Tag: கரிப்புத் துளிகள்

கரிப்புத் துளிகள்: நகரமயமாதலில் பலியாகும் எலிகள்

முன்னாள் தமிழக முதல்வர் சி என் அண்ணாதுரை ஒருமுறை (1965ல்) மலேசியா வந்த போது ‘பிற நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள், ஆனால் மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள்’ என்று சொன்னார். அப்போது மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ‘அண்ணாதுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் நல்லாத்தான் இருக்கோம்போல‘ என்ற எண்ணங்களை விதைத்துவிட்டுச் சென்றவை அவ்வரிகள். ஏனெனில் அதை…

கரிப்புத் துளிகள் : கட்டுமானங்களுக்கு அடியில் கொதிக்கும் உப்பு

பலமுறை பினாங்கு பாலத்தைக் கடந்திருக்கிறேன். அதன் கட்டுமானமும் அழகும் பெரிதும் வசீகரிக்கக்கூடியதுதான். ஆனால் இம்முறை ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவிற்குச் செல்கையில், பினாங்கு பாலத்தைக் கடக்கும்போது இனம்புரியாததொரு படபடப்பும் சேர்ந்து கொண்டது. கடலலையில் கிருஷ்ணன், துரைசாமியின் நினைவுகளும் டானு விழுந்த ஐம்பத்தாறாவது தூணும் துரத்திக் கொண்டிருந்தன. ஓரிரு தினங்களுக்கு முன் படித்து முடித்த அ. பாண்டியனின்…

கரிப்புத் துளிகள்: மானுட அகம்பாவமும் அகூபாராவும்

மனிதனுக்குத் தனிச்சொத்துகள் மீது ஆர்வம் எழுந்தபோது, அது பேராசையாக வளர்ந்து லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் எதையும் செய்யலாம் எனும் நிலை எழுந்தது. இயற்கை வளங்கள் அப்படித்தான் தனி மனிதர்களின் உடமைகளாகப்பட்டு சுரண்டப்பட்டன. சுயத் தேவை, பேராசை, பொருளாதாரம், அதிகாரம் போன்றவற்றை நிலைநாட்டிக்கொள்ளவதற்காக அழிக்கப்பட்டு வருகின்ற இயற்கை வளங்களோடு எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நந்தைச் சுவடுகளாக தத்தம் தடயங்களை…

மலேசியாவின் இரு சமகால நாவல்கள்: மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீன் & அ. பாண்டியன்

2023 இல் மலேசியாவில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு நாவல்களான ‘தாரா’ & ‘கரிப்புத் துளிகள்’ குறித்த கலந்துரையாடல். மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீனையும், அ. பாண்டியனையும் நேரில் சந்திக்க வாருங்கள். எழுத்தாளர்கள் குறிப்பு: ம.நவீன் ம.நவீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை…

‘கரிப்புத் துளிகள்’ நாவலில் ஒரு பகுதி

(மிக விரைவில் வெளியீடு காணப்போகும் எழுத்தாளர் அ. பாண்டியன் எழுதிய கரிப்புத் துளிகள் நாவலின் ஒரு பகுதி) ஐயாவுவிடம் மறுபடியும் மறுபடியும் தேவதைகள் பற்றிக் கேட்பது சிறு பிள்ளைபோல இருக்கும் என்று தயங்கினான். ஆனாலும் மோதிச் சிதறும் அலையோசையும், நிலவொளி படிந்த கடற்கரையும், பெரு நிலவும், எங்கிருந்தோ கரையேறி வந்துகொண்டிருக்கும் கடலாமைகளும் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்தன.…