வணக்கம்.
ரௌடிகளாகவும் ஒழுக்கத்தைச் சிதைப்பவர்களாகவும் புனிதங்களைக் கேள்வி எழுப்புபவர்களாகவும் நம்பப்படும் எங்களுக்கு இந்நிகழ்வில் உரையாற்ற வாய்ப்பு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள்.
எங்களுக்கு குறைந்த நேரமே கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் என்னால் உரையாற்ற முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் கதை சொல்லலாம். வல்லினம் வளர்ந்த கதையைச் சொல்லலாம்.
2005 ஆம் ஆண்டு, தொடையையும் தொப்புளையும் காட்டும் நடிகைகளின் படம் போட்டு இலக்கியம் வளர்க்கிறோம் என்று பாவனை செய்துக் கொண்டிருந்த பத்திரிகைகளின் மேல் கசப்பு ஏற்பட்டிருந்த காலம்; தங்களுக்கு விளங்காத மாற்று இலக்கிய முயற்சிகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் வெட்டி , குத்தி சிதைத்துக்கொண்டிருந்த எரிச்சலூட்டிய காலம்; எழுத்தும் இலக்கியமும் வியாபார பொருளாகி விட்டிருந்த ஆபாசமான காலம். இக்காலத்தில் மலேசியாவில் ஆரோக்கியமான இலக்கிய சூழல் உருவாக மாற்று முயற்சியில் படைக்கப்படும் படைப்பிலக்கியங்களையும், மாற்றுச் சிந்தனைகளையும் ஏந்திச்செல்ல ஓர் இதழ் வேண்டுமென முடிவெடுத்து ‘காதல்’ இதழைத் தொடங்க முனைப்புக்காட்டினேன். அதில் இணை ஆசிரியராக இருந்து படைப்புகளைப் பிரசுரித்தேன். அது 10 இதழ்களோடு பொருளாதார பிரச்சனையால் நின்றது.
பின்னர் ‘வல்லினம்’ தொடங்கினேன். நண்பர்களிடம் ஐம்பது , நூறு என்று வாங்கி இதழ் வெளிவந்தது. எட்டாவது இதழில் அதுவும் அதிகாரத்திடம் சரணடையும் ஆபத்து இருப்பதை உணர்ந்தேன். மலேசிய இலக்கியம் ஏற்கனவே அதிகாரத்தின் பிடியில் இருப்பது போல வல்லினமும் வருவதை நான் விரும்பவில்லை. இங்கு அதிகாரத்தின் தன்மையையும் சொல்லவேண்டியுள்ளது.
இந்நிகழ்வில் எங்களுக்கு முன் பலரும் பேசினார்கள். தமிழறிஞர் திருமாவளவன் வேர்சொற்கள் பற்றியும் வழக்கறிஞர் நண்பர் ‘லெம்பா பூஜாங்’ பற்றியும் பேசினார்கள். அவர்களுக்கு இடையூறு தருவது போல இடையிடையே துண்டு சீட் வழங்கப்பட்டது எனக்கு வேதனை அழித்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிக முக்கிய அறிவுத்துறைக்கு போதுமான நிமிடங்களா அவை? இதுவே இந்நிகழ்வுக்கு நன்கொடை அளித்த ஓர் அரசியல்வாதியோ ஒரு தொழிலதிபரோ தங்கள் வீட்டில் ‘வெங்காயம் இல்லை’ எனப் பேசிக்கொண்டிருந்தால் அவர்களை நிறுத்தச்சொல்லி துண்டு சீட் வைக்கும் தைரியம் யாருக்காவது வருமா? இங்கு நாம் அறிவுலகத்துக்குக் கட்டுப்பட்டுள்ளோமா அல்லது அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுள்ளோமா என சிந்திக்க வேண்டும்.
இப்படி ஒரு அதிகாரத்தின் பிடியில் மாட்டிக்கொள்வதை விரும்பாமல் நான் வல்லினத்தை நிறுத்த முடிவெடுத்தேன். எல்லா நல்ல முயற்சிகளும் தன்னை நிலை நிறுத்துவதற்காக செய்து கொள்ளும் சமரசங்களை நான் விரும்பவில்லை. இந்த நிலையில் எனக்குக் கைக்கொடுத்தவர் சிவா பெரியண்ணன். தனது சொந்த செலவில் வல்லினத்தை அகப்பக்கமாகக் கொண்டுவந்தார். இன்று வல்லினம் மூலம் மலேசிய இலக்கியத்தை உலகம் முழுதும் கொண்டு செல்ல அவரே மிக முக்கியக் காரணம். வல்லினம் தரம் அதிகரிக்க யுவராஜன் ஆலோசனை கைக்கொடுத்தது.
இதற்கிடையில் நான் சில வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. மலேசியாவுக்கென தனித்தக்குரல் அதன் காத்திரத்தோடு ஒலிக்க வேண்டுமென நான் இலங்கை தமிழர்களைப் பார்த்து அறிந்து கொண்டேன். வல்லினத்தின் செயல்பாடுகளை மாற்றியமைக்கத் தொடங்கினேன்.
இந்நிலையில் எனக்குள் சில கேள்விகள் உருவானது. மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலும் மலாயா பல்கலைக்கழகத்திலும் தமிழை மூல மொழியாகக் கற்று வெளிவருபவர்கள் குறைந்த பட்சம் 500 பேர் இருப்பர். இவர்கள் சமூகத்துக்குள் நுழைகின்றனர். இவர்களுக்கும் சமூகத்துக்குமான தொடர்புதான் என்ன? ஒரு ஆசிரியராக இருப்பதை தவிர நமது சமூக செயல்பாட்டில் இவர்களின் பங்களிப்பு என்ன? இவர்களைக் கல்வி கூடங்கள் எந்த அளவிற்குத் தயார்ப்படுத்துகின்றன? இலக்கியம் அரசியல் ஒட்டிய இவர்கள் பார்வை என்ன?
இந்தக் கேள்வியை கடந்த ஓராண்டாகவே நான் பலரிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களை முன்னோக்கி நகர்த்தும் ஆற்றலும் வாய்ப்பும் இன்று அக்கல்லூரி விரிவுரையாளர்களுக்கு உள்ளது. அப்பொறுப்பை உணர்ந்து நாம் இணைந்து செயல்பட்டால் ஆக்ககரமான சமூகத்தை உருவாக்கலாம்.
வல்லினம் மூலமாக நான் இத்திட்டத்தை நகர்த்த எண்ணம் கொண்டுள்ளேன். சிறுகதை பட்டறை செய்வது முதல் , போட்டி நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளை புத்தகமாக்கி அதை இலவசமாகவே கல்லூரிகளில் சேர்ப்பது வரை நான் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன். எனக்கான தேவை கல்லூரிகளில் நுழைந்து பட்டறை நடத்தும் அனுமதி மட்டுமே. இதைக் கல்லூரி விரிவுரையாளர்கள் செய்வார்களெனில் நம்மால் மேடை நாடகம், கவிதை, குறும்படம், என கல்லூரி மாணவர்களை அடுத்தடுத்து ஆரோக்கியமாக நகர்த்த முடியும். இந்தப் பயிற்சி ஆசிரியர்கள்தான் பின்னாலில் நமது தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் முன் நிர்க்கப்போகிறார்கள். அவர்கள் பெரும் அறிவு தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் சென்றடையும் பட்சத்தில் ஒரு மாற்றுச் சிந்தனை கொண்ட சமூகத்தை அடுத்த 20 ஆண்டுகளில் நாம் பெற முடியும் என உறுதியாக நம்புகிறேன்.
இல்லாது போனால் எழுத்தாளர் சங்கமும், ஜனரஞ்சக பத்திரிகைகளும் தாங்கள் நடத்தும் அருவருப்பான கூட்டங்களுக்கு ஆள் நிறைக்க மட்டுமே நமது பயிற்சி ஆசிரியர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆபத்து உண்டு.
நன்றி வணக்கம்.
எப்போதும் அதிகாரத்துக்கு அடிமயிர் புடுங்கிக்கொண்டிருக்கவே இலக்கியவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர் கழகங்களுக்கும் அவற்றின் கழிவுகளை அரங்கேற்றும் செத்தத்தமிழ் அச்சு, ஒளி ஒலிபரப்பு ஊடகங்களுக்கும், அன்றாடம் அவற்றின் பேதியை நக்கிச் சோரம்போகும் – நம் முதுகெலும்பற்ற மூளை கழன்ற மூத்த எழுத்தாளர்களுக்கும் – முக்கிக்கொண்டே தமிழை விற்கும் சிந்தனைக் காயடிக்கப்பட்ட முனைவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கழுத்தில் சவரக்கத்தியை வைத்து இழுத்தது போன்ற சந்தோஷத்தைத் தரும் பேச்சு. பலே பாண்டியா!
nice speech. i read it all. excellent.
நவீன்! தங்களின் பேச்சு இலக்கியக் கபோதிகளைச் சம்மட்டி கொண்டு
அடிப்பது போல உள்ளது. இலக்கியம் பற்றிய தீவிர சிந்தனைகளுக்கு
இப்போது மாநாடுகளில் இடம் இல்லை. இலக்கியம் என்ற பெயருக்குப்
பின் ஏகப்பட்ட சுய லாபங்கள்! இலக்கியம் பற்றி அரிச்சுவடி கூடத்
‘ தெரியாதவன்கள் ‘ ஜால்ராக்களை வைத்துக்கொண்டு சட்டாம்பிள்ளைத்
தனம்செய்வதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.
வல்லினம் வளர்ந்த கதையைக் கேட்கும்போது உங்களைப் போன்ற
இளையர்கள் தான் இலக்கியத்தை வளர்க்க முடியும்
நவீன், உங்களுக்கு மட்டுமா குறைந்த நேரம் வழங்கப்பட்டது?
( நேர மேளாண்மை காரணமாகவே ஒவ்வோர் அரங்குக்கும் குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ளவும் வேண்டுமா என்ன?). எல்லா பேச்சாளர்களையும் நடுநிலையோடு அணுகி எல்லோரும் பேசுவதற்கு கருத்துகளை முன்வைப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்பதுதான் நிதர்சனம்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களான உங்களையும் கே.பாலமுருகனையும் மற்றும் உங்களோடு வந்த சிவா பெரியண்ணன், எஸ்.யுவராஜன் போன்றோரையும் ஒரே மேடையில் பார்த்ததில், உரையைக் கேட்டதில் பல பயிற்சி ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள்,பேராளர்கள் மகிழ்ச்சியடைந்ததாகக் கருத்துரைத்தனர்.
குளுவாங்கிலிருந்து வந்த நண்பர் இப்படி மறுமொழிந்தார்: “சார், முதன் முதலில் பேசினாரே (நவீன்) அந்த இளைஞர்…அவருக்குள்ளே ஒரு ‘நெருப்பு கனன்று’ கொண்டிருக்கிறது!.
யார் என்ன பேசினார்கள், எப்படிப் பேசினார்கள் என்று ஆர்வமுடன் கேட்ட பேராளர்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.
பாலா அந்த நிகழ்ச்சியில் உங்கள் பேச்சையும் அதற்கு கிடைத்த எதிர்வினைப் பற்றியும் கூறினார். இன்னும் சந்திக்கவில்லை. சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய இடத்தில், சொல்லவேண்டிய விதத்தில் சொல்லியிருக்கிறீகள். போய்ச் சேரவேண்டியவர்களுக்கு கட்டாயம் சேரும்.
அந்த நிகழ்வு குறித்து பல்வேறு எதிர்வினைகளைக் காதில் இன்னும் விழுந்த வண்ணம்தான் உள்ளது.
முதலாவது உடை பற்றியது : ஜீன்ஸ் டி-சட்டையோடு வந்தது அங்கு பலருக்கும் பிடிக்கவில்லை. அது நாகரீகம் அற்றது என கருதினர். ஆதங்கப் பட்டவர்கள் பெரும்பாலும் கோர்ட் சூட் போட்டவர்கள். அவர்கள் போட்டிருந்ததும் மேற்கத்திய உடை. நான் போட்டிருந்ததும் மேற்கத்திய உடைதான். என்ன…அவர்கள் போட்டிருந்தது மேட்டுக்குடியின் உடை நான் போட்டிருந்தது உழைப்பாளிகளின் உடை. எனது தொழில் சார்ந்த நிமிடங்கள் தவிர அவ்வாறான உடையை நான் போடுவதை தவிர்க்கிறேன். ஆனால் இலக்கியத்துக்கும் உடைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற மொண்ணையான கருத்துக்கெல்லாம் உதாசினத்தைத் தவிர வேறென்ன பதில் தரமுடியும். ஒருவேளை ஒருவனுக்கு நல்ல உடை வாங்குவதற்கு பணம் இல்லை என வைத்துக்கொள்வோமே… அப்போது அவன் மேடையில் ஏற தகுதி இல்லாதவனா? உடையில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் கண்கள்தான் நிறத்திலும், வசதியிலும், அறிவிலும் பின்னர் சாதியிலும் பார்க்கிறது. மேடைக்கு வெளியே பலரும் சூழ்ந்து குறைப்பட்டுக்கொண்டனர். எனக்கு சட்டென இளங்கோவன் ஞாபகம் வந்தது. நவீன இலக்கியம் பேசிக்கொண்டிருக்கும் 2011 ல் இந்தக் கதி என்றால் 1988ல் மாதம் நவீன இலக்கியச் சிந்தனையின் புதுக்கவிதைப் போட்டிக்கு நீதிபதியாகவும் கட்டுரை படிக்கவும் கூலிம் வந்த இளாங்கோவன் கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறு, நீள் முடியுடனும் தாடியுடனும் மொட்டைக்கை டி சட்டை ஜீன்ஸ் சகிதம் இருந்தது இதுபோன்றவர்கள் எவ்வகையான கிலியை ஏற்படுத்தியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். http://www.vallinam.com.my/issue23/interview.html
இரண்டாவது நான் தொடங்கிய விதம் : ‘ரௌடிகளாகவும்…’ என நான் தொடங்கியது பலருக்கும் பிடிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு ரௌடிகளைப் பிடிக்கவில்லை. ஆனால் இலக்கியத்தில் லும்பன் கலாச்சாரம் குறித்து பேசுவார்கள். அவர்கள் வாழ்வினை ஆராய்வார்களாம். திரைப்படங்களில் அவர்கள் பாத்திர வார்ப்பை ‘உச்சு’கொட்டி ரசிப்பார்களாம்.(என்னங்கடா நியாயம் இது) நிஜத்தில் ,ரௌடிகள் என்பது அவர்களுக்குத் தீண்டத்தகாதச் சொல்லாகிவிட்டது. ரௌடியை இந்தச் சமூகத்தின் அமைப்பில் கீழான நிலையில் பார்க்கின்றனர். ஒருசிலரால் ‘ரௌடியாக’ விமர்சிக்கப்பட்ட எங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி சொல்லித் தொடங்கினேன். பலரது கடுப்பு அப்போதே முகத்தில் தெரிந்தது. அப்போதே முடிவெடுத்துக் கொண்டேன் சரியாகத்தான் பேசுகிறோம் என்று.
மூன்றாவது மேடையில் நிகழ்வின் குறைகளை கூறியது : இந்த மேடை இல்லை. தமிழ் வளர்க்கிறோம் … இலக்கியம் வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அறிவுத்துறைக்கு இடம் கொடுக்காமல் அதிகாரத்துக்குக் கூன் வளையும் எல்லா மேடைகளிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இப்படித்தான் பேசுவேன். மேடைக்கு அழைந்து கொண்டு தன் கருத்தை விழுங்குபவன் வேண்டுமானால் இதற்கு சமரசம் செய்து கொள்ளலாம். உண்மையை எனக்கு விழுங்கத் தெரியாது.
unggal naangu peerin uraiyaik keidkaththaan vanthen. athuvum peiraalaraaga pathivu seiyyaamal. enakkuth theriyum thamiz viza athuvum thamizaasiriyargalaal nadathappadum viza entha ilatchanaththil nadakkumenru. sonnaal manam vethanaippaduvaargal. konjam kalaththil iranggi vaarunggal enraal antharaththil thamiz valarppaargal. vendam vittuvidunggal.