Author: ம.நவீன்

கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்

பத்து வருடங்களுக்கும் மேலாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கி கொண்டிருக்கிறேன் என்றுதான் பெயர். இதுவரை என்னிடம் யாரும் நூலுக்கான முன்னுரையையோ நூல் குறித்தப் பார்வையையோ அச்சாகும் முன் நூலில் பிரசுரிக்கக் கேட்டதே இல்லை. எனக்கு 24 வயது இருக்கும். நண்பர் அகிலன் அவரது ‘மீட்பு’ கவிதை தொகுப்பு வெளியீட்டில் என்னை விமர்சனம் செய்யக் கூறினர். அத்தொகுப்பில்…

நவீன் மனோகரன் கவிதைகள்

சராசரிகள்   காதலின் இறுதி விந்தும் தீர்ந்தபின் நாம் சராசரி விசயங்களைப் பேசத்தொடங்கினோம்   சராசரி திரைப்படங்கள் பற்றி சராசரி உணவுகள் பற்றி சராசரி நூல்கள் பற்றி சராசரி திட்டங்கள் பற்றி சராசரி பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றி சராசரி பாடல்கள் பற்றி சராசரி வாழ்க்கை பற்றி   காதல் தீர்ந்த இடத்தில் நாம் சராசரிகளை…

மசாஜ்

மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக…

கலை இலக்கிய விழா 8 : தேங்காத தொடர் பயணம்

சிங்கையிலிருந்து இராம கண்ணபிரான் மற்றும் முனைவர் ஶ்ரீலட்சுமி ஆகியோர் அதிகாலை 5மணிக்கு மலேசியாவில் வந்து இறங்கியவுடன் கலை இலக்கிய விழா தொடங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. உற்சாகமாக இருவரும் காத்திருந்தனர். தங்கும் விடுதியில் அவர்களை இறக்கிவிட்டபின் தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் 11 மணிக்கு இராம கண்ணபிரான் அவர்களை ஆவணப்படத்துக்காக ஒளிப்பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஏற்கனவே கேள்விகள்…

மண்ட்டோ : இருளை வரைந்த ஓவியன்

மண்ட்டோவை நான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மூலமே அறிந்தேன். ‘பாகிஸ்தான் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் அவரது ‘திற’ எனும் சிறுகதை இடம்பெற்றிருந்தது. ஆதவன் தீட்சண்யா நல்ல கதைசொல்லி. அத்தொகுப்பில் முதல் சிறுகதையான ‘திற’ சிறுகதையை ஒரு கார் பயணத்தில் அவர் கூறியபோது முதலில் ஓர் மெல்லிய அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுவாக இதுபோன்ற அதிர்ச்சி தரக்கூடிய சிறுகதைகளை…

ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்

வாசிக்கும் முன்பு:  இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த…

வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்!

கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி…

கலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை

நேற்றுப்போல்  இருக்கிறது கலை இலக்கிய விழா கொண்டாடத்தொடங்கி. இது கொண்டாட்டமா என்றால்… ஆம்! கொண்டாட்டம்தான். 2009ல் நான் ‘கலை இலக்கிய நிகழ்ச்சி’ எனப் பெயரிட்டபோது மா.சண்முகசிவா சொன்னார், “இது நிகழ்ச்சி இல்லை. விழா. நாம் கொண்டாடப்போகிறோம்…” எனக்கு அப்போது ‘கொண்டாட்டம்’ என்ற சொல் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு தீவிர படைப்பாளிக்குள் எப்படிக் கொண்டாட்ட மனநிலை…

கொங்கு தமிழர் மாநாடும் கொசுத்தொல்லையும்!

அண்மையில் ஒரு வீடியோ, முகநூலில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஜூலை 22 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘கொங்கு தமிழர் மாநாட்டில்’ கலந்துகொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனது சாதியப் பெருமையை அதில் பகிர்ந்துகொள்கிறார். தாங்கள் பிடிவாதமாக கொங்கு கவுண்டர் சாதியைக் கடைபிடிப்பதாகவும் தங்கள் குழந்தைகளை சாதிய உணர்வுடன் வளர்ப்பதாகவும் அவர் பகிரங்கமாகக்…

ஜூல்ஸுடன் ஒரு நாள் : தப்பிக்க முடியாத உண்மை

ஒரு சின்னஞ்சிறிய நாவல் மிக நீண்டநாள் வாழ்ந்துமுடித்துவிட்ட அயற்சியைக் கொடுக்கமுடிவது குறித்து இப்போதுவரை ஆச்சரியமாக இருக்கிறது.  ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்றுக்கு மரணம் நிகழ்வதை எளிதாகக் கடக்க முடிகிறது. மனித அழிவுகளும் வதைகளும் நாவலில் இடம்பெறுவதைக்கூட வரலாற்றின் ஒரு பக்கமென கசப்புகளைச் சுமந்து செல்ல முடிகிறது. ஒரே ஒரு மரணத்தை நாவல் முழுவதும் நிறைப்பதென்பது…

கச்சடா பேச்சு!

கெட்ட வார்த்தையை எங்கள் ஊரில் கச்சடா பேச்சு என்றுதான் கூறுவர். நான் அனேகமாக 10 வயதுவரை கச்சடா பேச்சை அறிந்திருக்கவில்லை.  தோட்டங்களில் வாழ்ந்த என் நண்பர்கள் அதுபோன்ற வார்த்தைகளை அடையாளம் காண்பதிலும் அதைப் பிரயோகிப்பவர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் கில்லாடிகளாக இருந்தனர். தோட்டங்களில் கச்சடாவாகப் பேசுவது சகஜமானது. சண்டையென வந்துவிட்டால் கச்சடா வார்த்தைகள் ஒன்றாகச் சேர்ந்து எதிராளி வீட்டுத்…

நவீன் மனோகரன் கவிதைகள்

                கவிதை என்பது… கவிதை என்பது தற்கொலைக்கு முன்பான ஓர் அந்தரங்கக் கடிதம் கவிதை என்பது யாருக்கும் புரியாத கண்ணியமான கண்ணீர் கவிதை என்பது தோல்விகளை மூடிமறைக்கும் தற்காலிக மேகமூட்டம் கவிதை என்பது ரத்தம் வடியாதிருக்க தோலில் இட்டுக்கொள்ளும் ரணமான தையல் கவிதை என்பது மௌனம்…

இலக்கிய வட்டம் : ஒரு பார்வை

பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து,…

அபோதத்தின் ருசி

பத்திரிகைகளில் என் படைப்புகளை இடம்பெறவைக்கக் கொண்டிருந்த தீவிரம் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுண்டு. இன்றுபோல அத்தனை இலகுவான சூழல் அப்போது இல்லை. அப்போது என்பது 97-98 ஐக்கூறலாம். இருந்ததே இரு தினசரிகள். அதில் ‘மலேசிய நண்பன்’ அதிகம் விற்பனை ஆனது. ‘தமிழ் நேசனு’க்கு இப்போது போலவே அப்போதும் பெரிய விற்பனை இல்லை. எழுதத்தொடங்கிய புதிதில் மலேசிய நண்பனில்…

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா?

மலேசியாவில் தமிழ்ப்பள்ளியின் இருப்பு குறித்து பேசுவதன் நீட்சி எப்போதுமே சர்ச்சையான ஒரு மையத்தில்தான் சென்று முடியும். சிறுபான்மை இனமான மலேசிய தமிழர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களில் ஒன்று கோவில் என்றால் மற்றது தமிழ்ப்பள்ளியாகவே எப்போதுமே பொதுபுத்தியால் நம்பப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே தொடக்கம் முதலே மொழியை வளர்க்கவும் சமுதாய போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு தளமாகவே இருந்துவந்துள்ளன. அதேபோல…