மனசலாயோ : கடிதங்கள் 1

46807044_287766291872702_2024474607821520896_nபடைப்பாளி வாழ்வின் அனுபவத்திலிருந்து  அரூபமாகத் திரண்டு உருவெடுக்கும்  தான் பெற்ற தனக்கான தனி உண்மையை/ கேள்வியை/ சந்தேகத்தை  சத்தம், ஒளி, வண்ணம், மொழி போன்ற மூலங்களைப் பயன்படுத்தி வாசகனுக்கு / ரசிகனுக்கு அவ்வரூபத்தைக் கடத்துகிறான்.  கைவினைக் கலைஞன் இந்த மூலங்களைக் கொண்டு அனைவருக்கும் பரிட்சயமான பொது உண்மையை/ பொது ரசனையை/ அறுதியிட்ட நீதியை/ திட்டவட்டமான கட்டமைப்பை  வேறு வகையில் மறுநிர்மாணிப்பு செய்துபார்க்கிறான்.

அருமையான விளக்கம்… மனசலாயோ தொடர்ந்து வாசிக்கிறேன். அருமையாக இருக்கிறது. இனிமேல் சாராவைப் பற்றி எழுத இடம் இருக்காதே என எண்ணும்போது வருத்தம் மேலிடுகிறது. ‘மனசலாயோ’ ஒரு புத்தகமாகவே தாங்கள் போடலாம்

முனியாண்டி ராஜ்

நவின் ஐயா நீங்கள் சாராவைப் பற்றி சிறுகதை எழுதியிருக்க வேண்டும். அது ஒரு சிறுகதை போலவே இருந்தது. சில சமயங்கள் நான் எதை வாசிக்கிறேன் என குழப்பம் வருகிறது. ஆனால் சுவாரசியமான நடை. திடீரென தத்துவம் பேசுகிறீர்கள். திடீரென நகைச்சுவை. நன்றாக போகிறது.

பாமா

மனசலாயோ…மனதை வாட்டியும் வருடியும் செய்த தொடராக….நவீனுடனேயே பயணித்துக் கொண்டிருந்த அனுபவமே அலாதியானது.தென்னந்தோப்பும் கடலும் தாலாட்டும்போது கழுத்து வலியோடும் கணினியோடும் போராடித் தோற்காத நவீன் பற்றிய பிரமிப்பு கூடிக்கொண்டேதான் வருகிறது.ஒருவருக்குள் கிளர்ந்து கொண்டிருக்கும் பல்வேறு உணர்வுகளை எல்லோராலும் எழுத்தில் வடித்துவிட முடிவதில்லை, நவீனுக்கு அது முடிகிறது.மெக்ஸிகோ தோழி சாரா என்னையும் அழவைத்தாள்.

ஆசிரியர் சுப்புலட்சுமி

46670559_299852633983828_6854628398367506432_n/முத்துசாமியின் தலையில் அடிபட்டு விழும்போது அருகில் இருக்கும் மார்வாடியைப் பார்த்து சாமிநாதன் புன்னகைக்கும்போது அந்த வன்மமும் சிரிக்கிறது./

/ரத்த வெறிகொண்ட வளர்ப்பு நாயை அதன் எஜமானன் நிதானமாகத் திறந்துவிடுவதுபோல அவர் வன்மத்தை திறந்துவிடுகிறார்./

/அவர்கள்தான் பல அடுக்குகள் கொண்ட மனதுடன் நம்முடனும் நமக்குள்ளும் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்./

இவை எனக்குப் பிடித்த வரிகள்.

இன்று நீங்கள் எழுதிய 7ஆம் பாகம் எனக்கும்கூட அவசிப்படும் கருத்துகள்… வாசிப்பிற்குப் பிறகு சில நிமிடம் அமைதி என்னில் ஏற்பட்டது. அது உங்கள் எழுத்து ஏற்படுத்திய தாக்கம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மனம் கொஞ்சம் பாரமானது.

பவித்திரா

நவீன் போகிற போக்கில் தத்துவ ஞானியா ஆயிடுவீர்கள் போல. ஆனால் சாரா நீங்கள் அழகன் என்றதும் சந்தோசமும் படுகிறீர்கள். சுவாரசியமான எழுத்து நடை. ஏழாம் பாகம் கவிதை வாசிப்பது போலவே இருந்தது. சூரிய அஸ்தமனத்தைச் சொல்லும் இடங்கள். அப்பப்பா. உண்மையைச் சொல்லுங்கள். சாரா இன்னமும் தொடர்பில் இருக்கிறாள்தானே? எப்படியோ எனக்கு தினமும் சுவாரசியமாக பொழுதுப்போகிறது.

ஜெசிலா

(Visited 274 times, 1 visits today)