உதயசங்கர் எஸ்.பி … (கடிதங்கள்)

தமிழ்ப்பள்ளி குறித்த தங்கள் அக்கறை என்னை வெகுவாகக் கவர்ந்தது. கட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்தில் இருப்பதால் உடன்வர முடியவில்லை. ஆனால் மனதார வாழ்த்துகிறேன்.

உங்கள் நண்பன்

தமிழ்ப்பள்ளி ஏன் தேசியமயமாகக்கூடாது. தேசியப்பள்ளி எனும் வளையத்தில் நாமும் ஒரு தீபமாக எரிவதில் என்ன தவறு? இதனால் நாளிதழ்கள் வருங்காலத்தில் அதிகரிக்கும். நீங்கள் சொன்னதுபோல தமிழர் பொருளாதாரமும் உயருமே. தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவோம். பள்ளிகளை பாதுகாத்து நடக்கப்போவது என்ன?

அவினேஸ், ஈப்போ

அன்பான நவீன். பலமுறை சந்தித்துள்ளோம். பேசியதில்லை. ஏதோ ஒரு தடை. உங்கள் பற்றிய பலரது விமர்சனங்கள் காரணமாக இருக்கலாம். இப்போது நட்புக்கரம் நீட்டுகிறேன். நாம் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. தமிழ் வளரவும் தமிழ்ப்பள்ளி வளரவும் உழைப்போம்.

கிருஷ்ணமூர்த்தி, சமூக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு மன்றம்

நல்ல கட்டுரை. வாழ்த்துகள்.

ராஜேந்திரன், மலாக்கா

தேசியப்பள்ளி எனும் திட்டம் ஏற்புக்குறியதே. ஆனால் நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும். ம.இ.கா இதுகுறித்து அரசிடம் விவாதிக்கலாம். ஆனால், உதயசங்கரின் நோக்கம் நல்ல நோக்கமல்ல. அது தமிழ்ப்பள்ளியை அசிங்கப்படுத்தும் நோக்கம் மட்டுமே.

அரசு, காஜாங்

இந்தக்கட்டுரையால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. எவனெவனோ நம்மீது துப்பி விட்டுப்போவான். நாம் துடைத்துக்கொண்டு போக வேண்டும். அல்லது இப்படி ஒரு கட்டுரை எழுதி ஆற்றிக்கொள்ள வேண்டும். அசிங்கம்!

ஏமாந்த தமிழன்

(Visited 190 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *