Author: அ.பாண்டியன்

முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை

இலக்கிய படைப்புகள் இருவழி தொடர்புள்ளவை. எழுத்தாளனின் உள்ளத்தில் இருந்து விரியும் கற்பனையும் அனுபவமும் வாசகனுக்கு மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாகிறது. இலக்கிய பிரதியின் வழியே படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அந்தரங்க உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் வழி வாசகன், எழுத்தாளன் காட்டும் அனுபங்களை மென்மேலும் விரித்துக் கொள்ள முடிகிறது. படைப்பிலிருந்து பெரும் அனுபவங்களும் திறப்புகளும் வாசகனின் வாழ்க்கை…

திசையெல்லாம் நெருஞ்சி: உண்மைகளை பிரித்தறியும் கலைத்திறன்.

புனைவுக் கலையின் உடல் கற்பனையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் அதன் உயிர், வாழ்க்கையின் உண்மைகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. சிங்கப்பூரில் தொடக்க காலத்தில் வெளிவந்த சிறுகதை தொகுப்புக்கு கட்டுக்கதைகள் என்றே தலைப்பிட்டுள்ளனர். ஆகவே புனைவுகள் படைப்பாளனின் கற்பனை எல்லைக்கு ஏற்ப விரிந்தும் ஆழ்ந்தும் சென்றாலும் அதன் உள்ளீடாக சுய அனுபவங்களும் வாழ்வியல் உண்மைகளுமே நிரப்பப்பட்டிருக்கும். உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில்…

எங்கெங்கு காணினும் எண்களடா: ‘கணிதத்தின் கதை’ நூல் நோட்டம்

கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கிடங்கில் நுழைந்ததும் எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட நூல்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். வாசகர்களின் தேடலுக்கு வசதியாக எழுத்தாளர்கள் அடிப்படையிலும் இலக்கிய வகைகள் அடிப்படையிலும் நூல்கள் அடுக்கப்பட்டு இருந்தன. பிரபலமான நூல்களில் இருந்து சற்று விலகி மேல் மாடிக்குச் செல்லும் வழியில் மாணவர் பள்ளி நூல்கள் இருந்தன. இலங்கை தமிழ்ப்பள்ளிகளில்…

கவிஞர் கருணாகரனுடன் ஒரு நாள்

இலங்கை பயணத்தின் மூன்றாம் நாள் திரிகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் கவிஞர் கருணாகரனைச் சந்திப்பதாக நவீன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வழியில் பல வரலாற்றுத் தடங்களையும் பார்த்துக் கொண்டு சென்றதால் நேரம் போதவில்லை. முல்லைத்தீவு இறுதிப்போரின் சிதிலங்களும், அவற்றுக்கு எங்கள் பயணத்தில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்ட ஓட்டுனர் நண்பர் திலிப் கூறிய விளக்கங்களும் மனதை…

எஸ். பி. பாமா: கலையமைதியை விழுங்கிய தீவிரம்

மலேசிய பெண் எழுத்தாளர்களில் 80களில் எழுதவந்த எழுத்தாளர் எஸ்.பி. பாமா. பின்னர் வானொலி தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002-ஆண்டு முதல் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எழுதத் துவங்கினார். நாளிதழ் ஞாயிறு பதிப்புகளில் வெளிவந்த (2002க்கு பிறகு என்று நினைக்கிறேன்) பதிமூன்று சிறுகதைகளைத் தொகுத்து ‘அது அவளுக்குப் பிடிக்கல’ என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார்…

கா.பாக்கியம் முத்து: புனித பிம்பங்களின் முன் மண்டியிடும் பெண்ணியம்

வடக்கில் இருந்து மிகத் தீவிரமாக எழுதியதோடல்லாமல் இலக்கிய இயக்கங்களிலும் அதிக கவனம் செலுத்தியவர் க.பாக்கியம் முத்து. பெண்ணியக் கருத்துக்களை கதைகளில் மட்டும் முன்வைக்காமல் கலந்துரையாடல்களிலும் பேச்சுகளிலும் துணிச்சலாக முன்வைத்து அவ்வப்போது பல தரப்பு விமர்சனங்களை எதிர்கொண்டவர் இவர். தன் படைப்புகள் பற்றி இவர் “என்னுடைய கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தே எழுதப்பட்டது. பெண்களின் அவலநிலை என்…

காவிக் கொடியும் கவிதை வரிகளும்

நான் முதன் முதலாக கோலாலம்பூருக்குப் பயணம் செய்தது ஒரு வரலாறு போல் இன்றைக்கும் நினைவுகூறத்தக்கதாக உள்ளது. என் முதல் கோலாலம்பூர் பயணமானது ஏதோ ஒருவகையில் மலேசிய அரசியல் போக்குடனும் சமூக சிந்தனை மாற்றத்துடனும் தொடர்புடையதாக இருப்பது எதிர்பாராதது. நானும் என் அண்ணனும் அடிப்படையில் திராவிடச் சிந்தனை தாக்கத்தால் வளர்ந்தவர்கள். எங்கள் அப்பா தீவிர பெரியார் பற்றாளராகவும்…

புனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்

ந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டிருந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள  12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு …

நழுவிக் கொண்டே இருக்கும் ந.மகேஸ்வரியின் கதைகள்

மலேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ந்த அதே தடத்தில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியும் அமைந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. மேற்கண்ட இலக்கிய ஈடுபாடும் வளர்ச்சியும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மேலும் வளர்ந்தது. 1960கள் மலேசிய நவீன இலக்கியத்தில் நல்ல வளர்ச்சி படிகளைப் பதிவு செய்துள்ளது. பொதுவாகவே இன்று நாட்டில் சிறந்த முன்னோடி இலக்கியவாதிகளாக அறியப்படுவோர்…

வடக்கு நோக்கி பறந்ததொரு மாயப்பறவை

வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்ததும் வழக்கம் போலவே நான் பரபரப்பானேன். எல்லாம் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டுமே என்கிற பரபரப்புதான். இந்த முறை எழுத்தாளர் கோணங்கியையும் உடன் அழைத்துச் செல்வதால் படபடப்பு அதிகம் இருந்தது. இரண்டு நாட்கள் வடக்கு மாநிலங்களை அவருக்குச் சுற்றிக் காட்ட திட்டமிட்டிருந்தோம். ஆகவே நிகழ்ச்சி முடிந்ததும் கோணங்கியிடம் என்னை…

அறிவியல் கூடத்தில் சடங்கு எலிகள்

வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி விட்டது. மாதத் தவணையில் பணம் கட்டி வாங்கிய பொருள் என்பதால் தூக்கிப் போட மனம் வராமல் அதை பழுது பார்த்து பயன்படுத்த முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். நண்பர் ஒரு தொலைப்பேசி எண்ணைக் கொடுத்து தொடர்புகொண்டு கேட்கச் சொன்னார். பிறகு பேச்சின் ஊடே, குடிநீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து…

எதைக் காவு கொடுப்பேன்

இலக்கியம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் மலேசிய நவீன இலக்கியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தீவிரத்தன்மையை அடையாமல் இருப்பது எதனால் என்கிற கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இக்கேள்வி அணுகப்படுவது வழக்கம். வாசகர் இல்லாமை, பொருளாதாரம், கல்வித் தகுதி, அரசியல் கெடுபிடிகள், வெகுஜன இலக்கியங்களின் ஆதிக்கம், போலி இலக்கியவாதிகளின் அபத்தங்கள், அரசாங்க இன…

விருந்தினர் இலக்கியம்

மலேசியாவில் இலக்கியம் என்று சுட்டப்படுவது மரபு இலக்கியம், பக்தி இலக்கியம், கண்ணதாசன், வைரமுத்து, வாலி வரிசையில் பாடலாசிரியர்களை மையமாக கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள், நன்னெறி இலக்கியங்கள், நவீன இலக்கியம் போன்ற எல்லா தரப்பு இலக்கிய முயற்சிகளையும் சேர்த்ததுதான். வெகுஜன இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற அகவய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுபுறவயமாக இவை அனைத்துமே இலக்கியம் என்ற…

இன அரசியலும் மன முடக்கமும்

நேற்று என் அம்மாவை அரசாங்க மருத்துவமனைக்குக் கண் சிகிச்சை பெற அழைத்துச் சென்றேன். இது இரண்டாவது முறை மருத்துவச் சந்திப்பு. கூட்டம் முந்தியடித்துக் கொண்டு நின்றது. காலை 8-மணி சந்திப்புக்கு 6.30-மணியில் இருந்து மக்கள் வந்து காத்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். பெரும்பான்மை மருத்துவமனைகளில், அதிலும் அரசாங்க மருத்துவமனைகளில் இச்சூழல் இயல்புதான் என்பதால் அமைதியாக, தாதிகளின் அழைப்புக்குக் காத்திருந்தோம்.…

கோ.புண்ணியவானின் சிறுகதைகள் : எதார்த்தத்தின் முகம்

மலேசிய நவீனத் தமிழ் கலை இலக்கியப் படைப்புலகம் கவிதை சிறுகதை நாவல், நாடகம், கட்டுரைகள் போன்ற பல்வேறு வடிவங்களால் நிறைந்தது.  ஆயினும் சிறுகதை வடிவமே  இங்கே அழுத்தமான இலக்கிய நகர்ச்சியைக் காட்டுகிறது என்று துணிந்து கூறலாம். புதுக்கவிதை பலருக்கும் இலக்கியத் தூண்டல்களை உருவாக்கித் தந்தாலும் அது சிறுபிள்ளை விளையாட்டுப்போல் மெத்தனமாகப் படைக்கப்படுவதாலும் பலகீனமான சொல்லாட்சி, கருத்து…