மண்படிந்து கிடைத்த
புலியின் நகத்தை
நேற்று மீண்டும் எடுத்துப் பார்த்தேன்
மிஞ்சியிருந்த அதன் உரோமத்தில்…
மலுங்காத கூர்மையில்…
மாறாத கடினத்தில்…
அதன் உயிர் மீந்திருந்தது
முரட்டுக்கயிர்கொண்டு
கோர்த்தணிந்தபோது
முயல், மான், மனிதனின்
உயிர் ஓலம்
இரவெங்கும் சூழ்ந்தது
மண்படிந்த புலியின் நகம்
இறந்து போன பல்லியின் வாலென
உயிர் துடிப்புடன் காத்திருக்கிறது
உண்ணமுடியாத போது
காயப்படுத்தவாவது
சில உயிர்களுக்கு.
(Visited 61 times, 1 visits today)