இரு கவிதைகள்

c26-B0050GD29U-1-l

 

 

 

 

 

 

 

 

உலகின் ஆகச்சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவென்ற கேள்வியோடு
மாயா புத்தகப்பையை வைத்தாள்

எந்த பதிலிலும் திருப்தி இல்லாமல்
நள்ளிரவில் விழித்தவள்
‘தலையணை’ என்று
அவளே பதிலும் கூறினாள்

தலையணையில் படுக்கலாம்…
அப்பா இல்லாத தினங்களில்
கால் போட்டுக்கொள்ளலாம்…
குழந்தைபோல கொஞ்சலாம்…
முகம் புதைக்கலாம்…
எனப் பட்டியலிட்டவள்
கன்னங்களைச் செல்லமாய் கடித்தேன்

தலையணையால் என்னை அடித்தவள்
‘கோவிப்பது போல கொஞ்சலாம்… ‘
என
இறுதிக்குறிப்பை எழுதி முடித்தாள்.

***

வாங்கிய புதிய காருக்கு
இலவசமாக
ஒரு பேபி இருக்கை கிடைத்தது.
பின் இருக்கையில் பொருத்திய கடைக்காரன்
அதிர்வுகளில் அசையாமல் இருப்பதை
உறுதி செய்தான்.
எல்லா மேடுகளிலும்
ஏறி இறங்கியப்பின்
கண்ணாடியில்
பேபி இருக்கையை பார்த்துக்கொள்கிறேன்
அது எப்போதுமே அசையாதிருப்பதை.

(Visited 160 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *