இன்று புதிதாய் நவீன கவிதைகளை வாசிக்க வரும் ஒருவருக்கு நான் முதலில் பரிந்துரைப்பது சுந்தர ராமசாமியின் விமர்சன நூலான ‘ந.பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும்’ தான். அதேபோல மிகக் கவனமாய் தவிர்ப்பது அவரின் கவிதை தொகுதியாகத்தான் இருக்கும். ஒருவேளை சுந்தர ராமசாமியின் கவித்துவத்தை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நான் மக்காக இருக்கிறேனோ என்னவோ.
தொடர்ந்து வாசிக்க… http://ethir.org/?p=1050
(Visited 43 times, 1 visits today)
சிந்தனையைக் கிளறும் நேர்காணல். கவிதை குறித்த சிந்தனைகள் கவனத்தை ஈர்க்கின்றன. கவிதை உருவாகும் கணங்கள்/ பின்புலங்கள் ஒவ்வொரு படைப்பாளிக்கும் மாறுபடலாம். எது கவிதை என்ற கேள்விக்குக்கூட பதில்கள் வேறுவேறாகக் கிடைக்கலாம்.
சிறந்த மலேசியப் படைப்புகளை அடையாளம் காட்டும் பணியில் முனைப்பு போதாது என்ற வருத்தம் எனக்கும் உள்ளது. ஆனால், அதற்கான முயற்சிகள் அறவே இல்லை என்று சொல்லமுடியாது. உலகளாவிய பார்வைக்கு நம் மலேசியத் தமிழ்ப் படைப்பாளர்களின் சிறந்த படைப்புகளை அடையாளம் காட்டவேண்டிய முக்கியப் பணியை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். இயக்கங்களும் எழுத்தாளர்களும் இணைய வாகனத்தில் நம் சிறந்த படைப்புகளை ஏற்றி அனுப்பவேண்டும். கால நதியில் எல்லாமே கரைந்து மறைந்துகொண்டிருக்கின்றன. காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டிய படைப்புகள்.