சை.பீர்முகம்மது இன்று (26.9.2023) அதிகாலையில் இறந்துவிட்டார் எனும் செய்தி அவர் மகனிடமிருந்து வந்திருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் பார்த்திருப்பேன். நார்மன் வின்சென்ட் பீலின் ‘நேர்மறைச் சிந்தனைகள்’ எனும் நூல் வாசிக்க வேண்டும் என கேட்டிருந்தார். தனியாக ஓர் அறையில் அமர்ந்திருந்தார். சக்கரை நோயினால் கால் துண்டிக்கப்பட்டதும் அந்த அறையில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ‘அக்கினி வளையங்கள்’ நாவல் வெளியீடு குறித்துப் பேசினார். நான் அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தேன். அந்த வெளியீடு குறித்து அவருக்குச் சில திட்டங்கள் இருந்தன. நான் எவ்வகையிலும் இணைந்து செயல்பட முடியாத திட்டங்கள் அவை.
Continue readingசை.பீர்முகம்மது
சை.பீர்முகம்மது நாவல்கள்
மலேசியாவில் மு.வரதராசனின் நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம்போலவே ஜெயகாந்தனின் நாவல்களும் பரந்த வாசகர் பரப்பை அடைந்த காலம் ஒன்றுண்டு. இவ்விரு எழுத்தாளர்களுடைய படைப்பின் தளமும் தரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் சூழலில் வாசகர்களை இவர்கள் ஒருங்கே பாதித்தது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்.
Continue readingகலைஞனின் தும்பிக்கை
‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது.
சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை
ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை உருவாக்கி மெல்லதிர்ச்சியைக் கொடுக்கும் சிறுகதைகளைப் புனைந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் வானம்பாடி கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர். அவர்கள் போல கவிதைகள் புனைந்தவர். அவர் கதைகளில் மையமாக ஒரு படிமத்தை உருவாக்கி, அந்தப் படிமத்தை வந்தடையும் ஒரு திருப்பம் நிகழும் சம்பவத்தைக் கதையின் முடிவாக்கும் உக்தியை அதிகம் கையாண்டார். அது பரப்பிலக்கிய பாணி. அது இயல்பாக அன்றைய வாசகர்களை ஈர்த்தது. எழுபதுகளில் மலேசியாவில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளரும் அவரே. இவர்களைப் போல சை.பீர்முகம்மதுவும் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டு புனைவிலக்கியத்தில் ஈடுபட்டவர்தான்.
மகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும்
சுனில் கிருஷ்ணன் பருந்துப் பார்வை என்ற தற்காப்புக் கவசத்துடன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். (மகரந்த வெளி) மலேசிய / சிங்கப்பூர் பகுதிகளில் விடுபட்டுப்போனது போலவே இலங்கையின் பகுதியும் பாதியில் தொங்குகிறது.
இலங்கை மலையகப் படைப்புகளில் மாத்தளை சோமுவின் படைப்புகள் ஆய்வில் தவிர்க்க முடியாதவை. ஒரு தோட்டத்து நாதஸ்வரம், சொந்த நாட்டு அகதிகள், கருவறை மற்றும் அவரது சிறுகதைகளை விட்டுவிட்டு இந்தக் கட்டுரை நகர்ந்துள்ளது. அதேபோல எஸ்.பொவை தவிர்த்து நீங்கள் இலங்கை இலக்கியத்தைச் சொல்ல முடியாது. எஸ்.பொவின் கடைசியாக வெளிவந்த யாழினி நாவல் தற்கால அரசியலை முன்வைத்துப் பேசுகிறது. எவ்வகை இலக்கிய விவாதத்திலும் எஸ்.பொன்னுத்துரையின் சிறுகதை, நாவல்களின் வீச்சைத் தவிர்க்கவே முடியாது.