முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மியிடமிருந்து ஒரு நகைச்சுவை கடிதம்!

இதை வாசித்து இலக்கிய நண்பர்கள் சிரித்தால் நான் பொறுப்பள்ள. சிரிப்பதற்கெல்லாம் யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என நம்புவோமாக. நான் எதற்கெல்லாம் வன்மமாக நடந்துகொள்வேன் என முனைவர் சீரியஸாகத் தெரிவிக்கும்போது உண்மையில் சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரே நாளில் ஒரு கடிதத்தில் பல்டி அடிப்பதற்கெல்லாம் கொஞ்சம் கூடுதல் பயிற்சிகள் தேவைதான். விவரம் புரியாத நண்பர்களுக்கு நேற்றையக் கடிதம் இங்கே
ம.நவீன்

அன்புள்ள நவீன்,

அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவது தங்களின் பழக்கம் என்பதை நான் நன்றாகவே அறிவேன். சிங்கப்பூரில்  லஞ்சம் கொடுக்கும் பழக்கமோ அல்லது வாங்கும் பழக்கமோ இல்லை  என்பதை முதலில் அறியவும். நான் எத்தனை பேருக்கு இலஞ்சம் கொடுத்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா? இப்படி வீணாக என் மீது பழி சுமத்தினால்  சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மின்னஞ்சலில் வல்லினம் நூறு வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. அதற்காக வன்மம் வைத்துக்கொண்டு பழி சுமத்தவேண்டாம்.ஒருவரைப்பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு முடிவுக்கு வருவது நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளவும். எனக்கெனக் கொள்கை இருப்பது தங்களைப்போன்றோருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

வல்லினம் தரமான சிற்றிதழ் என்பதால் அதில் கட்டுரை வெளியிடலாம் என்று கேட்டது உண்மை தான். கருத்தரங்குகள், பட்டறைகள்  நடத்துவோர் கட்டணம்  வசூலிப்பதற்குப் பெயர் லஞ்சம் என்றால் அதனைத் தான் தாங்களும் வாங்கியிருக்கிறீர்கள் என்பதை உணரவும்.

ஒருவரைத் தூக்கி எறிந்து பேசுவதும் அவதூறு கூறுவதும் தங்களின் வழக்கம் என்பதை அறிந்து மன்னித்துவிடுகிறேன்.

(Visited 253 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *