நேர்காண‌ல்

எதிர்முகம் நேர்காணல்

நேர்காணல் 01கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம், இணைய தொலைக்காட்சியான தமிழ் மலேசியா தொலைக்காட்சியில் ‘எதிர்முகம்’ எனும் அங்கத்திற்காக என்னை நேர்காணல் செய்தார்கள். சமூக வலைத்தளங்களிலும் இலக்கிய வட்டங்களிலும் வல்லினம் மற்றும் என்னைக்குறித்த சர்ச்சைகள் தொடர்பான கேள்விகளுடன் K.P ஜோன் இந்த நேர்காணலை சிறப்பாகவே முன்னெடுத்தார். அதன் எழுத்து வடிவம் இது. எடிட்டிங்கில் நீக்கப்பட்ட சில பகுதிகளையும் இணைத்துள்ளேன். சிலவற்றை நீக்கியும் உள்ளேன். சில பதில்களை எழுத்து வடிவத்திற்கு ஏற்ப விரிவாக்கியுள்ளேன். இது கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதால் அண்மையச் சூழல்கள் குறித்து பேசியிருக்க மாட்டேன். தமிழ் மலேசியா தொலைக்காட்சிக்கு நன்றி

மேலும்

“அவதூறுகள் தரமான ஒரு விருதின் மூலம் பொடிப்பொடியாகின்றன” – ம.நவீன்

04மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது. தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை முதன் முறையாக மலேசியாவிலிருந்து பெரும் ம.நவீனை தமிழ் மலர் நாளிதழுக்காக நேர்காணல் செய்தோம்.

மேலும்

பிபிசி தமிழோசையில் நேர்காணல்: மலாயா தமிழ் நூலகம் படிப்படியாக மூடப்படுமா?

OLYMPUS DIGITAL CAMERA

பி.பி.சி தமிழோசையில் மலாயா பல்கலைக்கழகத் தமிழ் நூலகத்தின் நிலை குறித்து நேர்காணல் செய்தார்கள். கீழே அதன் இணைப்பு உள்ளது.

பிபிசி தமிழோசை நேர்காணல்

மேலும்

“எனது பெருங்கோபமும் பேரழுகையும் எனக்குள் இருக்கும் கவிஞனிடமிருந்துதான் எழுகின்றன.”

naveen pixகேள்வி : சிறுகதையில் இருந்துதான் உங்கள் இலக்கியப் பயணம் தொடங்கியதாக அறிகிறேன். ஆனால் உங்களின் ஆறாவது நூலாகத்தான் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது, காரணம் என்ன?

ம.நவீன் : எனது சிறுகதைகள் குறித்த எவ்வித உயர்ந்த மதிப்பீடும் எனக்கு இல்லாதது ஒரு காரணம் என்றால் அவ்வுணர்வு ஏற்பட நான் தேடித்தேடி வாசித்த நல்ல சிறுகதைகள் மற்றுமொரு காரணம். இயல்பாகவே நமக்குள் இருக்கும் வாசகமனம் எப்போதுமே நம் படைப்புகளில் நுழைந்து ஒப்பீடு செய்வது இயல்பு. அவ்வொப்பீடு சிறு தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நம்பும் நல்ல வாசகர்கள் நமது படைப்பு குறித்து ஆக்ககரமான கருத்துகளைக் கூறி ஊக்கம் தருகையில் அத்தயக்கம் மெல்ல அகல்கிறது. அவ்வாறான ஊக்கம் எழுத்தாளர் இமையம் வழி கிடைத்தது.

மேலும்

“நானும் ஒரு பின் தங்கிய மாணவன்தான்”

09இந்த நூல் குறித்து பல்வேறு ஆளுமைகள் மத்தியில் நல்ல பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில் இந்நூல் குறித்து கொஞ்சம் விளக்குங்கள்?

ம.நவீன் : கலை வெளிப்பாட்டுக்கான மனம் படைத்த ஓர் ஆசிரியர் தனது அத்தனை கலைத்தன்மைகளையும் மூட்டைக்கட்டி ஓர் ஓரத்தில் வைத்துவிட்டு நடப்பு சூழலில் உள்ள கல்வித்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்போது ஏற்படும் கட்டுக்கடங்காத மன உளைச்சலில் தனது கடந்த கால பணியின் பசுமையை நினைத்துப்பார்ப்பதாக இந்த நூலை எண்ணிக்கொள்ளலாம்.

மேலும்

“விருதுகள், வாங்குபவரின் தகுதியைவிட கொடுப்பவரின் தகுதியையே காட்டுகிறது “

பல்வேறு சர்ச்சைகளிலும் விவாதங்களிலும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தாலும் வல்லினம்இயக்கத்தின் செயல்பாடுகள் அத்தனை எளிதாய் மலேசியத் தமிழ்ச்சூழலில் மறுக்கப்படக்கூடியதல்ல. மலேசியத் தமிழ்ச்சூழலில் பதிப்புரிமை குறித்தும் ராயல்டி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அதை முறையாகக் கடைப்பிடித்தும் வருபவர்கள். முற்றிலும் இளம் தலைமுறையினரின் இணைவால் உருவாகியுள்ள வல்லினம்தமிழக , இலங்கை போன்ற நடுகளில் இயங்கும் தீவிர இலக்கிய இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதோடு , உலக இலக்கியத்தோடு ஒப்பிடுகையில் இருக்கும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் இடைவெளியை குறைக்கவும் செயல்படுகின்றனர். இவ்வருடம் பறைஎனும் காலாண்டு அச்சு இதழை மலேசிய இலக்கிய உலகுக்கும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வருடம் தொறும் வல்லினம் நடத்தும் கலை இலக்கிய விழாகுறித்து அறிய வல்லினம் மற்றும் பறை இதழின் ஆசிரியர் .நவீனைச் சந்தித்தோம்.

மேலும்

இன்னொரு இனக்குழுவின் அடையாளம் பகடிக்கு உகந்ததல்ல….

 

 

ம.நவீன்

 

 

கேள்வி : ‘இலக்கிய ரௌடி’ என மாற்றுச் சிந்தனையுடையவர்களை அடையாளமிட்டு விளிப்பதாக நீங்கள் ஒருமுறை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில் உங்கள் உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியொரு அடையாளம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? அம்மாதிரியான ஓர் அடையாளத்தைக் கொடுத்தவர்களின் பிரச்சினை என்ன?

பதில் : நான் ‘லும்பன் பக்கங்கள்’ எனும் தலைப்பில் தொடர் எழுதியதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியச் சொல்லான Lumpenproletariat என்பதை முதலில் அறிமுகப்படுத்துகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்புடன் தொடர்பற்ற, வர்க்க உணர்வை நோக்கி நகராத உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளை ஆரம்பத்தில் அவர் அவ்வாறு அழைத்தார். ரௌடிகளும் அதில் அடக்கம்தான். சமூக நன்னெறிகளை இறுக்கப் பிடிப்பவர்கள் அந்த அடையாளத்தால் வருந்தலாம். எனக்கு என்ன கவலை. பின்நவீனத்துவம் இந்த உதிரி மனிதர்களின் வாழ்வையும் பேசுகிறது. ஆனால், ‘ரௌடி’ எனும் அடையாளத்தை வசைச்சொல்லாகப் பயன்படுத்துபவர்கள் மேல்தான் எனக்குக் கோபமே. ‘மீடியகர்’ எழுத்தாளர்களுக்கு மத்தியில் தனது கருத்தை சமரசமின்றி நிருபுபவன் ‘ரௌடி’ என அழைக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பல ஆண்டுகளாக கொட்டைப்போட்ட எழுத்தாளர்களாக இருந்தவர்களின் இலக்கியத் தரத்தையும் அரசியல் நிலைபாட்டையும் கேள்விக்குட்படுத்தும்போது பிரச்னையாகிறது. அவர்களிடம் அதற்கான பதில் இல்லை. கருத்துநிலையில் எதிர்வினையாற்ற வக்கற்றவர்கள் வசைப்பதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்…பாவம்.

மேலும்

பறவைகள் மனிதனைப்பார்க்க விரும்புவதில்லை

பிரேசர் மலைக்குச் செல்வது உற்சாகம் தரக்கூடியது. ‘கெந்திங் மலை’ போன்று வருபவர்களின் பணத்தைக் கறக்கும் எவ்வித முன்திட்டங்களும் அங்கு இல்லை. ஒரு மணிகூண்டு. அதைச் சுற்றிலும் ஓரிரு கடைகள், கிளினிக், தபால் நிலையம் இவ்வளவுதான் பிரேசர் நகரம். எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து அலுக்கும் வரை காட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் பிரேசர் இந்நாட்டின் முக்கிய பறவைகளின் சரணாலயமாக இருப்பதைப் பலரும் அறிவதில்லை.
மேலும்

தினக்குரலில் வெளிவந்த நேர்காணல்: என்னிடம் நன்றி உணர்ச்சி இல்லை !

இன்றைய இளைஞர்கள் எங்கு போய் கொண்டிருக்கிறார்கள்? இலக்கியம் என்பதில் அவர்களது ஈடுபாடு எவ்வாறு உள்ளது? அதனை உள் வாங்கிய இளம் படைப்பாளிகளின் இயக்கம் எவ்வகையில் இயங்குகின்றது? படைப்பதும் அதனை பாதுகாப்பதும், தன்னை சிறந்த படைப்பாளி என அடையாளப்படுத்திக் கொள்வதும் மாத்திரம்தான் ஒரு படைப்பாளியின் இலக்கியத்தின் உச்சமா? இவற்றுக்கெல்லாம் முரணான விடையாகிறார்…ம.நவீன் என்ற இளம் படைப்பாளி.

மேலும்