Author: அ.பாண்டியன்

‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை.

tie

என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின் டியூசன் ஆசிரியர். ‘வாவாசான் இன்டெலெக்’ டியூசன் சென்டரை நிர்வகிக்கிறார். இரண்டாவது கணேசன் என் பழைய தோழன். ஆரம்ப பள்ளியில் இருந்து பழக்கமானவன். மூன்றாவது கணேசன் யாரென்று தெரியவில்லை.…

மாற்றத்தை நோக்கியதே இலக்கியம்

மூலம் S.M. ஷாகீர்   மொழியாக்கம்: அ.பாண்டியன் கட்டுரையாளரைப் பற்றி: S.M. ஷாகீர்- இயற்பெயர்  ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான். 4.2.1969 கோத்தா பாருவில் பிறந்தவர். 1990 முதல் எழுதி வருகிறார். இதுவரை 22 இலக்கிய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது ‘மெரெங்குஹ் லாங்கீட்’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு (1994/1995) பெர்டான இலக்கிய…

மலேசிய சீன இலக்கியம்: எளிய அறிமுகம். – லீ சூ சீ

சீன இலக்கியம் படம் 01

(சீனக் குடியேறிகள் முதல் மலேசிய சீனர்கள் வரையிலானவர்களின் படைப்புகள்.) முதலாவதாக, ‘சீனர் மலேசிய இலக்கியம்’ (Chinese Malaysian Literature) என்னும் சொல்லாடலே, தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள ‘மலேசிய சீன இலக்கியம்’(Malaysian Chinese Literature) என்னும் சொல்லைவிட மிக பொருத்தமானது என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம் சீன மலேசியர்களால் படைக்கப்படும் இலக்கியம் கருத்தாக்கங்களாலும், அடிப்படைக்…

ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் : காலம் கடந்து கண்டெடுக்கப்பட்ட வைரம்.

அ.பாண்டியன்

தமிழ் நாவல்களை தீவிரமாக தேடிப் படிக்கும் வசகர்கள் முதல் விமர்சகர்கள் வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பது பா. சிங்காரத்தின் கடலுக்கு அப்பாலும் புயலிலே ஒரு தோணியும் ஆகும். பா. சிங்காரம் இவ்விரண்டு படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கிய உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இவ்விரண்டு நாவல்களின் தோற்றமும் அவை…

கே.பாலமுருகன் கவிதைகள்: நசுக்கப்பட்டவர்களின் அழகியல்.

07

நாவல், சிறுகதை, கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகளை விமர்சிக்கும் அதே பாணியில் கவிதையையும் அணுக முடியும் என்பது எனக்கு சரியாக படவில்லை. காரணம் சிறந்த கவிதைகள் யாவுமே பன்முகத்தன்மை கொண்டனவாகவே உள்ளன. இதன் காரணமாகவே நமது பண்டை கவிதைகளும் கால மாற்றத்திற்கு ஏற்ப புதுப்புது விளக்கங்களை தந்த வண்ணம் உள்ளன. தமிழ் இலக்கிய மரபிலும் கவிதைகளுக்கு…

கே.பாலமுருகனின் ‘தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ கவிதை நூலை முன்வைத்து…

bala cover

இலக்கியம் என்பது பிற கலை வடிவங்களைப் போன்றே படைப்பாளியின் உள கொந்தளிப்பையும் அழகியல் ஈர்ப்பையும் சாரமாக கொண்ட வெளிப்பாடாகும். ஓவியம் சிற்பம் போன்ற கலைகளுக்கு நிறமும் வடிவமும் ஊடகமாக இருப்பது போல் இலக்கியத்தின் ஊடகம் மொழியே. அவ்வகையில் ஒரு மொழியின் உச்சபச்ச திறனையும் மேன்மையையும் கொண்டு செயல்படுவது கவிதைத் துறையே. கவிதையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும்…

தமிழ் தேசியம். ஏன்? எப்படி?

essay - a.pandian

உலக தமிழர் அரசியலோடும் பண்பாட்டு அசைவுகளோடும் அணுக்கமான தொடர்பு கொண்டிருக்கும் பலரின் சமகால சிந்தனை, தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து விவாதித்து வருவதை அறியமுடிகிறது. இன்றைய நிலையில் தமிழ் தேசியம், தமிழ் ஆர்வளர்கள் என்று தங்களை முன்னிருத்தும் பலரின் பாடுபொருளாக இருப்பது கண்கூடு. தீவிர ஆதரவுக்கும் பலத்த எதிர்ப்புக்கும் நடுவில் சிக்கி மக்களின் கவனத்தை…

‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ : தீர்ப்பு உங்கள் கையில்

கடந்த சில வாரங்களை மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில் அபூர்வமானது. வாசித்தோம் வாயை…

மாற்றத்தை நோக்கியதே இலக்கியம்

change

மூலம் S.M. ஷாகீர் | மொழியாக்கம்: அ.பாண்டியன் கட்டுரையாளரைப் பற்றி: S.M. ஷாகீர் – இயற்பெயர் ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான் (Syed Mohd Zakir Syed Othman). 4.2.1969 கோத்தா பாருவில் பிறந்தவர். 1990 முதல் எழுதி வருகிறார். இதுவரை 22 இலக்கிய தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவரது ‘மெரெங்குஹ் லாங்கீட்’ என்னும்…

குவர்னிகா: மலேசியாவின் மூன்று சிறுகதைகள் ஒரு பார்வை!

அறிவிப்பு 02 படம்

உலகில் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மொத்த குரலையும் ஒலிக்கச்செய்யும் இலக்கிய முயற்சி குவர்னிக்கா இலக்கியச் சந்திப்பின் வழி நீண்ட காலமாக செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தாண்டி இந்த இலக்கிய முயற்சி    41-வது முறையாக மீண்டும் யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு தன் சந்திப்பு தொடரை நிகழ்த்தியது. அச்சந்திப்பில் வெளியீடு கண்ட குவர்னிக்கா இலக்கிய…

கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ (சிறுகதைத் தொகுப்பு)

bala.book.cover

இந்நாட்டின் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் பரவலான கவனத்திற்குட்பட்ட படைப்பாளி கே. பாலமுருகன். கெடா மாநிலத்தைச் சேர்ந்த இவர் படைப்புகள் பல, உலக தமிழ் வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. உள்நாட்டில் பல இலக்கிய போட்டிகளில் அவரது படைப்புகள் வாகை சூடியுள்ளன. அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது…

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திடீர் முடிவு – ஒரு தனி நபர் தாக்குதல்

malaysia.tamil.writers.association

தினக்குரல் நாளிதழில் (15.8.2013) மலேசிய எழுத்தாளர் சங்க சார்பாக அதன் செயலாளர் திரு. குணநாதன் வெளியிட்டிருக்கும் அறிக்கையை கண்ணுற்றேன். பலரும் அச்செய்தியை வாசித்து வருத்தமுற்றிருக்கலாம். தனிப்பட்ட முறையில் தயாஜிமேல் ஆத்திரமும் பட்டிருக்கலாம். இச்செய்தி பற்றி எனது கருத்தைக் கூறுவதற்கு முன் அதன் சாராம்சத்தை விளங்கிக் கொள்ளுதல் நலம். 1. எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் காலாண்டு…

பெண்ணிய இலக்கியமும் வரம்புகளும்.

01

கடந்த வாரம் தலைநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் தமிழ்நாட்டில் பெண்ணிய இலக்கியம் வரம்பு மீறி செல்வதாகவும் நம் நாட்டில் அந்த நிலை இல்லை என்றும் பேசியதாக தகவல் அறிந்தேன். அந்த உரையை முழுமையாக கேட்காததால் அது பற்றிய கருத்துகளை சொல்வது இயலாது. ஆனால் மேற்கண்ட செய்தியில் ‘பெண்ணிய இலக்கியம்’ ,…

எழுத்தாளர்களுக்கு ஒரு சவால்!

அ.பாண்டியன் படம்

மலேசிய மலாய் இலக்கிய வெளி மலாய் எழுத்தாளர்களால் மட்டுமே நிரப்பப்பட்டதல்ல. மலாய்க்காரர் அல்லாத பல எழுத்தாளர்களும் மலாய் மொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் கவனிக்கத்தக்க படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். மலேசிய வாழ் இந்தியர்களும் மலாய் இலக்கிய ஈடுபாடு கொண்டு செயல் பட்டு வருகின்றனர். ஜோசப் செல்வம், என்.எஸ். மணியம், ஆ.நாகப்பன்,…

ஏமாளிகளின் தேசம்

அ.பாண்டியன்

13-வது பொதுத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்து விட்டாலும் அதன் தாக்கம் இன்னும் மலேசியர்களை முழுமையாக விட்டு அகலவில்லை. பல்வேறு வகையில் அரசியல் விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மலேசிய ஜனநாயக ஆட்சி முறையை சீரமைத்து வெளிப்படையானதா மாற்ற வேண்டும் என்னும் இளையோர் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. மலேசிய அரசியலில் மறுமலர்ச்சி என்பது மிகவும்…