக நான் அறிந்துகொண்ட சந்திப்பு அது. அதற்கு முன் நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோதே சுவாமியின் ஆசிரமத்துக்கு தேவாரம் பயிலச் செல்வேன். ஓர் ஆன்மிகவாதியாக மட்டுமே அதற்கு முன் எனக்கு அவர் அறிமுகம்.

Continue reading

ம.நவீனுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது

imagesமலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு மற்றும் இலக்கியச்செயல்பாடுகளில் அவரது பங்களிப்புக்காக இந்தச் சிறப்பு விருது வழக்கப்படுவதாக தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்துள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது.

Continue reading