மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் ‘கறாரான இலக்கிய விமர்சனம்’, ‘தீவிர இலக்கியம்’ ஒரு எல்லைக்கு மேல் வளராமல் போனதற்கு இதுவரையில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் ‘இந்நாட்டில் எங்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லை,’ என்று எழும் குரல்களே அவற்றில் மேலதிகமானவை. இலக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எழுத்து துறைகள், கலைத்துறைகள், ஊடகத்துறை என கருத்து வெளிபாட்டை முன்வைக்கும்…
Author: விஜயலட்சுமி
மலேசியாவும் பழங்குடி கதைகளும்
“இந்தக் கதைகள்தான் எம்மக்களின் நூலகம் ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு முக்கியமான அல்லது ஈர்பான நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனதில் வளப்பமாகிய வரலாற்றை இலைகளின்மீது நினைவகமாக்கியுள்ளது. கதைகள் எங்கள் வாழ்க்கை, அவை இன்னும் வாழ்கின்றன.” கதைக்கூறல் எனும் வாய்வழி மரபை உணர்த்தும் இவ்வாசகம், உலகில் வாழும் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் ஒற்றைக் குரலாக வெளிபடுகிறது.…
பலி
செல்வி வெளியில் வராமலிருந்தது நளினிக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கமாக தூரத்தில் கார் வரும் சத்தம் கேட்டதுமே பரபரக்க வெளியில் வந்துவிடுவாள். காரிலிந்து வெடுக்கென கைப்பையை இழுத்து, அனைவரையும் முந்திக்கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைவது ஒரு வழிகாட்டியின் தோரணையை ஒத்திருக்கும். செல்விக்கு பதிலாக இன்று பணிப்பெண் அவசரகதியில் வெளிபட்டு நின்றாள், முகத்தில் கவலை ஊசலாடியது. “என்னாச்சி? ஏதும்…
க்ளிங் க்ளிங் பெண்
அந்த மாலை, வாசற்படியில் அமர்ந்தபடி வெளிநோக்கி செம்மண் சாலையையும் திரும்பி அம்மாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் சுமதி அந்த முடிவுக்கு வந்திருந்தாள். அவள் அம்மாவைப்போல் இருக்கப் போவதில்லை. ஒருபோதும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள போவதில்லை. அம்மாவைப்போல் கணவனின் வருகையை எதிர்பார்த்து முட்டாள்தனமாகக் காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை; அவன் தன்னிடம் திரும்பி வந்துவிடுவான், குடும்பத்துடன் சேர்ந்துவிடுவான் என்று நம்பி…
அறை
“பத்மா க்கா… நாந்தான் பேசறேன். எனக்கு ஒரு உதவி வேணும். நான் இப்ப அவசரமா வெளிய போக வேண்டிய சூழல். தங்கச்சிக்கு ஏதோ பிரச்சினைபோல.” “ஏம்மா? என்ன பிரச்சினை? ஏன் இங்கிருந்துகிட்டே ரகசியமா போன் செய்யற?” “உங்ககிட்ட நேரில் பேசிட்டு வெளியாவதை யாரும் பார்த்தா உங்களுத்தான் சிக்கல். மற்றதை வந்து சொல்றேன். எப்படியும் 2 மணி…
நீ ஏன் மற்ற விலங்குகளைச் செதுக்கக் கூடாது? (ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பு சிறுகதை)
ஆப்பிரிக்கர்களுக்கு மட்டுமான அந்த மருத்துவமனை நுலைவாயிலின் நேர் எதிர் அமர்ந்து அவன் மர சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருக்கிறான். வேலைபாடுகள் முடிந்த ஒரு சில சிற்பங்கள் மட்டும் அவனைச் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவன் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ஓவியன் ஒருவனின் முழுமைப்பெற்ற ஓவியங்கள் மருத்துவமனை வேலிகள் நெடுக சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அடர்த்தியான அச்சிறுநகரத்தில் கார்களின் பேரிரைச்சல்,…
குடியேறிகள்
நண்பர்களுடன் சீன டீயை குடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கடையை விட்டு வெளியேறினான். அவனது கால்கள் நிலைகொள்ளவில்லை. நடைபாதைகளில் கடந்து பழகிய கட்டடங்கள் அவனை நோக்கி சுழன்று வந்தன. அருகில், குப்பைக் குவியலை கிழறிக் கொண்டிருந்த காகமொன்று பேரிரைச்சலுடன் அதன் கூட்டை நோக்கி பறந்தது. அவன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, கிருஷ்ணன் தனக்குள் பேசிக்கொண்டான். நாங்கள் ஒருவருக்கொருவர்…
ஆக்கத்தின் அசல்தன்மையும் அது தொடர்பான கட்டுக் கதைகளும் (Originality preference & myth)
இணையப் பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் தகவல் மூலங்களைக் கண்டறியும் வழிகளையும், பயன்பாட்டையும் மாற்றிவிட்டிருக்கின்றது. தகவல்களை எளிதாக பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லுதல், எளிதாகக் கண்டடைந்து பயன்படுத்துதல் என, அடிப்படையில் இவ்விணையப் பயன்பாடு நன்மைகளைக் கொண்டு வருவதாக இருந்தாலும்கூட கற்றலைத் தாமதப்படுத்துதல், ஆய்வுகளில் நேர்மையற்ற தன்மையை உருவாக்குதல் என சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதையும் காண…
இனி நட்பாய் தொடரட்டும் : ஒரு வாசகப் பார்வை
என் வாசிப்பனுபவத்தில் படைப்பிலக்கியத்தை இரு கூறுகளாகப் பகுத்துப் பார்க்கிறேன். ஒன்று, படிப்பவர்கள் விரும்புவதைப் படைப்பது. மற்றது, படைப்பு படிப்பவர்களை விரும்ப வைப்பது. இவ்விரண்டில் முதலாவது எளிது; இரண்டாவது சற்றே கடினம். இனி ‘நட்பாய் தொடரட்டும்’ எனும் முதல் சிறுகதை நூலின்வழி தனது சிறுகதைகள் அனைத்தும் மிகவும் எளிய முறையில் வாசிப்பவர்களுக்கு எந்தவொரு சிக்கலுமின்றி புரிந்து கொள்ளும்…
முன்னுரை
ஒரு நூலினை தனித்துவம் மிக்கதாகக் காட்ட வடிவமைப்பு, படங்கள், வண்ணம், அன்பளிப்பு, விளம்பரம் எனப் பல்வேறு சந்தைப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை நூல், நூல் அல்லாதவைகளுக்கும் (எழுத்துக் குப்பைகளுக்கும்) ஒரே மாதிரியாகப் பயன்படுவது எல்லாக் காலங்களிலும் தவிர்க்க முடியாதது. சில சமயங்களில் எழுத்துக் குப்பைகளுக்குக் கிடைத்துவிடும் வெளிச்சம் தரமான நூல்களுக்குக் காலம் தாழ்த்தியோ அல்லது கடைசிவரை…
தகவல் சுழற்சி (Information Cycle)
தகவல் தேடல் வேட்டையை எங்கிருந்து தொடங்குவது? தகவல்கள் உற்பத்தி செய்யப்படும் முறை, பகிரப்படும் விதம் மற்றும் தகவல்களில் ஏற்படக்கூடிய சாத்தியமான மாற்றங்களை விளக்குவதற்கு ‘தகவல் சுழற்சி’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. செய்தியாக மாறக்கூடிய தன்மை உடைய நிகழ்வுகள் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன்மூலம் நமக்குத் தேவையான தகவல்களை அடையாளம் காணவும்…
புதிய முயற்சி : புலனக்குழு இலக்கிய உரையாடல் – 1
‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனும் கருப்பொருளின்கீழ் இவ்வாண்டு நடைபெறவுள்ள வல்லினம் கலை இலக்கிய விழா 7, மூத்த படைப்பாளர்களை ஆவணப்படுத்துதல்; இளம் படைப்பாளர்களை அடையாளம் காணுதல் எனும் இரு முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படுகின்றது. அதையொட்டி வல்லினம் சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்புகள் ஜூன்மாதம் தொடங்கி அச்சு, மின் ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்தது அனைவரும் அறிந்ததே. வெறும் போட்டிகள்…
ஆஸ்திரேலியப் பூர்வ பழங்குடிகளின் கனவு காலக் கதைகள்
ஆஸ்திரேலியப் பழங்குடிச் சமூகம் ஆஸ்திரேலிய பூர்வ பழங்குடிச் சமூகம் இன்றளவும் நிலைத்திருக்கும் உலகின் மிகத்தொன்மையான சமூகமாகத் திகழ்கின்றது. ஆஸ்திரேலியக் கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழி அப்பழங்குடிகளின் வரலாறு 40,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கப்படுகிறது. மேலும், சில ஆதாரங்கள் 60,000 ஆண்டுகள் எனவும் சான்று பகர்கின்றன. இவர்களது பூர்வீகம் தென்னிந்திய மற்றும் இலங்கையைச் சார்ந்த இந்திய …
இணைய வளங்களை மதிப்பீடு செய்தல்
ஏன் இணையவளங்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்கிற கேள்வியை முன்வைப்பதன் வழி அதன் இன்றியமையாத் தேவையை புரிந்து கொள்ளலாம். நம்பகத்தன்மையற்ற தரவுகளும் தரவுத்தளங்களும் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் காட்டப்படும் தரவுகளைப்போல் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் தரமானதாக (Quality) அல்லது துல்லியத்தன்மை (Accuracy) கொண்டதாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அவை எந்தவொரு கட்டுப்பாடும் கண்காணிப்பும்…
ஃபெர்னான்டோ சொரன்டினோ சிறுகதைகள்
தலைப்பு : பீடை ஆங்கில மொழியாக்கம் : மிஸ்ஸேல் மிக்கேய் எயின்ஸ்வெர்த் நவம்பர் எட்டு என் பிறந்தநாள். முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் உரையாடி என் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதாக திட்டமிருந்தது. இது நடக்கும்போது காலை பத்து மணி இருக்கும். புளோரிடாவுக்கும் கோர்டோபாவுக்குமான மூலையில், அறுபது வயதுக்குட்பட்ட ஒருவரை நிறுத்தினேன். வலதுகையில் ஒரு பெட்டியுடன் மிக…