ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 10

எரிமலை வாயு

எரிமலை வாயு

மீண்டும் ஒரு எரிமலை சார்ந்த நிலபரப்புக்கு அழைத்துச் சென்றார் வழிக்காட்டி. இம்12முறை மலைமீது எரிமலையிலிருந்து வெளிவரும் வாயுவைப் பார்க்கப் பயணம். அந்த வாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கின்றனர். 85 டிகிரி அதன் வெப்பம். அந்த வாயு வெளிவரும் இடத்தில் தேங்கும் நீர் பொல பொல என கொதித்துக்கொண்டிருந்தது. பெரிய பாதுகாப்பெல்லாம் இல்லை. சுற்றி இருந்தவை மூங்கிலிலான தடுப்புகள்தான்.

முன்பே சொன்னது போல எரிமலை ஜோக்ஜாவுக்குச் சாபமாக இருந்தாலும் அது வெடித்தப்பின் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ஒரு காதலி காதலனிடம் ஊடல் கொள்வது போலதான் இதுவும். எரிமலை இந்த தேசத்தில் கொள்ளும் ஊடல் பின்னர் கூடலாக மாறும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியாகிறது. வாயு வெளியான பிரதேசத்தில் பூங்குழலியாலும் ஈஸ்வரியாலும் வர இயலவில்லை. எங்களுக்கும் மூச்சுத் திணரியது. ஒரு ஐம்பது மீட்டருக்குத் தள்ளி எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை. ஏற்கனவே ஒரு காதலர்கள் அங்கே விழுந்து தற்கொலை செய்துள்ளார்கள் என்ற தகவல் கூடுதல் படபடப்பை கவனத்தைக் கொடுத்தது.

எரிமலை வாயுவால் பாதிக்கப்பட்ட நீர்நிலைகள் வெவ்வேறு வண்ணங்களில் ஆங்காங்கு காட்சி கொடுத்தது. ஜோக்ஜாவில் நாங்கள் பார்த்தப் பகுதிகளில் அழகான இடமென்று இதைச் சொல்லலாம். ஆனால் ஆபத்தான இடமும் கூட. நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. விஷம். கொஞ்ச நேரம் அங்கு ஓய்வெடுத்தோம். மனம்05 ரொம்ப நேரமாகவே அதுபோன்ற வெட்டவெளி காற்றுக்குக் காத்திருந்தது. நண்பர்களும் அங்கு புகைப்படம் எடுக்க ஆர்வம் கொண்டிருந்தனர்.

06அவ்வளவு தூரம் போய் நீர் நிலைகளில் இறங்காவிட்டால் எப்படி. அதற்கான ஏற்பாட்டையும் வழிக்காட்டி செய்திருந்தார். இயற்கை எழில் நிறைந்த ஓர் அருவிக்கு எங்களை அழைத்துச் சென்றார். நவீன தொழில் நுட்பமெல்லாம் இல்லாத படகு, நதி பயணத்தின் சுவாரசியத்தைக் கூட்டியது. சளியும் காய்ச்சலும் உச்சத்தில் இருந்ததால் நான் நீரில் இறங்கவில்லை.  மேலிருந்து நீர் ஆவேசமாகக் கொட்டிக்கொண்டிருந்தது. அதன் பள்ளத்தில் அமைதியான நதி. பெண்கள் கோபமான அருவியில் அடிவாங்கிக்கொண்டிருந்தனர். சந்துருவும் தயாஜியும் 20 அடி ஆழம் கொண்ட நதியில் குதித்தனர். சுமார் இருநூறு மீட்டர்கள் நீரில் நீந்தியவாரே நாங்கள் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். நாங்கள் வந்த போட்டிலேயே சேர்ந்தோம். நீரில் இறங்க முடியாதது வருத்தமாக இருந்தாலும் ஒன்றும் செய்யாமல் நீர் நிலைகளில் அமர்ந்து கவனிப்பதும் தனித்த சுவாரசியம்தான்.

ஷா அலாமில் உள்ளது போல ஜோக்ஜாவிலும் ஐ.சி.டி பூங்கா ஒன்று இருந்தது. இரவில் அங்கு இளைப்பாறச்சென்றோம். மலேசியா அளவுக்கு இல்லை. உள்ளே ஒரு பேய்வீடு இருந்தது. நுழைந்தோம். பேய் வருவதற்கு முன்பே ஈஸ்வரி அலறியதில் கிலி பிடித்துக்கொண்டது. உள்ளே மூன்று பேர் வேடம் அணிந்த மனிதர்கள். அவர்களைத் தொடக்கூடாது என்ற கட்டளையின் பேரில்தான் நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். ஆனால் ஈஸ்வரி அலறியதில் பேய் கூட பயந்திருக்கலாம். இவ்வளவு சத்தத்தை வைத்துக்கொண்டா வேனில் அமைதியாக இருந்தார் என்ற குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை கத்துவற்காகச் சேமித்திருக்கலாம்.

பேய்வீடு முடிந்த பின்னர் ரிக்‌ஷா போன்ற விளையாட்டு வாகனங்கள் வாடகைக்கு இருந்தன. மணிமொழி வாகனத்தைச்09 செலுத்த ஈஸ்வரி முன்னே அமர்ந்து ஊர்வலம் வந்தார்கள். அப்படியே கொஞ்சம் நடந்தால் ஒரு மேடை இருந்தது. தயாஜி உற்சாகமாகிவிட்டார். யாரும் மேடையைப் பயன்படுத்தால். நாங்கள் எங்கள் சார்பாக தயாஜியை அனுப்பினோம். தயாஜி பல திறமைகள் கொண்ட கலைஞன். நன்றாக மிமிகிரி செய்யக்கூடியவர். சுவாரியமாக ஒரு நிகழ்வைக் கொண்டுச் செல்லும் திறன் பெற்றவர். ஆனால் நாங்கள் பயணம் நெடுகிலும் தயாஜியைக் கலாய்த்துக்கொண்டே இருந்தோம். அது நட்பின் விளையாட்டு. மேடையிலிருந்து தயாஜி வந்தததும் கூறினேன், “நல்ல கலைஞர்களுக்கு எங்குமே மேடைகள் காத்திருக்கின்றன. அதை எந்த ம……………..  உன்னிடமிருந்து பிடுங்க முடியாது.”

ஜோக்ஜாவில் மற்றுமொரு குறிப்பிடும்படியான அம்சம் வாகனங்களின் எண் பட்டை. நம்மூரில் சாலை வரிக்கான 07அட்டையைக் கண்ணாடியில் ஒட்டுகிறோம் என்றால் அவர்களின் சாலை வரி எப்போது நிவர்த்தி அடைகிறது என எண் பட்டையிலேயே இணைத்துள்ளனர்.  ஜோக்ஜா சென்ற முதல்நாளே நாங்கள் இதுபோன்ற  சின்ன சின்ன சுவாரசியங்களை அறிய ஆவல் கொண்டிருந்தோம். நகரின் கருப்புப் பகுதிக்கு அழைத்துச்செல்ல கேட்டபோது அப்படி முன்பு இருந்ததாகவும் இப்போது அரசு முற்றிலும் துடைத்தொழித்துவிட்டது என்றும் வழிக்காட்டிக் கூறினார். எனவே சந்தை மற்றும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

16இரண்டுமே ஒரு நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்தான். பயணிகளுக்காக அரிதாரம் பூசத முகத்துடன்13 இயங்குபவை. நம்மூர் சந்தைபோலதான் அங்கும் இருந்தது. ஆனால் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமான முறையில் இயங்கியது. குறிப்பாக ஒருவர் தலைமை ஆசிரியராக வேண்டும் என்றால் நான்கு ஆண்டுகள் புகுமுக வகுப்பில் பணியாற்றியிருக்க வேண்டும். ஒருவேளை அவர் தலைமை ஆசிரியரானப்பின்னர் சேவையில் மேம்பாடு இல்லையென்றால் மீண்டும் அவர் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்ற போது நல்லத்திட்டம் என அனைவருமே பாராட்டினோம். நாங்கள் அங்கு சந்தித்துப் பேசிய தலைமை ஆசிரியர் மலேசியாவில் ஆசிரியருக்கான அடிப்படை சம்பளத்தைக் கேட்டார். கூறினோம். தங்கள் இப்பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை அந்தத் தொகையைப் பெற முடியாது என்றுக்கூறி சிரித்தார்.

01ஒருவழியாக எங்கள் பயணம் முடிந்தபோது மனம் வீட்டுக்குச் செல்வதற்குத் தயாராகியிருந்தது. மூன்று பைகள் நிறைய பொருள்கள். ஒருவழியாகக் கட்டிக்கொண்டு ஏறினோம். தயாஜியிடம் அவன் வாங்கிய பொருள்களை விசாரித்தேன். பத்துவிரல்களில் அடக்கிவிடலாம். எனக்கும் அப்படித்தான். ஆண்களுக்கு வாங்க வேண்டிய பொருள்கள் பொதுவாக சந்தைகளில் குறைவாகவே உள்ளன.  சந்தைகள் உலகம் பெண்களுக்கானது. பயணத்தில் ஒரு காரில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். யாரோ தன் மனைவி வாங்கிய ஷாப்பிங் பொருள்களை சுமப்பவன் சொன்னச் சொல்லாக இருக்க வேண்டும்.

ஆனால் மலேசியத் தமிழ்ப்பெண்கள் அப்படியல்லவே … தங்கமானவர்கள் … செ..செ…

– முற்றும்.

(Visited 185 times, 1 visits today)

One thought on “ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *