
30. 09. 1953 தமிழ் முரசு நாளிதழில், ‘இலக்கிய மேதை யார்?’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வீ.க. சபாபதி ஒரு கட்டுரை எழுதினார். ‘விபரீத ஆசை’ என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையை வாசித்த அவருக்கு இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உந்தியிருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்து மலாயாவிலும் சிங்கப்பூரிலும் அப்போதெல்லாம் அரிதாகவே வாசிக்கக் கிடைத்திருந்தாலும், கதையில் வீ.க. சபாபதி…














