தாரா நாவலைப் படித்து முடித்து விட்டேன். எனக்கு மற்றவர்கள் போல் உங்கள் கதையில் விமர்சனம் செய்ய தெரியவில்லை. நீங்கள் திறமையான எழுத்தாளர் என்று உங்கள் எழுத்தில் மூலம் தெரிந்து கொண்டேன்.
நீங்கள் எழுதிய நாவல்களில் நான் படித்த முதல் நாவல் இதுதான். தாராவில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் என்னை சுற்றி உள்ள நபர்கள் போல தோன்றியது.
அந்தரா மன்னிக்கும் குணத்தில் பூமாதேவி என்று சொல்லலாம். ஒரு சாமானிய வாழ்க்கை வாழும் வாழ்க்கை முறையில் இருந்து உங்கள் கதை ஆரம்பித்தது மிகவும் எனக்கு பிடித்திருந்தது. வாழ்க்கையில் எதார்த்தத்தையும் மிகவும் அழகான புரியும் சொற்களால் எழுதி இருந்தீர்கள்.
Farming is not just a job. It’s a way of life. என்று ஒரு வாசகத்தை நான் எப்பொழுதும் பயன்படுத்துவேன். அது தாரா நூல் படிக்கும் பொழுது நான் உணர்ந்தேன். கிச்சி அழகான ஒரு பெண். தேவதை. குகன் அவனுடைய நண்பர்கள் போன்றவர்களைப் பார்க்கும்போது நம் நாட்டு இளைஞர்கள் எதை நோக்கி செல்கிறார்கள் என்ற கேள்வி எப்பொழுதும் என் மனதில் தோன்றும். சுனில் பாவப்பட்ட ஜென்மம் என்று தோன்றியது. சொந்த நாட்டிலும் வாழ முடியாது அடைக்கலம் தேடி சென்ற நாட்டிலும் வாழ முடியாமல் மனைவியை இழந்து அனைத்து சோகங்களுக்கும் மன அமைதியை தேடிக் கொள்ளும் ஒரு ஆண் அவருடைய இறப்பு மனதிற்கு ரொம்ப வலியை தந்தது இறக்கும்பொழுது கூட நிம்மதி இல்லாம இறந்தார்.
இவ்வளவு அழகான உலகில் சுனில் போன்ற உயிர்கள் வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கவில்லையே என்று தோன்றுகிறது. வெளிநாட்டில் இருந்து வேலை செய்யும் வருபவர்கள் அவர்களைப் பற்றி பேசினால் என் கதை நீண்டு கொண்டே செல்லும். நீண்ட நாள் பிறகு ஒரு கதையில் பயணித்து வாழ்ந்து வந்தது போல் ஒரு உணர்வு.
அந்தரா தெய்வ அம்சம் கொண்ட பெண்ணாக இருந்தாலும் பூலோகத்திற்கு பிறந்தால் கட்டாயமாக கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது.