விஷத்தை அருந்தும் முன்
அதை முகர்ந்து பார்க்க வேண்டும்
அப்பழுக்கற்ற திரவமாகவே காட்சிதரும்
அது
இதற்கு முன்
விஷம் அருந்தி இறந்தவர்கள்
விஷம் அருந்தி நோயுற்றவர்கள்
அதன் பின்விளைவுகளை ஏற்றவர்கள்
என அனைவரின் சாட்சியத்தையும்
தன் மென்மையான
வண்ணத்தாலும் மணத்தாலும்
மறுக்கும்.
விஷத்தை உடனே குடிப்பது
அவ்வளவு நல்லதல்ல.
ஒரு டானிக் போல
மீனெண்ணை போல
இருமல் மருந்தைப் போல
காதலியின் எச்சில் போல
ஒவ்வொருநாளும்
கொஞ்சம் பருகினால் போதுமானது.
உடலில் நடக்கும் மாற்றங்களை
குறிப்பெடுத்தல் அவசியம்.
நாக்கு காய்வதிலிருந்தோ
உடல் சோர்வதிலிருந்தோ
இதயம் ரத்தத்தைப் பாய்ச்ச அவசரப்படுவதில் இருந்தோ
தொண்டைக்குழாய் எரிவதில் இருந்தோ
தொடங்கலாம்
யாரையும் குற்றவாளியாக்காத மரணமாக
ஒரு தற்கொலை இருக்க வேண்டும்
ஒரு இயற்கை மரணமாக
நோய்மையின் முதிர்ச்சியாக
மருத்துவத்தின் தோல்வியாக
இன்னொரு புதிராக
ஒரு தற்கொலை முடியலாம்.
///விஷத்தை அருந்தும் முன்
அதை முகர்ந்து பார்க்க வேண்டும்///
இவ்வரிகள் ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சி, கவிதையின் கடைசி வரி வரை மனதை நெருடுகிறது. அது வெறும் விஷமாக இல்லாததே இதன் வெற்றி….
I like the part it says it must b taken like a tonic, like a cod liver oil,like cough drops,like the saliva of your sweet hearts…..slow and steady!