கடிதம்: தமிழ்ப்பள்ளி பற்றிய எனது அனுபவப் பகிர்வு!

70,80,90-ஆம் ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளியில் படித்தால் மலாய் மொழியில் தேர்ச்சிப் பெற முடியாது என்ற எண்ணம் பரவலாக இருந்தது. என் உறவினர் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தும், மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாததால் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. 8 முறை ஜூலை தேர்வு எழுதியும் தேர்ச்சி அடையவில்லை. அதனால் என் அம்மாவுக்கும் என் உறவினருக்கும் இந்த எண்ணம் தங்கள் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்ற வெறி இருந்துகொண்டே இருந்தது. என் அம்மா நான் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காக தமிழ்ப்பள்ளியில் சேர்த்தார். என் உறவினர் மலாய்மொழிக்காகவே அவர் மகனை தேசிய பள்ளிக்கு அனுப்பினார். இருவருமே மலாய் மொழிக்கென்று எங்கள் இருவருக்கும் ரொம்பவே மெனக்கெட்டார்கள். ஊக்கம் கொடுத்தார்கள். என் உறவினருக்கு நான் தமிழ்ப்பள்ளி என்பதால் ரிமூஃ கிளாஸ் போவேன் என மிகவும் எதிர்ப்பார்த்தார். எஸ்.பி.எம் தேர்வு வந்தது. தமிழ்ப்பள்ளியில் படித்த நான் ஏ2 எடுத்தேன். மறு ஆண்டு எஸ்.பி.எம் எழுதிய என் தேசியப் பள்ளி தம்பிக்கு மலாய் மொழியில் 7டி கிடைத்தது. தமிழ்ப்பள்ளிக்கும் தேசிய மொழியில் புலமை இல்லாமல் போவதற்கும் சம்பந்தமே இல்லை என யார் வந்தாலும் சத்தியம் செய்வேன். தமிழ்ப்பள்ளி சேர்க்க பிரச்சாரம் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் யாரும் இப்பொழுதெல்லாம் தமிழ்ப்பேசுவதில்லை. ஆங்கிலம் தான் வாழ்கிறது. பொதுவில் ஒரு கருத்தை எடுத்துரைக்க ஆங்கிலம் அவசியம். அதே போல, நமது இனம் பற்றிய அறிவை கூர்மையாக்கிக் கொள்ள  தாய்மொழிக் கல்வி அவசியம்.  அதனை தமிழ்ப் பள்ளிகள் தான் தர முடியும்.

மோகனா

(Visited 135 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *