இன்று மதியம்
சிட்டுக்குருவிகள் சேஷ்டைகளை
ஆழ்ந்து நோக்கிய மாயா
நள்ளிரவில்
தனது ஒற்றை விரலால்
எனதுடலை அழுத்தி
துளை செய்தாள்
o
மாயாவைப் போலவே
இரண்டு கால்கள் கொண்ட
சிட்டுக்குருவிகள்
அவள் நெருங்கிப் போகையில்
மெல்ல நகர்ந்தன
பின்னர் அவை பறந்த போது
மாயாவுக்கும்
இறக்கை முளைத்தது.
o
தலைக்கு மேல் பறக்கும்
காகத்தைப் பின்தொடர்ந்து
கைகளை விரித்தபடி மாயா பறந்தாள்
தடுக்கி விழுந்தவள்
தலைக்கு மேல் இன்னும்
இல்லாத காகத்தை
தரையில் தேடினாள்.
(Visited 64 times, 1 visits today)
// தடுக்கி விழுந்தவள்
தலைக்கு மேல் இன்னும்
இல்லாத காகத்தை
தரையில் தேடினாள்.//
மிக ரசித்தேன்…