பேச்சி: கடிதம்

திரு நவீன்

பேச்சி சிறுகதை வாசித்தேன், நான் பெரும்பாலும் இணையத்தில் கிடைக்கும் கதைகளை 20180304_161641-300x218வாசிக்கிறேன். பேச்சி என்னுள் ஒரு சலசலப்பை உருவாக்கிவிட்டது. கதை வாசித்து பத்து நாட்கள் ஆகியும் பேச்சி பற்றியே சிந்தித்துகொண்டிருக்கிறேன் என கூறிவிடலாம். பெரிய இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லையெனினும், இப்போது படித்துகொண்டிருக்கிறேன். கதையை வாசித்து முடித்தவுடன் என்னை வசிகரித்த வரிகளை தொகுக்க வேண்டும் என்று நினைத்தேன். மனதளவில் சேகரிப்பதைவிட, எழுதி பார்த்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. பேச்சி கதையின் என்னை கவர்ந்த வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

ண்ணாடியை கழற்றினேன், எதையுமே தெளிவாக பார்ப்பதில் விருப்பம் இல்லாமல் போயிருந்தது, பார்க்க வேண்டியது அனைத்தும் என்னுள்ளேயே தெளிவாக இருந்தது.

விழுதுகள் படர்ந்து ஒரு வயதான தாடிக்கிழவனைபோல நிதானமான மரம். அதன் அரவணைப்பில்தான் பேச்சியின் கோயில் இருந்தது.

ழுந்தபிறகும் படுக்கையில் சுறுக்கம் இருக்காது, பக்கத்தில் ஒருத்தி இவ்வளவு நேரம் படுத்திருந்தாளா என்றுகூட சந்தேகமாக இருக்கும்.

வள நெனச்சிக்கிட்டு உன்ன செஞ்சிக்கிறன்’ என அணுகியபோதுதான் குறி வீங்கியது.கீழே விழுந்து புரண்டான், பொன்னி எட்டி உதைத்த காலை இறக்காமல் வைத்திருந்தாள்.அவள் பாதம் செந்நிறமாக இருந்தது.”தேவிடியா முண்ட” என கத்திகொண்டே அறையை விட்டு ஓடியேவிட்டான். (இந்த இடத்தில் சிரிக்காமல் மேலும் தொடரமுடியவில்லை)

ற்புதங்கள போல கொடுரத்தையும் வாழ்க்கையில் ஒரு தடவ தான் பாக்க முடியும்.

டம்ப போல பல்லும் கருப்பா இருந்திச்சு,பசிச்சது,பாலு குடுத்தா,நா குடிச்ச மொத மொலப்பாலு.என்னைய தோள்ள தூக்கிகிட்டு ஓடுனா,ரொம்ப தூரம் ஓடினா,கல்லு முள்ளு பக்காம ஓடினா,அது ஓட்டம் இல்ல பாய்ச்ச.அவ முதுகுல சரிஞ்சிக்கிட்டே எட பாதத்த பாக்குறேன்,செவந்திருந்திச்சி,’அது பொன்னியோட பாதம், தாயோட பாதம்’

லைமுடி நடுவகிடுக்கு நேர்கோட்டில் மூக்கின் நுனி இருந்தது. (இது என்னய போல கம்மியா படிக்கறவங்களுக்கு அதிநுட்பமாதான் தெரியுமோ)

 நன்றி

அன்பரசன் பாலகிருஷ்ணன்

(Visited 143 times, 1 visits today)