ஊர் வரண்ட
நாளில்
நான் ஆத்திகனானேன்
பட்டையா நாமமா
என காசு சுண்டி
சிவ பெருமானைச் சரணடைந்தேன்
மதி சூடிய பித்தன்
அரைக்கண்ணில் எனைப்பார்த்தான்
‘நேத்தடிச்ச கள்ளா?’ என்றேன்
உணவுப்பஞ்சத்தில் சிவனுக்கு
சோமபானம் மட்டுமே சாத்தியமானது
முழுக்கண் திறந்தவர்
சாம்பல் உதிர உடல் அதிர்ந்தார்
கொட்டாவி விட்டபோது
பஞ்சம் சிவன் வயிற்றை
ஒட்டச் செய்திருந்தது
“என்ன வேண்டும்”
“பசி”
தோலுடையினுள் துளைத்தவன்
கைவிரித்தான்
சூத்துக்குப் பின்னால் இருக்கும்
மாடு
சாகப்போவதைச் சொன்னேன்
சிவன் மாடறுத்தான்.