என் அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது

தலைப்பு :  என் அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது.
காலம் :  சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு
இடம்  :  கெடா மாநிலத்தில் உள்ள கம்போங் செட்டி கம்பத்தில்
நோக்கம் :  ஒன்றும் இல்லை

சரியாக மதியம் 2:20-க்கு நீங்கள் ஐஸ்காரரை எங்கள் கம்பத்தில் பார்க்கலாம்.அவரது துல்லியமான வருகை என்னை எப்போதும் அதிசயிக்க வைக்கும்.ஒரு நாளாவது அவர் ஒரு நிமிடம் முந்தியோ அல்லது பிந்தியோ வரும்போது அவரிடம் ஏன் இந்தக் கால மாற்றம் என உரிமையோடு கேட்கலாம் என நினைத்து வைத்திருந்தேன்.அதற்கு எப்போதும் அவர் இடம் கொடுத்ததில்லை.ஓர் ‘ஆமை ஹெல்மட்’ அணிந்து கொண்டு இடது கையில் பிடித்திருக்கும் மணியை ஆட்டியபடி ஒய்யாரமாக எங்கள் கம்பத்தில் இருக்கும் எல்லா வீடுகளையும் 2:21 வருவதற்குள்ளாக கடந்தபடி சென்றுவிடுவார்.இந்தியர்கள் வசிக்கும் கம்பங்களில் எதுவுமே அதிகம் விற்பனையாகாது என்ற நம்பிக்கைக் கொண்ட சராசரி சீனராக இருந்ததால் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதையோ குழந்தை களை அன்பொழுக பார்ப்பதையோ அவர் விரும்புவதில்லை.

Continue reading →

எனக்கு முன் இருந்தவனின் அறை

உடனடியாக அறையை மாற்றவேண்டும் என முடிவெடுத்திருந்த இந்த நாள் இரவில் ஏன் திடீரென விழிப்பு வந்தது என்று தெரியவில்லை. நான் இவ்வளவு நேரம் உறங்கிதான் இருந்தேனா எனக் கூட சந்தேகம் எழுகிறது. உறங்கியதற்கான எந்த அறிகுறியுமற்று மிகுந்த விழிப்பு நிலையில் என் மூளை இயங்கிக் கொண்டிருந்தது. சோர்வின் சுவடு தெரியாமல் நெடுநேரம் உழைத்த சுறுசுறுப்பின் பிரகாசமாய் சுற்றி நடப்பதை மனம் கவனித்துக் கொண்டிருந்தது. முகத்தில் எண்ணைப்பசை… மூக்கு இடுக்குகளில் பிசு பிசுப்பு…. கண்ணோரத்தில் ஊளை…. உதடுகளின் இட வலத்தில் காய்ந்து கெட்டியாயிருக்கும் வெள்ளைத் திரவம் என எதுவுமே அற்ற முதல் விழிப்பாகத் தோன்றியது. இரண்டு பேர் கால் கைகளை `பப்பரபே’ என விருத்துப் படுத்தவுடன் நிரைந்து விடும் இந்த வாடகை அறையில் இது போன்ற உறக்கமற்ற நிலை பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

Continue reading →

வேதாளம் சொன்ன கதை

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கித் தோள்மீது போட் டான். எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கிச் சின்னா பின்னமாகிய வேதாளம் அப்போதுதான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. விக்ரமாதித்தனின் தொல்லை தாங்காமல் வேதாளம் கடுப்பாகிக் கதை கூறத் தொடங்கியது…

விக்ரமாதித்தனே உன் முயற்சியை மெச்சினோம். ஆனா, இப்படித் தூங்கும்போது தொந்தரவு பண்றதுதான் உங்கிட்ட எனக்குப் பிடிக்காத பழக்கம். என்னை மட்டுமல்ல இந்தச் சமுதாயத்தையும் நீ எழுப்ப நினைச்சா, நீ ஐ.எஸ்.ஏ வுல உள்ள போறது திண்ணம். அதனால, யாரையும் எப்பவும் எழுப்ப முயற்சி பண்ணாத. முடிஞ்ச வரைக்கும் தமிழ்,இலக்கியமுன்னு பேசி பணம் சம்பாரிச்சிக்கோ. ஆனா, உம்மவன மட்டும் தமிழ்ப் பள்ளியில போட்டுறாத. ஒரு நல்ல தலைவராக இதுதான் முதல் குணம்.

Continue reading →

வழக்கம்போல…

கட்டணம் பற்றிய கவலையில்லாமல்
இன்றிரவும் நாம் பேசுவோம்

நமது
பிரிவுகுறித்தான காரணங்களை
உன்னை சிதைத்த என் வார்த்தைகளை
என்னை உசுப்பிய உன் செயல்களை
Continue reading →

காமம்

காமம் வெல்வது பற்றி
காதலி
சொல்லிக்கொண்டிருந்தாள்

முதலில் தனது
முகம் மறக்கச் சொன்னாள்
அதில் துளைகள் அதிகம் இருப்பதாகவும்
அவைகளில் அழுக்குகள்
வெளியேறக்கூடுமென்றாள்

Continue reading →

சிதைவின் நகர்வு

ஓர் அன்பு நம்மை நிராகரிக்கும்போதும்
அன்பின் நுழைவாயில் அடைப்படும்போதும்
செய்வதற்கு ஒன்றும் இல்லை.

அன்பை வேண்டி பெறுதல் பிச்சையாகிவிடும்

தளர்ந்தமுகம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தலாம்

சகஜமாக சிரிப்பது அன்பை பரிகசித்ததாகிவிடலாம்
நமது அன்பின்மீது நமக்கே சந்தேகம் ஏற்படலாம்

நிராகரித்து நகரும் அன்பை பின் தொடரவும் இயலாது
அது பாதைகளற்ற பெருவெளியில் பயணிக்கக்கூடும்

Continue reading →

இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை – ம. நவீன்

மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும் ‘முக‌வ‌ரி’ எனும் மாத‌த்திற்கு இரு முறை வெளிவ‌ரும் இத‌ழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த‌ ஆண்டுத் தொட‌க்க‌த்தில் சிலாங்கூர் மாநில‌ அர‌சால் வழங்கப்ப‌ட்ட‌ தமிழ் மொழிக்கான ‘இள‌ம் க‌விஞ‌ர் விருது’ நவீனுக்குக் கிடைத்த‌து. ‘தாமான் மெலாவாத்தி’ த‌மிழ்ப்ப‌ள்ளியில் த‌மிழ் ஆசிரிய‌ராக‌ப் பணிசெய்யும் நவீனுடனான இந் நேர்காணல் மின்னஞ்சலூடாகவும் தொலைபேசி வழியேயும் நிகழ்த்தப்பட்டது.

– ஷோபாசக்தி
18.07.2010 Continue reading →