Author: அ.பாண்டியன்

இருமொழி பாடத்திட்ட (DLP) விவாதம் – ஓர் எதிர்வினை

நண்பர் அனுப்பியிருந்த டிஎல்பி ((DLP)  விவாதக் காணொளியை  (‘நடப்பது என்ன?’) ஒரு மணி நேரம் செலவு செய்து பார்த்து முடித்தேன். உண்மையில், இருமொழித் திட்டம் மீதான விவாதங்கள் 2015 முதலே மிக விரிவாக நடைபெற்றிருக்க வேண்டும். டிஎல்பி திட்டம் குறித்த முழுத்தெளிவும் பெற்றோருக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மிக சொற்பமான அமைப்புகளும்…

ஷாஹானுன் அமாட் : அதிகாரங்களை நோக்கிய நுண் பார்வையாளர்

இலக்கியம் என்பது ஓர் இலக்கை நோக்கமாக வைத்து மொழியின் துணையுடன் இயங்குதல் என்பது பொதுப்படையான விளக்கம்தான். இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைக் கணிப்பது அவ்வளவு எளிதன்று. ஒரு செறிவான இலக்கியப் படைப்புக்குள் சூல்கொண்டிருக்கும் மையத்தைத் தொடுவதற்கு வாசகனுக்கு வாசிப்புப் பயிற்சி மிக அவசியமாகிறது. இலக்கிய விமர்சனம் மட்டுமே இப்பணியைக் கொஞ்சம் சுலபமாக்கித்…

வல்லினம் போட்டி சிறுகதைகள்- ஒரு பார்வை

எட்டாவது வல்லினம் கலை இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு மொத்தம் 137 கதைகள் வந்திருந்தன. பழையவர்கள், புதியவர்கள் என்று பலரும் இப்போட்டியில் முனைப்புடன் கலந்து கொண்டிருந்தனர். கதைகளை அஞ்சலிலும் மின்னஞ்சலிலும் அனுப்பியிருந்தனர்.  எல்லா கதைகளையும் தொகுத்து  படைப்பாளர் பெயரினை நீக்கி எண்ணென்று பேரிட்டு வாசிக்கத் தொடங்கினோம். முதல் சுற்று வாசிப்பில் கதையாக இருந்த…

உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்.

தத்துவ நூல்கள் எனக்கு போதை தரக்கூடியவை. தத்துவக் கருத்துகள் மிக எளிமையாக புரிவது போல் ஆரம்பித்து  சற்றைக்கெல்லாம் எதுவுமே புரியாத நிலையில் என்னை விட்டுவிடக்கூடியவை. இருப்பவை இல்லாதவைகளாகி விடும்; இல்லாதவை இருப்பவைகளாகிவிடும். ஆயினும் அந்தப் புரிதலும் புரியாமையும் கலவையாகி ஒரு போதையாக மனதில் வியாபித்து நிற்கும். மாலை நேரத்து வெயிலில் மினுமினுக்கும் மழைத்துளி போல அவை…

விமர்சனங்களை விமர்சித்தல்

இலக்கிய விமர்சனம் என்று ஆரம்பித்தாலே அது சர்ச்சையிலும் சண்டையிலும் மனக்கசப்பிலும்தான் சென்று முடிகிறது. தேசம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து இந்தநிலை கலை இலக்கியச் சூழலில் பொதுவானதாகவே இருக்கிறது. ஆனாலும் விமர்சனம் இல்லாத கலையும் இலக்கியமும் உயிர்ப்பற்றதாகிவிடும் என்பதனால் தொடர்ந்து விமர்சனங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விமர்சனம் என்பது என்ன? அதை யார் செய்யவேண்டும்?…

புகை சூழ் உலகு

நான் கல்லூரியில் சேர்ந்த அதே ஆண்டில் ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதைய சூழலில் புகைத்தலுக்கு எதிரான இயக்கம் இத்தனை தீவிரமாக இல்லை. பொது இடத்தில் புகைக்கத் தடை, சிகரெட் விற்பனை கட்டுப்பாடு, வயதுகட்டுப்பாடு போன்றவை இல்லை. என்னைப்போன்றே ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்கத்தொடங்கிய பலர்தான் பிறகு பெட்டி பெட்டியாக ஊதித்தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நான்…

மஹாத்மன் சிறுகதைகள் : சுழற்சியில் இருந்து வெளியேறுதல்

பெருநகர வாழ்வு என்பது பெரும் பரபரப்பை தன் அடையாளமாக ஆக்கிக்கொண்டுள்ளது. காலை முதல் இரவுவரை நகர மக்கள் தங்கள் வாழ்கையைப் பரபரப்பாக ஆக்கிக் கொள்வதற்குப் பல காரணங்களை எப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். நகர வாழ்வில் யாரும் யாரையும் நின்று கவனிக்க நேரமிருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையைவிட வேகமாக ஓடக்கூடிய வித்தைகளை நகரமக்கள் கற்றுவைத்திருக்கிறார்கள். ஆயினும்,…

சு. யுவராஜனின் அல்ட்ராமேன் சிறுகதை தொகுப்பு – ஒரு பார்வை

மலேசிய இலக்கிய பரப்பில் 2000த்தாம் ஆண்டுகளில் முனைப்புடன் எழுத வந்த இளைஞர்கள் சிலரில் சு.யுவராஜன் குறிப்பிடத்தக்க சிறுகதைப் படைப்பாளியாவார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலத்தில் இருந்து எழுதிவருவதோடு தேசிய அளவில் நடத்தப்பட்ட பல சிறுகதைப் போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறார். ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக எழுதுவதில் இருந்து ஒதுங்கி இருந்த சு. யுவராஜன் இந்த ஆண்டு தனது…

ஆசிரியர்களின் பணிச்சுமையும் அதன் அரசியலும்!

2016-ஆம் ஆண்டு பள்ளித்தவணை தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்துவிட்டன. ஆசிரியர்கள் ஓட்டப்பந்தய வீரர்கள் போல் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு குறுகியதூர ஓட்டப்பந்தயம் போல் பரபரப்பான சூழலில் அவர்கள் வாழ்க்கை மின்னலாய் ஓடி மறைகிறது. அந்தப் பரபரப்பில் அவர்கள் பெறுவதும் இழப்பதும் கவனிக்கப்படாமல் மறைந்து போகிறது. அவற்றில், வாழ்க்கையின் பல அற்புதத் தருணங்களும் கரைந்துபோகின்றன. மீட்டெடுக்க…

நகையாயுதம்

மக்கள் கலைகள் அனைத்திலும் உள்ள பொதுத்தன்மை அதன் ஊடாக அமைந்திருக்கும் நகைச்சுவைக் கூறாகும். நகைச்சுவையின் வழி உலகமக்களைக் கவரவும் ஒன்றுதிரட்டவும் முடியும். நகைச்சுவை, மக்களின் மனோவியலை மென்மைப்படுத்துகிறது. மனக்கட்டுகளை அவிழ்த்து மனதை இலகுவாக்கி உணர்ச்சிகளைச் சமன்படுத்துகிறது. நகைச்சுவை என்பது ஒரு சொல்லில் இருந்தோ ஒரு அசைவில் இருந்தோகூட வெளிப்படலாம். நமக்கு எது நகைப்பை உருவாக்குகிறது என்பது…

தன்நெஞ்சறிவது…

அனுபவம் 1   “அன்று என்னைப் பார்க்க ஒரு இந்தியப் பெண் என் அலுவலகத்திற்கு வந்தார்.அவர் மிகவும் அழகாக இருந்தார். என் எதிரில் அமர்ந்தவர் சில புகார்களைக் கூறினார். பின்னர் பேசிக் கொண்டிருக்கும்போது அவர், “நான் நல்ல சாதிக்காரி, துவான். எங்க குடும்பமே உயர்ந்த ஜாதிக்காரங்கதான். ஆனா இங்க சுற்றுவட்டாரத்துல, அந்த பிளாட்டுல இருக்குறவுங்க முக்காவாசி…

சலமண்டர்

[ஜப்பானிய நவீன எழுத்தாளர்களின் முன்னோடி, மசுஜி ஈபுசே 1919ல் – எழுதி மிகவும் புகழ்பெற்ற கதை ‘சலமண்டர்’. உலகின் பல மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களற்ற கதாபாத்திரங்களின் வழியும் சூழல்களின் வழியும் மனித வாழ்வின் அழுத்தங்களையும் உணர்வு போராட்டங்களையும் ‘சலமண்டர்’ எள்ளலோடு வெளிப்படுத்துகிறது.]   சலமண்டர் கடுஞ் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அது தன் வசிப்பிடத்தில் இருந்து வெளியேர…

இலக்கியத்தின் வழி தேசிய அடையாளம்

இந்த மாதம் எதிர்ப்பாராவிதமாக ‘இலக்கிய மாதமாக’ அமைந்து விட்டது.  நவம்பர் 1, வல்லினம் கலை இலக்கிய விழாவும் அதைத் தொடர்ந்து 6,7-ல் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்பும் சிறப்பாக அமைந்தன. அனைத்துலக தரம் வாய்ந்த சிங்கப்பூர் இலக்கிய விழாவில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் மிக அறிதாகவே கிடைப்பதாக அறிகிறேன். ஆக கடைசியாக இருபத்து நான்கு…

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை

இன்றைய அறிவியல் காலத்தில், உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு நவீனத் தொழில்நுட்பம் உடனே உலகம் முழுவதும் பரவிப் புகழ்பெற்று மக்கள் மனதில் நிலைபெறுகிறது. அடுத்த கட்டமாக, உலகநாடுகள் போட்டியிட்டுக் கொண்டு அதே தொழில்நுட்பத்தை மென்மேலும் ஆய்வு செய்யவும் செம்மைப்படுத்தவும் முனைகின்றன. அதோடு, மேலும் பல சிறப்பம்சங்களை இணைத்து அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.…

சீ. முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்

மலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதோடு மலேசிய எழுத்துலகில் தனித்துவம் பெற்ற நாவலாகவும் அது விளங்குகிறது . சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீ.முவின் குறுநாவல் தொகுப்பு…