இன்று மதியம்
சிட்டுக்குருவிகள் சேஷ்டைகளை
ஆழ்ந்து நோக்கிய மாயா
நள்ளிரவில்
தனது ஒற்றை விரலால்
எனதுடலை அழுத்தி
துளை செய்தாள்
இன்று மதியம்
சிட்டுக்குருவிகள் சேஷ்டைகளை
ஆழ்ந்து நோக்கிய மாயா
நள்ளிரவில்
தனது ஒற்றை விரலால்
எனதுடலை அழுத்தி
துளை செய்தாள்
இன்று புதிதாய் நவீன கவிதைகளை வாசிக்க வரும் ஒருவருக்கு நான் முதலில் பரிந்துரைப்பது சுந்தர ராமசாமியின் விமர்சன நூலான ‘ந.பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும்’ தான். அதேபோல மிகக் கவனமாய் தவிர்ப்பது அவரின் கவிதை தொகுதியாகத்தான் இருக்கும். ஒருவேளை சுந்தர ராமசாமியின் கவித்துவத்தை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நான் மக்காக இருக்கிறேனோ என்னவோ.
தொடர்ந்து வாசிக்க… http://ethir.org/?p=1050
தோயோல் அழைத்துச் சென்ற
பிரதேசமெங்கிலும்
தொன்மையான ஆடையணிந்த
எனது
மூதாதையர்களின் மூதாதையர்கள்
நகம் வெட்டிக் கொண்டிருந்தனர்.
எதிர் வலைப்பக்கத்தில் என் நேர்காணல் இடம் பெற்றுள்ளது. சேனனுக்கும் எதிருக்கும் கருத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
http://ethir.org/?p=1039
மிக இயல்பான
ஒரு காலைப்பொழுதில்
சோற்றுப்பருக்கைகளை
கொத்தித்திண்ணும்
மைனாக்களின் கண்களில்
Continue reading

குறிப்பு : மலேசியத் தமிழர்கள் நெடுங்காலமாகவே மிகச் சமத்தாக ஒளித்துவைத்து வளர்த்தெடுக்கும் பார்ப்பனர் ஏற்படுத்திய சாதிய அடையாளங்களின் கறைகளை நெம்பிக்காட்ட பார்ப்பனர் ஏற்படுத்திய சாதிய அடுக்குகளையே கட்டுரையில் சில இடங்களில் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
நமது நாட்டில் அவ்வப்போது தமிழர்களிடம் ஏதாவது பிரச்சனையை ஒட்டி மிகப்பெரிய கொதிப்பலை வேகமாக எழுந்து அதன் அதிர்வு நாடு முழுதும் பற்றிப் படர்வதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த எழுச்சி போராட்டங்கள் பல்வேறு சமயங்களில் சாதகமான விளைவுகளை நமது சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்கப்பட்டது முதல், மிக அண்மையில் எஸ்.பி.எம் பாட விவகாரத்தில் தமிழிலக்கியத்தை நீக்கியதில் ஏற்பட்ட கொந்தளிப்பு வரை சட்டென மலேசியத் தமிழர் போராட்ட வரலாறு ஒரு பட்டியலாக மனதில் உருவாகிறது.
சில திரைப்படங்களை உடனே சென்று பார்த்துவிட சில விடயங்கள் காரணங்களாக இருந்துவிடுகின்றன. நடிகர்கள், திரைக்கதை, அப்போதைய மனோநிலை, நண்பர்களின் தூண்டுதல் என்பன அதில் சில. இவையெல்லாம் இல்லாமல் ஓர் இயக்குனரின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே ‘அங்காடித் தெரு’வுக்குச் சென்றேன்.
2006 ஆம் ஆண்டில் தமிழகம் சென்றிருந்த போது மனுஷ்ய புத்திரனோடு வசந்தபாலனின் ‘வெயில்’ திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். பிரமுகர்களின் சிறப்புக் காட்சி அது. எங்களுக்குப் பின்னால் எழுத்தாளர் திலகவதி அமர்ந்திருந்தார். உடனே அவரின் ‘கல்மரம்’ நாவல் நினைவிற்கு வந்தது. அந்த நாவலுக்கு எப்படி ‘சாகித்திய அகாதமி’ விருது கிடைத்தது எனக் கேட்க நினைத்து திரும்பினேன். பின்னர், அவர் ‘ஐ.பி.எஸ்’ என்பது நினைவுக்கு வந்து வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன். நடிகர் பசுபதியிடம் ஒரு ‘ஹலோ’ சொன்னேன். படம் என்னை மிகவும் நெகிழ வைத்திருந்தது.படம் முடிந்தபின் வசந்தபாலனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினேன். திரும்பிச் செல்லும் போது மனுஷ்ய புத்திரனிடம் படம் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன். “உயிர்மையில் எழுதுங்களேன்”, என்றார். “எழுதவேண்டும்”, என்றதோடு சரி.
முப்பத்தைந்தாவது மது புட்டியைக் காலியாக்கிய களிப்பில் நண்பன் கேட்டான். “பிரபாகரன் இன்னும் இருக்காராடா?” சுற்றியிருந்த நண்பர்கள் என் பதிலுக்கு ஆவலாகக் காத்திருந்தனர். கோலாலம்பூரில் வசிப்பதாலும் இதழ் நடத்துவதாலும் உலகின் அத்தனை மர்மங்களுக்கும் என்னிடம் விடை உண்டு என்பது அவர்கள் கணிப்பு. என் பதிலுக்குக் காத்திருக்காமல் இன்னொரு நண்பன் “அவரு எப்படிடா சாவாறு… திரும்ப வருவாருலா ஜோ. பெரச்சன கொடுப்பாரு. தமுலன்னா சும்மாவா” என குரலை உயர்த்தினான். அழுத்தம் திருத்தமான நண்பனின் பேச்சு நெடுநாளைக்குப் பின் ஒட்டுமொத்தமான வெற்றிக்கூச்சலை நண்பர்களிடமிருந்து கேட்க உதவிசெய்தது. முன்பு கேள்வி எழுப்பிய நண்பன் என்னையே கூர்ந்து பார்த்தபடி இருந்தான். அவனுக்கு என் பதில் தேவைப்பட்டது. “அவர் இருந்தா என்ன… இல்லனா என்ன… உங்களுக்கு இப்ப பிரபாகரனோட தேவை என்ன?” என் பதில் பல நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குக் கெடாவில் குழுமியிருந்த பல நண்பர்களையும் கோபமடைய வைத்தது. அடுத்த நிமிடமே நான் ஒரு தமிழின துரோகியின் மதிப்பீட்டோடு நண்பர்கள் முன் வீற்றிருந்தேன்.