
நவீனின் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு மூன்று வகையான கவிதைகளைப் பிரதானமாகப் பேசுகின்றன. பிரிவு குறித்தான ஏக்கம், மாயா என்ற சிறு குழந்தையின் உலகம், அலைக்கழிக்கப்படும் சமகால வாழ்வு. பொதுவாகக் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் அந்தத் தொகுப்பிலிருந்து கவிதைகளை மேற்கோள் எடுத்துக்காட்டி எழுதுவது உ.வே.சா காலத்தில் தொடங்கிய வழக்கம். நான் அவற்றிலிருந்து விடுபடலாம் எனக் கருதுகிறேன்.…