கட்டணம் பற்றிய கவலையில்லாமல்
இன்றிரவும் நாம் பேசுவோம்
நமது
பிரிவுகுறித்தான காரணங்களை
உன்னை சிதைத்த என் வார்த்தைகளை
என்னை உசுப்பிய உன் செயல்களை
நமதுறவு ஏன் காதலில்லை என்பதை
என் காமத்தின் தொடக்கத்தை
உன் முதல் தொடுதலை
எனதவசரத்தை
நீ குற்றவாளியா நான் குற்றவாளியா என்பதை
என் துரோகத்தை
உன் பயத்தை
குற்றவுணர்வை சமாளிக்க
சில சமாதானங்களை
கொடிய ஏக்கத்தை
சில முத்தங்களை
(Visited 42 times, 1 visits today)
