சோரம் போனவனின் : கடிதம்

மகாநாடு ஒரே சொதப்பலாக இருக்குமென்பது எதிர்பார்த்ததுதான், நேரில் பார்க்கவோ கேட்கவோ இயலாத குறையை உங்கள் கட்டுரை தீர்த்துவைத்தது. மற்றும் திருக்குறளில் இன்னாசெய்தாரை ஒறுத்தல் எனப்து சரியானதே. ஒறுத்தல்= தண்டித்தல் என்று பொருள்படும்.

இன்னும் இலங்கை வழக்கில் மீனைப்பொரித்தல் என்போம், பெருநிலத்தில் பொறித்தல் என்பார்கள். சில இடத்தில் மெள்ள மெள்ள என்போம் சிலர் மெல்ல மெல்ல என்பார்கள். எல்லாந்தான் இருந்துவிட்டுப்போகட்டுமே. நஷ்டம் ஒன்றுமில்லை.

காப்பியைத்தான் குழம்பி என்றாலோ, கொட்டைவடிநீர் என்றாலோ அது காப்பியைச் சுட்டும் தனித்துவமான சொல்லாகத்தெரியவில்லையே. கோயம்புத்தூர் சென்ற சமயம்   ” இரண்டு கொட்டைவடிநீர் கொடுங்கள்” என்று கேட்டேன். அங்கே காப்பிக்கடை வைத்திருந்த யாழ்ப்பாணத்து ஆள் கேட்டார்: “ அய்யா யாம் எதன் கொட்டையை வடித்துத்தரவேண்டும்”.

கருணாகரமூர்த்தி.பொ
http://karunah.blogspot.com

(Visited 79 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *