Author: ம.நவீன்

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர்…

நாரின் மணம் 3: களவெனும் கலை

திருடர்கள் என்றலே எனக்கு மிகவும் பயம். அப்போதெல்லாம் எண்ணெய் மனிதன் (Orang Minyak) குறித்தப் பேச்சு எங்கள் ஊரில் அதிகம் இருந்தது. கம்பத்தில் வசித்தபோது நள்ளிரவுகளைத் தாண்டியும் பேய் பயமெல்லாம் இல்லாமல் சுற்றியுள்ளேன். கம்பத்து வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பகலில்கூட திருடர்கள் பயம் கௌவிக்கொள்ளும். குறிப்பாக எண்ணெய் மனிதன் என் பொழுதுகளை அச்சமடைய வைத்தான். எங்கள் வீடு…

நாரின் மணம் 2 : தோலிருக்க சொளா முழுங்கி

மாமிசத்துண்டுடன் ஆற்றைக் கடந்த நாய், நீரில் நிழலைப்பார்த்துக் குரைத்து மாமிசத்துண்டை இழந்ததோ, சின்னஞ்சிறிய சுண்டெலி சிங்கத்திடம் குறும்பு செய்து மாட்டிக்கொண்டு,  உயிர்ப்பிச்சைக் கேட்டு தப்பிச்சென்றப்பின் சிங்கத்தை வலையிலிருந்து தப்பிக்க வேறொரு சந்தர்ப்பத்தில் உதவியதோ, நண்பர்களாக இருந்த தவளையும் சுண்டெலியும்  குளத்துக்காகச் சண்டையிட்டு இறந்ததால் பருந்துக்கு இறையானதோ கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஈசாப் எழுதிய கதைகள் மூலம்…

ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை மற்றும் சில நினைவுகள்

26.5.2017 – வெள்ளி முதலில்  நாஞ்சில் நாடன்தான் வந்திறங்கினார். அவருக்குக் கொச்சினிலிருந்து விமானம். ஜெயமோகனுக்குத் திருச்சிலிருந்து. அருண்மொழி அவர்கள் கடைசி நேரத்தில் வரமுடியாத சூழல். கண்களில் கிருமித்தொற்று.  நிச்சயம் மலேசிய விமான நிலையத்தில் தடுக்கப்பட்டுவிடுவார். ஜெயமோகன் வந்து சேரும் இடைவெளியில் நாஞ்சில் நாடனுக்கு ‘மீ கறி’ வாங்கிக்கொடுத்தேன். எனக்குப் பிடித்த சீன உணவு. அசலான சுவையில்…

நாரின் மணம் 1: காக்க காக்க கதிர்வேல் காக்க

ஏதோ ஒரு காரணத்தினால் என்னை பாலர் பள்ளியில் இணைக்கவில்லை.  வறுமை ஒரு காரணமாக இருக்கலாம். சித்திதான் (அம்மாவின் தங்கை) எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். இரவானால் அம்மா சாமி அறையில் என்னையும் அக்காவையும் அமரவைத்து தேவாரம், திருவாசகம் பாடுவார். ஏழு வயதிலெல்லாம் கந்தர் சஷ்டி கவசமும் சிவபுராணமும் எனக்கு நன்கு மனனம். கந்தர் சஷ்டி கவசம் என்னை…

மன்னர் மன்னனுக்கு ஒரு திறந்த மடல்.

மதிப்பிற்குறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு. தங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. தாங்கள் பல ஆசிரியர்களை உருவாக்கிய ஆசிரியர். அவ்வகையில் உங்களைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லனவற்றையே கூறியுள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த துறை மீதும் அதில் தாங்கள் காட்டிய நாட்டம் மீதும் எனக்கு மதிப்புண்டு. நீங்கள் ஒரு நல்லாசிரியர். அதேபோல தாங்கள் மலேசியத்தமிழ்…

காசி கவிதைகள்

அந்த இரவு இந்த இரவில் அவ்வளவு கறுமையில்லை எங்கிருந்தோ ஒரு மணியின் ஓசை கண்கள்வழி புகுந்து வெளிச்சம் கொடுக்கத்தொடங்கியது தோல்களை உரசிய காற்று இரவைக் கிழித்து காட்சிகளைப் படிமங்களாக்கியது இப்போதுதான் எரியத்தொடங்கிய பிணத்தின் சாம்பல்வாடை இரவுக்குள் கண்களை ஊர்ந்துசெல்ல வைக்கிறது நான் கங்கையைப் பருகியபோது கறுமை தனது ஆடைகளைக் களைந்து இந்த இரவை அத்தனை கருமை…

சிங்கப்பூர் வாசகர் வட்ட விழா : ஓர் அனுபவம்

எம்.கே.குமார் தனது ‘5.12 PM’ சிறுகதை நூலுக்கு முன்னுரை கேட்டிருந்தார். அப்படியே அவசியம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து பேச வேண்டும் என்றார். நான் முதலில் நூல் குறித்து எழுதிவிடுகிறேன்; பின்னர் வருவது குறித்து பேசுவோம் என்றேன். என்னால் சடங்கான முன்னுரை எழுத முடியாது என்பதை அறிவேன். மலேசியாவில் எனக்கு…

அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்

ரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை…

கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்

பத்து வருடங்களுக்கும் மேலாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கி கொண்டிருக்கிறேன் என்றுதான் பெயர். இதுவரை என்னிடம் யாரும் நூலுக்கான முன்னுரையையோ நூல் குறித்தப் பார்வையையோ அச்சாகும் முன் நூலில் பிரசுரிக்கக் கேட்டதே இல்லை. எனக்கு 24 வயது இருக்கும். நண்பர் அகிலன் அவரது ‘மீட்பு’ கவிதை தொகுப்பு வெளியீட்டில் என்னை விமர்சனம் செய்யக் கூறினர். அத்தொகுப்பில்…

நவீன் மனோகரன் கவிதைகள்

சராசரிகள்   காதலின் இறுதி விந்தும் தீர்ந்தபின் நாம் சராசரி விசயங்களைப் பேசத்தொடங்கினோம்   சராசரி திரைப்படங்கள் பற்றி சராசரி உணவுகள் பற்றி சராசரி நூல்கள் பற்றி சராசரி திட்டங்கள் பற்றி சராசரி பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றி சராசரி பாடல்கள் பற்றி சராசரி வாழ்க்கை பற்றி   காதல் தீர்ந்த இடத்தில் நாம் சராசரிகளை…

மசாஜ்

மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக…

கலை இலக்கிய விழா 8 : தேங்காத தொடர் பயணம்

சிங்கையிலிருந்து இராம கண்ணபிரான் மற்றும் முனைவர் ஶ்ரீலட்சுமி ஆகியோர் அதிகாலை 5மணிக்கு மலேசியாவில் வந்து இறங்கியவுடன் கலை இலக்கிய விழா தொடங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. உற்சாகமாக இருவரும் காத்திருந்தனர். தங்கும் விடுதியில் அவர்களை இறக்கிவிட்டபின் தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் 11 மணிக்கு இராம கண்ணபிரான் அவர்களை ஆவணப்படத்துக்காக ஒளிப்பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஏற்கனவே கேள்விகள்…

மண்ட்டோ : இருளை வரைந்த ஓவியன்

மண்ட்டோவை நான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மூலமே அறிந்தேன். ‘பாகிஸ்தான் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் அவரது ‘திற’ எனும் சிறுகதை இடம்பெற்றிருந்தது. ஆதவன் தீட்சண்யா நல்ல கதைசொல்லி. அத்தொகுப்பில் முதல் சிறுகதையான ‘திற’ சிறுகதையை ஒரு கார் பயணத்தில் அவர் கூறியபோது முதலில் ஓர் மெல்லிய அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுவாக இதுபோன்ற அதிர்ச்சி தரக்கூடிய சிறுகதைகளை…

ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்

வாசிக்கும் முன்பு:  இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த…