நாவல் எனும் கலைவடிவம் குறித்து விரிவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்டுவிட்டது. நாவல் என்பது கயிறு திரிப்பதுபோல முறுக்கிச் செல்வதல்ல; அது கூடை முடைவது போன்ற பின்னல் என்ற ஜெயமோகனின் உவமை நாவலின் கலைவடிவம் குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ளும் சித்திரம். இது நாவலின் வடிவம் குறித்த சட்டகமல்ல. நாவலின் சாத்தியம் குறித்தது. எளிமைப்படுத்தியும் குறுக்கியும் வாழ்வின் சிக்கலை நாவலில் காட்டுவதென்பது நாவல் கலை கொடுத்துள்ள சலுகைகளை ஓர் எழுத்தாளன் எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும் நாவலில் இருக்க வேண்டிய உள்இழைகளும் கொண்ட குறுநாவல்கள் மலேசியாவில் நாவல்களாக பல காலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ‘செலாஞ்சார் அம்பாட்’ அதில் ஒன்று.
மலேசிய நாவல்கள்
கலைஞனின் தும்பிக்கை
‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது.
நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு!
டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். “சித்தர் மார்க்கத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த தாங்கள் இப்போது பக்தி மார்க்கத்தைப் பின் பற்றுகிறீர்கள்… ஏன்?” என் கேள்விக்கு டாக்டர் ஜெயபாரதி எளிதான ஒரு பதிலைச் சொன்னார். “சித்தர் மார்க்கம் முடிவற்றது. அறிவின் தளத்தில் இயங்கும் அதில் எல்லைகள் இல்லை. பக்தி மார்க்கம் அப்படி அல்ல. ‘எல்லாம் சிவம்’ எனச்சொல்லி அமர்ந்துவிடலாம். அதுவே அதன் எல்லை.”
‘புயலிலே ஒரு தோணி’யில் மிக முக்கியமான பகுதி அதில் நடக்கும் விவாதங்கள். அதில், ப.சிங்காரம் பின்வருமாறு எழுதியிருப்பார். “கற்பனையின்றேல் வாழ்க்கையில்லை; கொள்கையில்லை; சமுதாயமில்லை. கற்பு என்ற கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை – அதாவது லட்சியக் குடும்ப வாழ்க்கை ஏது? அடிப்படை அறிவின் வழி எது? அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு அறிவுக்கும் வெவ்வேறு உண்மை தென்படும். அவரவர் அறிவின் போக்கில் சென்றால் குழப்பமும் அதன் விளைவாக அழிவுமே கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு – அது அறிவுக்கு வரம்பு.”
Continue reading
சா. ஆ. அன்பானந்தன், அ. ரங்கசாமி மற்றும் மரவள்ளிக்கிழங்கு!
சின்ன வயதிலிருந்தே நான் மலேசியாவில் ஜப்பானியர் ஆட்சி குறித்த சுவாரசியமான சம்பவங்களை என் ஆத்தாவின் பேச்சின் வழிக் கேட்டதுண்டு. ஆத்தா என் அம்மாவின் அம்மா. அவர் நினைவில் ஜப்பானியர்கள் குறித்த சில சம்பவங்கள் மிக அழுத்தமாகப் பதிவாகியிருந்தன. அவர்கள் ‘குரா குரா’ எனும் ஓசையெழப் பேசுவார்கள் என்பது அதில் சுவாரசியமானது. ஆத்தா எப்போதும் ஜப்பானியர்களைக் கொஞ்சம் உயர்த்திதான் பேசுவார். அவரின் அப்பாவுக்கு ஓரளவு ஜப்பான் மொழி தெரிந்ததால் ஜப்பானியர்களிடம் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதன் பலனாக ஜப்பானியர்கள் காலத்தில் எல்லோருக்கும் கிடைத்த சுண்ணாம்பு அரிசி ஆத்தா குடும்பத்துக்கு வழங்கப்படாமல் நல்ல அரிசி கிடைத்திருகிறது. நல்ல அரிசி கிடைத்த நன்றி அவருக்கு இன்றுவரை உண்டு. மற்றபடி சயாம் மரண ரயில் குறித்தெல்லாம் அவர் கேள்விப்பட்டதோடு சரி.
Continue reading