க‌விதை

மாயாவின் கேள்விகள்

மாயா தொலைவில் உள்ள
மரத்தைதான் முதலில்
தன் இரு விரல்களால் பிடித்தாள்…
பின்னர் கட்டடம்…
ஓடும் நாய்…
இடைவெளிகளை அதிகப்படுத்தி அவளால்
அத்தனையையும் பிடித்துப்பார்க்க முடிந்தது
நட்சத்திரங்களையும் பிடிக்கலாம் இரவாகட்டும் என்றேன்
இரவானால் நட்சத்திரம் சிறிதாகிவிடுமா என்றாள்!

Continue reading

ஊஞ்சல் 3

 

 

அருகருகே இருக்கும்
இரட்டை ஊஞ்சலில் ஒன்று
அசையாமல்
நான் ஆடும்போது
வெறித்துப் பார்க்கிறது
மற்றொன்றை
எனது ஏகாந்தத்தை நீ
பார்ப்பதுபோல.

Continue reading

ஊஞ்சல் 1

 

 

பூக்கள் உதிரும் புன்னை மரத்தின் கீழ்
நிராதரவாய் தொங்கும் ஊஞ்சல்
நான் எழுந்த பின்னும்
ஆடிக் கொண்டிருக்கிறது
இதற்குமுன்
நான் இல்லாத போதும்
எல்லாம் நிகழ்ந்தது போலவே

Continue reading

கனவு 1

பயமும் மகிழ்ச்சியும்
ஒரு சேர வருகிறது
யாராவது எழுப்பும் போது
வாழ்வை
கனவென்று
உணரப்போகும் நிமிடம் குறித்து.

Continue reading