பயணம்

உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்

29386887_10209200878613573_584066072583487421_nஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும் எனத்தோன்றியது.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 7: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

20171220_094818_resizedகாலையிலேயே எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் மாணிக்கவாசகர் திருக்கோயில் சென்றோம். கோயிலை நெருங்கியதுமே அதன் புற வளாகத்தில் இருந்து வேப்ப மரக் காற்று சிலிர்க்க வைத்தது. “இதுதான் நம்ம இடம்” என கோணங்கி கைகளை விரித்து காற்றை உள் வாங்கினார். மாணிக்கவாசகர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் அக்கோயில் மிக எளிமையாக, சிறிய பரப்பளவைக் கொண்டிருந்தது. அங்கிருந்த கிணறு மிகப்பழமையானது எனச் சொன்னார்கள். கோயிலைவிட அதன் சுற்றுப்புறம் அவ்வதிகாலையில் உற்சாகத்தைக் கொடுத்தது. கொஞ்ச நேரம் அவ்வின்பத்தைப் பருகிவிட்டு திருமறைநாதர் கோயில் புறப்பட்டோம்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 6: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

anbu

அன்புவேந்தன்

தோழர் அன்புவேந்தனைச் சந்தித்தவுடன் மதுரைக்கு வந்த உற்சாகம் பிறந்துவிட்டது. கடந்த முறை தமிழகப் பயணத்தில் யானை மலையில் உள்ள சமண படுகைகள் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளுக்கு என்னையும் தயாஜியையும் அழைத்துச் சென்றார். பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பான தொடர்ந்த ஆய்வில் இருப்பவர். மீனாட்சியம்மன் ஆலயத்தில் அவரைச் சந்தித்தோம். விஜயலட்சுமியை மீனாட்சி தரிசனத்துக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் ‘வல்லினம் 100’ கொடுக்க வேண்டும் என விரும்பினேன். கொடுத்தேன். அவரது அப்போதைய ஆய்வுத்திட்டங்கள் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார். கடும் உழைப்பை கோரும் பணிகள். கோணங்கி எங்களுக்காகப் பசியுடன் காத்துக்கொண்டிருப்பார் என்பதால் சீக்கிரமாகவே புறப்பட்டோம்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 5: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

தூயன்அழகான குடும்பம் எழுத்தாளர் தூயனது. சற்று நேரம் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். விஷ்ணுபுரம் கலந்துரையாடலில் இளம் படைப்பாளிகளை நோக்கி ‘இப்படி எழுதக் காரணம் என்ன?’ எனும் அர்த்தத்தில் கேள்விகள் தொடர்ந்து எழுவதைக் காண முடிந்தது. தூயனை நோக்கி அவ்வாறான கேள்விகள் அதிகமே எழுந்தன. உண்மையில் அதுபோன்ற கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதில்லை. அல்லது படைப்பாளிகளும் அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளிக்கின்றனர்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 4: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

20171219_073739_resizedமத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், மண்டபம் எனும் ஊரில் அமைந்திருந்தது. முந்தையநாள் தோழர் தமிழ்மணி கூறிய மீன் அறுவடை செயல்திட்டத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தோம். Cobia மற்றும் pompano ரக மீன்களைப் பராமரித்து அவை உற்பத்தி செய்யும் குஞ்சுகளைக் கூண்டுகளில் வளர்க்கும் தொழில்நுட்ப முறையை  இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்கின்றனர். 18 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவைக்கூண்டுகள் பல்வேறு அளவு துவாரங்கள் கொண்ட வலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு முறையாக உணவிட்டு வளர்ச்சி அடைந்தவுடன் அதை அறுவடை செய்கின்றனர்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 3: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

001பாம்பன் பாலத்தில் பயணிக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. 2,340 மீட்டர் நீளம் கொண்ட இது இந்தியாவின் முதல் கடல் பாலம். 1914இல் சேவையைத் தொடங்கி 100 வருடங்கள் கடந்துவிட்ட இப்பாலம் பெரிய கப்பல்கள் கடக்கும்போது நடுவில் தூக்கி வழிவிடும். திட்டமிட்டபடி காலை 7 மணிக்கெல்லாம் எழுந்து காத்திருந்தோம். இடையில் இரயில் பரமகுடி நிறுத்தத்தில் நின்றவும் தயாஜி பரவசமாகி அந்தப் பூமியில் கால்பதித்தார். கமலஹாசன் பிறந்த ஊரின் அருளால் தான் ஒரு சிறந்த நடிகனாக வரலாம் என்ற ஏக்கம் தெரிந்தது. அரை மணி நேரத்தில் பாம்பன் பாலத்தில் ரயில் ஊர்ந்து செல்லத் தொடங்கியது. நாங்கள் கடலைப் பார்த்துக்கொண்டே வந்தோம். காலைக் குளிரைச் சுமந்திருந்த காற்று சிலிர்க்க வைத்தது. கீழே தண்டவாளத்தையோ அதை தாங்கியுள்ள தூண்களையோ பார்க்க முடியவில்லை. அகன்ற ரயில் கடலுக்கு மேல் அந்தரத்தில் மிதப்பது போன்றதொரு உற்சாகம். பக்கத்தில் வாகனம் செல்லும் பாலத்தில் நின்றபடி நிறைய பேர் எங்களைப் பார்த்துக் கையசைத்துக் கூச்சலிட்டனர். அது ரயிலுக்கான கையசைப்பு. அவர்கள் பார்வையில் நாங்கள் ரயிலின் உயிருள்ள உபரிப் பாகங்கள்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 2: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

01

பி.ஏ.கிருஷ்ணன் அரங்கு

கீழே இறங்கியபோது ஜெயமோகன் தன் பயணக்குழுவின் நண்பர் ஒருவரைக் கலாய்த்துக்கொண்டிருந்தார். சிரிப்பும் கேலியுமாகக் காலையிலேயே தொடங்கிவிட்டிருந்தனர். உடல் நலம் கொஞ்சம் தேறியிருந்தது. நான் அந்த வட்டத்தில் நுழைந்தவுடன் கவனம் என்னை நோக்கி திரும்பியது. மலேசிய எழுத்தாளர்கள் மத்தியில் உள்ள பூசல்கள் பற்றிய கலாய்ப்புகளாக அந்தப் பேச்சு பரிணாமம் எடுத்தது. ஏதும் பதில் பேசினால் கிண்டல்கள் தொடரலாம் என மௌனமாகச் சிரித்தபடி இருந்தேன். இதற்கு முன் சிக்கிக்கொண்டவரும் அதே உத்தியைத்தான் கையாண்டார். ஜெயமோகன் கிண்டல்களில் சிக்கும் ஒருவர் இறந்ததுபோல நடித்தால் கரடி முகர்ந்து பார்த்து போய்விடும் எனும் நீதிக்கதையின் காட்சியை நினைவில் வைத்திருப்பது நலம். தம்பிடித்து இறந்தவன் போல இருந்ததால் ஜெயமோகன் கவனம் விஜயலட்சுமி பக்கம் தாவியது. “நீங்க பெண்ணிய எழுத்தாளரா?” என ஆரம்பித்தார். விஜயலட்சுமி என்ன சொல்வதென தெரியாமல் குத்துமதிப்பாக தலையை நேராகவும் பக்கவாட்டிலும் ஆட்ட நான் கழண்டுகொண்டேன்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 1: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

IMG-20171222-WA00212011இல் பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது எழுதிய சிறு குறிப்பில் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களைவிட ஓர் எழுத்தாளரே பூமணியை கௌரவிக்க பொறுத்தமானவர் என எழுதியிருந்தேன். அது பாரதிராஜாவையோ விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தையோ அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல. தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவின் அழுத்தமான இடத்தை அறிவேன். ஆனால் பூமணியின் நாவலை வாசித்திருக்கும் எழுத்தாளர் ஒருவரால் அவர் ஆளுமையை இன்னும் அணுக்கமாக அறிய முடியும் என நம்பினேன். விருது வழங்கும் கரங்கள் பெறுபவரின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். அது என் விருப்பம் மட்டுமே. இவ்வாண்டு மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு புலிநகக்கொன்றை, கலங்கிய நதி போன்ற நாவல்களுடன் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுத்திய பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் விஷ்ணுபுரம் விருதை வழங்குவதை அறிந்ததும் பயணத்துக்கான உற்சாகம் முழுமை பெற்றது.

Continue reading

சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 3

08

                இந்தியா கேட்

டில்லிக்கு வந்தபின் ஏழு நாட்களுக்கு முன் தங்கிய ஹாட்டலிலேயே மீண்டும் தங்கினேன். அங்கு வேலை செய்யும் சிலர் ஓரளவு நண்பர்களானார்கள். அல்லது டிப்ஸ் கொடுத்து நான் நெருக்கமாகியிருந்தேன். தென்னிந்தியா போல இல்லை. ஹாட்டல்களில் டிப்ஸ் கொடுக்கும்வரை அறையைவிட்டு அகல மாட்டேன் என்கிறார்கள். ஹாட்டல் மூலம் டில்லியைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்போகும் என் திட்டத்தைக் கூறினேன். அவர்கள் அது சரியான திட்டமில்லை என்றார்கள். செலவைக் குறைக்க ஒரு உபாயம் கூறினர். அதன்படி அதில் ஒருவரின் நண்பர்  காரை வரவழைத்தார்கள். ஒப்பீட்டளவில் கட்டணம் குறைவு. மேலும் முக்கியமான இடங்களையும் காட்டிவிடுவார் எனக்கூறினார்.

Continue reading

சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 2

41படித்துறையின் மேலே ஒரு மரநிழலில் இருந்து கீழே நடப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். எதற்கும் பெரிய அர்த்தம் இல்லாததுபோல தோன்றியது. மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு விதமான நடை. எனக்கும் நடக்க வேண்டும் போல தோன்றியது.  வழிகாட்டிச்சொன்ன தசவசுவமேத படித்துறைக்குச் செல்லலாம் என எழுந்தபோது மனம் அவ்வளவு நிதானமாக இருந்தது. உடல் காற்றுபோலாகிவிட்டதை உணர்ந்தேன். நான் அடிப்படையில் கொஞ்சம் வேகமாக நடக்கக் கூடியவன். ஆனால் அன்று என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு லாலான் புல்லின் பூவைப்போல கொஞ்சம் கொஞ்சமாக மிதக்கத்தொடங்கினேன். சிந்தனையில் எவ்வித குழப்பமும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தேன். தசவசுவமேதம் சென்றப்பின்னர் மீதம் இருந்த அரை உருண்டையையும் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தேன். எனக்குள் என்ன நடக்கிறது என கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்க ஆரம்பித்தேன்.

Continue reading