வ‌ன்மையில் வ‌ந்திடுங் கூற்ற‌ம்

தோயோல் அழைத்துச் சென்ற‌
பிர‌தேச‌மெங்கிலும்
தொன்மையான‌ ஆடைய‌ணிந்த‌
என‌து
மூதாதைய‌ர்க‌ளின் மூதாதைய‌ர்க‌ள்
ந‌க‌ம் வெட்டிக் கொண்டிருந்தன‌ர்.

கூறிய‌ போர்வாள்க‌ளை
நக‌வெட்டிகளாக‌ வ‌ச‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள்
த‌வ‌றுத‌லாக‌ ந‌றுக்கிவிடும்
த‌ங்க‌ள் விர‌ல்க‌ளை
இத‌ற்குமுன் த‌வ‌றுத‌லாக‌ வெட்டி
வீச‌ப்ப‌ட்டிருந்த‌ க‌ர‌ங்க‌ளின்
குவிய‌லில் வீசின‌ர்.

மூதாதைய‌ர்க‌ளின் உரையாட‌ல்
தொட‌ர‌ப்போகும் பிற‌வி ப‌ய‌த்தை
ப‌ற்றியிருந்த‌து.

அவ‌ர்க‌ள் இல்லாம‌ல் போகும்
அடுத்த‌ பிற‌வி அச்ச‌ம்
ப‌ற்றியிருந்த‌து.

இறந்து பிற‌க்காத‌ இடைவெளியில்
வ‌ள‌ர‌ந்து கொடி ப‌ட‌ரும் ந‌க‌ம்
ப‌ற்றியிருந்த‌து.

கிடைக்காம‌ல் போக‌க் கூடிய‌
கூறிய‌ வாள்
ப‌ற்றியிருந்த‌து.

ந‌க‌த்தோடு உயிரிழ‌ந்த‌ விர‌லின்
ர‌த்த‌வாடை
மூளை ந‌ர‌ம்பில் ப‌தியும் ஊன‌ம்
ப‌ற்றியிருந்த‌து.

அவ‌ர்க‌ள் இல்லாத‌ உல‌க‌த்தின்
மௌன‌ம்
ப‌ற்றியிருந்த‌து

(Visited 70 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *