
இந்தத் தொகுப்பில் பூனையைப் பற்றிய ஒரு கதையும் இல்லையே என்று ஷீயிங் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த அவள் முகத்தில் எங்காவது சிரிப்பு ஒளிந்திருக்கிறதாக என்று கூர்ந்து பார்த்தாள் அனா. வழக்கத்திற்கு மாறாக அதிகாரியின் தோரணைதான் தெரிந்தது. “குழந்தைப் பிறப்பு குறைவாக இருக்கும் நாட்டில் பூனைகள் அதிகமாக இருக்கும் என்று ஓர் ஆய்வில் படித்த நினைவுள்ளது. நாய்களைவிட…










